Posts

Showing posts from September, 2024

பயம்

Image

விழா

Image
வேலூர் மாவட்டம் முழுவதும் நீர்நிலை பகுதிகள், தரிசு நிலங்களில் 3 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வை காட்பாடி கரசமங்கலம் சிங்காரெட்டியூர் ஈசுவரன் மலை அருகே மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.  மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஈசுவரன் மலை முழுவதும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் நிகழ்வையும் அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். - Dinesh Saravanan

தீக்குளிக்க முயற்சி

Image
🔸  *திருப்பத்தூர் மாவட்டம்* *ஆம்பூர் அருகே தனிநபர் ஒருவருக்காக  வழிப்பாதை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகள்* *வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.*  👇

உன் வாழ்க்கை உன் கையில்

Image
29.9.2024 ஞாயிற்றுக்கிழமை அன்பான காலை வணக்கம் இன்றைய சிந்தனை :.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.: உன் வாழ்க்கை உன் கையில்! :.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.: வெற்றி பெறுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். சரி வெற்றி பெற என்னென செய்ய வேண்டும்? தொடர்ந்து காண்போம்.. நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கதைதான் வினாயகப் பெருமான் ஞானப்பழம் பெற்ற கதை.  உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் என்ற அம்மையப்பர் கட்டளையின் அடிப்படையில் முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்ப வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' என்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். விநாயகரை வெற்றி கொண்டு உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வேன் என்று வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது.  அண்ணனோ தம்பியைப் பின் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வரிந்து கட்டாமல் வேறு வழி யோசித்ததன் பலன் -பழத்தைக் கைப்பற்றினார் விநாயகர். நிச்சயமாக  முருகனை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாக முருகன்தான் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் என்ற வேகத்...

ரகு

Image
🙏 *ரகுவீரகத்யம்*   🌷ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித! ப்ரணத ஜந விமத விமதந துர்லளித தோர்லளித! தநுதர விஸிக விதாடந விகடித விஸராரு ஸராரு தாடகா தாடகேய ஜட - கிர ஸகல - தரஜடில நட பதி - மகுட நடந - படு விபுத - ஸரித் - அதி - பஹுள . மது - கலந. லலித - பத நளிந - ரஜ - உப - ம்ருதித - நிஜவ்ருஜிநஜஹதுபல - தநு - ருசிர - பரம - முநி வரயுவதி நுத! குஸிக - ஸுதகதித விதித நவ விவித கத!  மைதில நகர ஸுலோசநா லோசந சகோர சந்த்ர!🌷 *ஸ்ரீ வேதாந்ததேசிகர்*  🙏

தெரியுமா

Image

தந்தைக்கு கோவில் கட்டிய சமூக சேவகர் மணிமாறன்

Image
தந்தைக்கு  கோவில் கட்டி வணங்கும்  சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை; செப்.29 அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்னை ,தந்தைக்கு மற்ற உறவுகள் ஈடாகாது என்பது  நம் முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய காலகட்டம் முற்றிலும் மாறிவிட்டது. பெற்றெடுத்த தாய்+ தந்தையை அருகில் வைத்து பார்க்க மனமில்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடும் அவலம் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்  அரங்கேறி வருகிறது.  இந்த கடினமான காலகட்டத்திலும் தாய் தந்தையின் மீது அன்பு கொண்ட மகன்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு இளைஞர், மறைந்த தனது தந்தைக்கு சிவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார். அது பற்றிய விவரங்களை காண்போமா!  திருவண்ணாமலை மாவட்டத்தில் தலையாம் பள்ளம் என்ற கிராமம் உள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அங்குள்ள ஒரு விவசாய குடும்பத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு மகனாக பிறந்தார் பாண்டுரெங்கன். 3.4 1955 ஆம் ஆண்டு பிறந்த பாண்டுரெங்கன். அவர் வசித்த கிராமத்தில் நிலம் வாங்கி விவசாய தொழிலில் ஈடு...

சங்கம் அமைக்க உத்தரவு

Image
*வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:*  அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தை உருவாக்கி, பதிவு செய்வது அவசியமாகும். இச்சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்களாவது இருத்தல் வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும்.  பழைய கட்டிங்களை மறுகட்டுமானம் செய்ய குடியிருப்பில் இருக்கும் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். கட்டிடத்தில் இருந்து யாரேனும் வெளியேற மறுத்தால் அந்த நபரை போலீஸ் துணையுடன் சங்கம் வெளியேற்றலாம். விதிகளின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்குதல் வேண்டும். விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறை அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள். குடியிருப்போரை தொல்லை செய்யும் வகையில் ஒலி எழுப்பக் கூடாது, உள்ளாட்சி விதிமுறைகளு...

பென்சன் பெறுபவர்கள் கவனத்திற்கு

Image
*ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான செய்தி!*   *💁‍♂️ ஓய்வூதியம் பெறுவோர் எதிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கான சான்றுகளை வழங்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் மத்திய அரசு வேறுபட்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது.*  ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் உயிர்வாழ்வதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை என்றால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.  ஆனால் இப்போது ஓய்வூதியம் பெறுவோர் இந்த சிரமத்திலிருந்து விடுபடுவார்கள்.  ஓய்வூதியம் பெறுவோருக்கு முகத்தை அடையாளம் காணும் முறை என்ற உயர் தொழில்நுட்ப தொழில்நுட்பத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  புதிய தொழில்நுட்பத்தின்படி, ஓய்வூதியம் பெறுபவரின் முகமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு சான்றாக இருக்கும்.   புதிய தொழில்நுட்பத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.  *முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் என்றால் என்ன?*  இதன்படி வங்கி உயிர்வாழ்வதற்கான ஆதாரத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டியதில்லை.  வங்கி அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களின் முகங்களை மொபைல் செயலி மூலம் சரிபார்ப்பார்கள்...

கேள்வியும் நானே பதிலும் நானே

Image
*வெ. இறையன்பு I.A.S. அவர்கள் எழுதிய  கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து.* 1. *எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?* நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்! 2. *கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?* கோபம் வருகிறபோது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள் 3. *நமக்கு நாமே எதிரியாவது எப்போது?* உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம். 4. *மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?* தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது! 5. *குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?* இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை... 6. *நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?* மௌனத்தை… 7. *அன்பு முக்கியமா… அறம் மு...

உண்டியல் காணிக்கை

Image
🔸 *திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை 3 கோடியே 5லட்சத்து 96 ஆயிரத்து 85 ரூபாய், தங்கம் 388 கிராம், வெள்ளி 1,652 கிலோ பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.*

டெங்கு

Image
Dengue Awareness Programe Hospital Infection Control Committee Christian Medical College Vellore Dengue is a viral infection transmitted primarily by Aedes mosquitoes, particularly Aedes aegypti. Common in tropical and subtropical climates, it poses a significant public health challenge in many regions. Symptoms typically appear 4-10 days after infection and can range from mild fever, headache, and joint pain to severe manifestations, such as dengue hemorrhagic fever and dengue shock syndrome, which can be life-threatening. Preventive measures focus on mosquito control and personal protection, such as using insect repellent, wearing long sleeves, and eliminating standing water where mosquitoes breed. While there is no specific antiviral treatment for dengue, supportive care, including hydration and pain management, is essential. Vaccines have been developed but are recommended for those with prior dengue infection. Awareness and education are crucial in reducing the inciden...

VIT அறிவுசார் விழா

Image
வேலூர்      27-9-24 இளைஞர்கள் வரும் காலம் செயற்கை நுன்னறிவு காலம் எதிர்காலமும் அது தான் என்பதை உணர்ந்து தங்களின் தனித்திறனை வளர்த்துகொள்ள வேண்டும்  -  நாட்டின் தொழில் வளர்ச்சியும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது எதிர்காலத்தில் செயற்கை நுன்னறிவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் - வேலூர் வி.ஐடி பல்கலைக்கழகத்தில் அறிவுசார் திருவிழாவில் டேனியலி  இந்தியா லிமிடெட் நிறுவனங்களின் துணதலைவர் மனோரஞ்சன் ராம் பேச்சு - 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த  625 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 27  ஆயிரம்          மாணவ,மாணவிகள் பங்கேற்பு - 200 புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது  __________________________________________________________________________________________         வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் (வி.ஐடி ) கிராவிட்டாஸ் எனப்படும் அறிவுசார் திருவிழாவானது நடந்தது இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதன்...

விழா

Image
பதிவு எண் 377 / 02                                                         தொலைபேசி எண். 9443345667 தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் TAMILNADU VISWAKARMA FRIENDS WELFARE ASSOCIATION பதிவு அலுவலகம் : எண்.25, இரண்டாவது குறுக்குத்தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காந்திநகர், வேலூர் – 632006   வேலூர் ஸ்ரீ வீரபிரம்மங்கார் மடத்தில் நவராத்திரி உற்சவ விழாக்குழு கூட்டம் &&&&&&& வேலூர் பேரிப்பேட்டை விஸ்வகர்ம ஸ்ரீ வீரபிரம்மங்கார் மடத்தில் 55 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடத்துவதற்கான விழாக்குழுவின் கூட்டம் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நவராத்திரி உற்சவ விழா குழு தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கனிர்  செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  பொருளாளர் எல்.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டடிற்கான வரவு செலவு அறிக்கை சமர்பித்து பேசினார். விழாக்குழு உறப்பினர்கள் எஸ்.லோகநாதன், பி.செ...

வாபஸ்

Image
*ஆசிரியர் பணி இடைநீக்கம் இரத்து செய்ய கோரி போராட்டம்* மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ் &&&&&&&   வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் 4500 ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் நடைபெற்றது. மாலை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.மணிமொழி, முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஆ.ஜோசப் அன்னையா அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர் ஜெயக்குமார்  ஜி.டி.பாபு, எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி, ஜெயகாந்தன், தலைமையாசிரியர்கள் எம்.சினேகலதா, பாஸ்கர், எஸ...

கூட்டம்

Image
அனைத்து வகை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலூர் மாவட்டம் Federation of All Teachers Association, Vellore district ஆசிரியர் இல்லம்,பில்டர் பெட் சாலை, வேலூர்-632001 பத்திரிகை செய்தி                                                                                      *மாணவர் செயலுக்காக ஆசிரியர் பணி இடைநீக்கம் கண்டித்து* *கருப்பு பட்டை அணிந்து பணிசெய்தல், தொடர் போராட்டம்* *அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு* &&&&&&&   வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள...

ஆர்பாட்டம்

Image
*தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி* *வேலூரில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* --------------------- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் பழைய  ஓய்வூதிய  திட்டம்  நடைமுறை படுத்த  கோருதல்  21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம ஊதவியாளர்கள் ஊர்பற நூலகர்கள் உள்ளிட்ட 3.5 இலட்சம் ஊழிகளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோருதல்  உள்ளிட்ட  11 அம்ச  கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட உரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் ட்டி.,.டி.ஜோஷி, தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் பா.வேலு வரவேற்று பேசினார்.  தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு...

சுவாமி வீதி உலா

Image
விஸ்வகர்மா தினத்தினை முன்னிட்டு  வேலூரில் விஸ்வபிரம்ம சுவாமி வீதி உலா விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானச்சாரிய சுவாமிகள் தொடக்கி வைத்தார் வேலூர் பேரிப்பேட்டை விஸ்வகர்ம சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வளாகத்தில் விஸ்வபிரம்ம தின விழா மற்றும் விஸ்வ பிரம்ம மஹா யாகம் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் வி.விசுவநாதன் ஆச்சாரி அவைத் தலைவர் எம்.ரவி செயலாளர் ஜெ. சீனிவாசன் பொருளாளர் கே.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  வேலூர் மாநகர தலைவர் எஸ்.சக்திவேல் செயலாளர் எஸ்.அச்சுதன் பொருளாளர் எஸ்.யுவராஜ் மாநில செயலாளர் எம்.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய அர்ச்சகர் ஜோதி முருகாச்சாரியார் தலைமையில் கே.கிருபாகரன், பி.ராவனேஸ்வரன், பி.பார்த்திபன், எம்.தியாகராஜன், ஆர்.சீனிவாசன் ஆகிய அர்ச்சகர்கள் அபிஷேகமும் ஆராதனையும் செய்தனர்.  அலங்கார திலகம் என்.ராமு ஆச்சாரி சுவாமிக்கு அலங்காரம் செய்து வைத்தார். சீனந்தல் மடாலயம் விஸ்வகர்மா ஜெகத்குரு 65 ஆவது குரு மகா சன்னிதா...

5 ஆயிரம் பேருக்கு வேலை முதல்வர் அடிக்கல் நாட்டினார்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   வேலூர்    28-9-24 பனப்பாக்கத்தில்சிப்காட் தொழிற்பூங்காவில்  ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் டாடா கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் -   வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இந்தியாவின் பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்த சமூக நீதி வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் போன்ற ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் தனித்து நிற்கிறது முதல்வர் ஸ்டாலின் பேச்சு  _______________________________________________      ராணிப்பேட்டைமாவட்டம்,பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 நபர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் டாடா,கார் தொழிற்சாலைக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்லை நாட்டினார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள்ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்   தமிழ்நாட...

பக்குவம்

Image
கருத்து சொல்வதை விட கடந்து செல்வதற்கே அதிக பக்குவம் தேவைப்படுகிறது. முழு பக்குவம் என்பது விரும்புவது கிடைக்காவிட்டாலும் விரக்தியடையாமல் இருப்பது. விவரிக்க தெரியாமல் விவாதிப்பதால் தான் மனக்கசப்புகள் ஏற்ப்பட்டு விடுகிறது. விவாதம் செய்வதை விட விலகிச் செல்வதே மேல். உங்களைப் புரிந்து கொள்ளாதவருக்கு மத்தியில். வெறுப்புடன் இருப்பவர்களால் குறைகளைத் தேட முடியுமே தவிர நிறைகளைக் காண முடியாது. குடை கூட பாரம்தான்.மழைக்குப் பின்.    🙏🏽 *இனிய காலை வணக்கம் நண்பர்களே* 🙏🏽

திராட்சை

Image
இன்றைய தத்துவம் திராட்சை என்ன விலை என்று கேட்டேன்?   கிலோ 200 ரூபாய் என்றார் கடைக்காரர். பழக் கூடையில் உதிர்ந்து கிடந்த திராட்சைகளை பார்த்து கேட்டேன். கிலோ 100 ரூபாய் என்றார்.   இரண்டும் ஒரே ரகம் எனும் போது ஏன் இந்த வித்தியாசம்? கொத்தாக இருப்பதால் விலை அதிகம். உதிர்ந்ததை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் விலை குறைவு என்றார்.   "சேர்ந்திருந்தால் மதிப்பு உயரும்; பிரிந்திருந்தால் மதிப்பு குறையும்" என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியது திராட்சை..!  #படித்ததில்பிடித்தது

அழைப்பு

Image
அக்டோபர் 2 கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அண்ணன் எழுச்சி தலைவர் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு இன்று 27/09/2024 காலை 10மணி நாச்சர்குப்பம் ஊராட்சி 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் துண்டறிக்கை கொடுத்த போது தலைமை  மாவட்ட செயலாளர் சி ஓம் பிரகாசம் தலைமையில் கிராமம் பெண்களை சந்தித்து மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு  துண்டறிக்கை கொடுத்தபோது உடன்  மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிறுத்தை சந்தர்  மகளிர் மாவட்ட செயலாளர் இயேசுமேரி, மாதனூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன்,  வாணியம்பாடி மகளிர் நகர செயலாளர் ஷர்மிளா பெரியாங்குப்பம் முகாம் பொறுப்பாளர் பிரேம்குமார், ஆலங்காயம் சிறப்பு  பேரூராட்சி செயலாளர் தமிழ்துறை  நாட்றம்பள்ளி வடக்கு ஒன்றிய பொருளாளர் கந்தன்  மாதனூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி பி பழனி  ஆம்பூர் நகர பொறுப்பாளர் ராஜ் தொழிலாளர் விடுதலை முன்னணி தொகுதி துணை அமைப்பாளர் ரவிக்குமார்  இளைஞரத்தி எழுச்சி பாசறை நகர பொறுப்பாளர் மாறன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டறிக்கை...

புத்தகம் வேண்டுமா

Image
A. தினகரன்  செல்

ஆர்பாட்டம்

Image
தொடகக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பினர் அடையாள வேலை நிறுத்தம் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் &&&&&&   தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பினர் 234 அரசாணை இரத்து செய்ய கோருதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த கோருதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல், முடக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க கோருதல் உள்ளிட்ட  31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழ்நாட்டின் தொடக்க கல்வியை பாதுகாக்க கோரியும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.  இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு டிடோஜாக் பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சகேயு சத்தியுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஜோசப் அன்னையா,  எம்.குப்புராமன், அல்போன்ஸ்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்...