Posts

Showing posts from October, 2025

மத்திய அமைச்சர் பேட்டி

Image
வேலூர்      25-10-25    தமிழகத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் நிதி உதவி திட்டத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது .எனவே தமிழக அரசு தகுதியான விவசாயிகளின் பட்டியலை தயாரித்து உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு நாளை கடிதம் எழுத இருப்பதாகமத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  சிவராஜ் சிங் சௌஹான்  பேச்சு  -      நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு காரணம் என கூறுவதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்யவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேட்டி     வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், இன்று மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர்   சிவராஜ் சிங் சௌஹான்  விவசாயிகளுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் பங்கேற்றார்.முன்னதாக இயற்கை உரங்கள், பாரம்பரிய நெல் வகை ரகங்கள் .இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் வேளாண் கருவிகள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.பின...

சண்டி யாகம்

Image
வேலூர்         அரியூர் நாராயணி தங்கக்கோவிலில் சண்டியாகம் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்று வழிபாடு  ____________________________________       வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள நாராயணி தங்க கோவிலில் இன்று உலகம் அமைதியாகவும் நலமுடன் வாழவும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும் இயற்கை வளங்கள் சிறக்கவும் வேண்டி தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் சண்டியாகமானது நடைபெற்றது இதில் மத்திய வேளாண்மை உழவர் நலன் துறை  அமைச்சர் சிவராஜ்  சிங் சௌஹான் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்  அவருக்கு புரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்இந்த யாகத்தில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்  மேலும் இச்சிறப்பு யாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மூலிகைகள் மூலிகை வகைகள் பழங்கள் பட்சனங்கள் யாகத்தில் இட்டு வழிபாடு செய்தனர் மேலும் தங்ககோவிலில் சாந்தி மண்டபத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்

மழை அவதி

Image
கழிஞ்சூர் ஏரி உபரி நீர் சாலைகளில் புகுந்ததால்  வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி  வேலூர்,ஆக். ஆந்திராவில் நீர் பிடிப்பு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலம் பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதன் கீழ் உள்ள ராம்சாகர் ஏறி நிரம்பியது.  ராம்சாகர் ஏரியிலிருந்து உபரணி வெளியேற்றப்படுவதால் ஆந்திர மாநில அரசு ஆளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 21 தடுப்பணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வேலூர் பாலாற்றில் அதிக அளவு மழை நீர் செல்கிறது. பாலாற்றில் இருந்து கழிஞ்சூர் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டதால் கவிஞர் ஏரி நிரம்பி uber நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.  நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக வேலூர் கன்சால்பேட்டை, சீனிவாசா நகர், முள்ளிபாளையம், திடீர் நகர், கொணவட்டம் ,சேண்பாக்கம், சாய் நாதபுரம் உள்ளிட்ட வேலூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைக்காலத்திற்கு முன்பு மாநகராட்சி அதி...

மூட்டு அறுவை நறுவீசாதனை

Image
வேலூர்          வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை  - நறுவீ மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி     வேலூர்மாவட்டம்,வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூட்டு நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்களாத்தை சேர்ந்த 54 வயது பெண் நோயாளிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோபோ கொண்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வருகிறது. அளிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில...

வெள்ளம்

Image
 ராணிப்பேட்டை மாவட்டம்     தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை காவேரிப்பாக்கம் சோளிங்கர் நெமிலி அரக்கோணம் ஆற்காடு கலவை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டுவிட்டு லேசாக மழை பெய்துவந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு தொடர் மழை பெய்து வருகிறது சாலை ஓரமாக மழைநீர் ஆனது பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனோட்டியல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்  மேலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது ஏரி குளம் ஆகியவை அதிவேகமாக நிரம்பி வருகிறது வாணியம்பாடி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காட்டுக் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 17 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.  வாணியம்பாடி,அக்.திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திர மாநில எல்லையான தகர குப்பம் அடுத்த ஜோதி நகர் பகுதியில் காட்டு கோயில் அமைந்துள்ளது. இன்று தீபாவளி திருநாளை ம...

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Image
எந்த தொழிலும் அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி பெறலாம் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்   பேச்சு வேலூர், அக்.17- வேலூர்,வி.ஐ.டி துணைத் தலைவர் ஜி.வி  செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு  தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் சார்பில்  தமிழ்நாடு மருத்துவ நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. நாராயணி மருத்துவ குழும தலைவர் டாக்டர் பாலாஜி. தலைமை தாங்கி பேசினார். வேலூர் முன்னாள் கலெக்டர் சிவகாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,குல தொழிலை அவர்கள் செய்ய வேண்டும் என கூறுவது இந்த காலத்தில் நகைச்சுவையாக இருக்கிறது.மக்கள் வருமானம் கூட கூட செலவு செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி கொடுக்கலாம். உள் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்கலாம். இவ்வாறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையை தரம் உயர்த்தலாம் இவ்வாறு அவர் பேசினார். விஐபி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சிறப்பு உரையாற்றினார்  அப்போது அவர் பேசியதாவது, பிறப்பது முதல் இறப்புவது வரை உழைக்கும் சம...

செயலிழப்பு

Image
வேலூர்     17 -10-25    வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட பயன்படுத்தப்படும் 15க்கும் மேற்பட்ட நாட்டு வெடி குண்டுகளை   செயல் இழக்க வைத்த வெடிகுண்டு நிபுணர்கள்   வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செங்குன்றம் வனப்பகுதியில்  30-09-2025  வன விலங்குகளை வேட்டையாட தயார் செய்து வைத்திருந்த 15 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து   சந்தோஷ்  என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 15 நாட்டு வெடிகுண்டுகளை  மிகுந்த பாதுகாப்புடன்   குடியாத்தம் வனத்துறை அலுவலகத்தில்  வைத்திருந்தனர்இன்று அவற்றை செயலக்க செய்யும் வகையில்   சென்னையில் இருந்து வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் குழுவினர்   6 காவலர்கள் மற்றும்  குடியாத்தம் தீ அணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு குழுவினர்,  வனத்துறையினர் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அடர்ந்த வனப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் பத்து அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு   சிலந்...

ViTஇனிப்புகள் வழங்கினார்

Image
திருமதி காதம்பரி எஸ். விஸ்வநாதன் வேலூர் மற்றும் குடியாத்தத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்களுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள், டயப்பர்கள்/நாப்கின்களை வழங்கினார். தீபாவளியைக் கொண்டாடும் வகையில், விஐடி உதவித் துணைத் தலைவர் திருமதி காதம்பரி எஸ். விஸ்வநாதன் வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனாதை இல்லங்களுக்குச் சென்று பல்வேறு அனாதை இல்லங்கள், மூத்த குடிமக்கள் இல்லங்கள், பார்வையற்றோர் பள்ளிகள் போன்றவற்றிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகைப் பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள், டயப்பர்கள்/நாப்கின்களை வழங்கினார். இந்த உன்னதமான முயற்சியில் விஐடி துணைத் தலைவர் திரு. சங்கர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர். ஸ்ரவன் கிருஷ்ணா (திருமதி காதம்பரியின் கணவர்) ஆகியோர் அவருடன் சென்றனர். శ్రీమతి కాదంబరి ఎస్. విశ్వనాథన్ వెల్లూరు మరియు గుడియాతం చుట్టుపక్కల ఉన్న 20 కి పైగా అనాథాశ్రమాలకు నిత్యావసరాలు, స్వీట్లు, క్రాకర్లు, డైపర్లు/నాప్‌కిన్‌లను విరాళంగా ఇచ్చారు. దీపావళిని పురస్కరించుకుని, VIT అసిస్టెంట్ వైస్-ప్రెసిడెంట్ శ్రీమతి కాదంబరి ఎస్. విశ్వనాథన్ వెల్లూ...

VITவிழா வைகோ பேச்சு

Image
வேலூர்    23 -10-25   தமிழகத்தில் சனாதன சக்திகளும் இந்துத்துவா சக்திகளும் பார்ப்பனிய சக்திகளும் உள்ளே நுழைந்து விட வேண்டுமென மனப்பாலை குடிக்கிறார்கள் அது நடக்காது - பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்லும் நபர்கள் நாள் குறித்துவிட்டு வந்தால் கையைவெட்டுவேன் என வைகோ பகிரங்கமாக அறிவிக்கிறேன் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேச்சு         வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் நாவலர் செழியன் அறக்கட்டளை மற்றும்  பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியமன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவானது வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம்,சங்கர் உள்ளிட்டோரும் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ வழக்கறிஞர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்  இக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொ...

செய்தி

Image
ராணிப்பேட்டைமாவட்டம்       24-10-25  தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்          ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட மையம்  மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷாகீர் ஜான் வரவேற்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயவேல் முன்னிலையில், மாவட்ட கவுரவ ஆலோசகர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மேலும் மாநில பிரச்சாரச் செயலாளர் என் எஸ் கருணாநிதி சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டமானது ஓய்வு பெற்ற 70 வயது நிறைந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், அங்கன்வாடி ஊட்டச்சத்து பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ, 7850 வழங்கவும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. மேலும் இதில் ம...

இடிப்பு

Image
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிப்பு  நியூஸ் 4 வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 1980-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன மொத்தம் 22 பிளாக்குகளில் 168 வீடுகள் உள்ளன.  இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 45 ஆண்டுகள் ஆவதால் சேதம் அடைந்தும் செடி கொடிகள் மரங்கள் வளர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன.தொடர்ந்து இந்த கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது அதன்படி 5 பிளாக்குகளில் உள்ள 54 வீடுகளை முதல் கட்டமாக இடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன்படி அந்தக் கட்டிடங்களில் இருந்த ஜன்னல் கதவு உள்ளிட்டவை ஏற்கனவே அகற்றப்பட்டன தொடர்ந்து இன்று பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, கட்டப்பட்டுள்ள 22 பிளாக்குகளில் முதல் கட்டமாக 5 பிளாக்குகள் இடிக்கப்பட உள்ளன. பி.பிளாக்குகளில் 29 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அந்த கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செ...

குரு ஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா

Image
ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில்  குரு ஸ்தானம் பூஜை மண்டபத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்  வேலூர்,அக்.25- வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் சிறப்பு விழா மற்றும் மகா சண்டி ஓமம் இன்று நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். ஸ்ரீபுரம் தங்கக் கோவில்களில்  நாராயணி அம்மனை தரிசித்த சிவராஜ் சிங் சவுக்கான் மற்றும் அவரது மனைவி சாதனா சிங் சவுகான் ஆகியோர் தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் நடந்த மகா சண்டி யாகம் பூர்ணாயுதியில் கலந்து கொண்டனர்.  இதையடுத்து குருஸ்தானம் பூஜை மண்டபத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் வி.ஐ.டி துணை தலைவர் சங்கர் விஸ்வநாதன், நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்குமார், மேலாளர் சம்பத், அறங்காவலர் சவுந்தரராஜன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாம்

Image
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு  தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்  வேலூர்,அக்.25- வேலூர் விஐடி துணைத்தலைவர் ஜி வி செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு தலைமுறை பேரவை மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் ஊர்காவல் படையினருக்கு இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.  நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் தலைமை தாங்கினார். நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குனர் பாலாஜி முன்னில வகித்தார். அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் உணவு முறையின் உன்னதம் குறித்து பேசினார்..