Posts

Showing posts from October, 2022

கொலை

Image
மதுபாட்டிலால் தாக்கி முதியவர் கொலை ஜோலார்பேட்டை, அக்.  ஜோலார்பேட்டை அருகே, மதுபாட்டிலால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே டெமஸ்டிக் பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. ஜோலார்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் குடியான குப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, கோவிந்தராஜ், 52, என்பதும், குடித்து விட்டு வந்த போது ஏற்பட்ட  தகராறில் அவரது நண்பர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததது. ஜோலார்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

வரவேற்பு

Image
அண்ணா எழுப்பிய கோபுரம் அதன் அடியில் கிடக்கும் செங்கல் நான் அமைச்சர் துரைமுருகன் வேலுார், அக்.  அண்ணா எழுப்பிய கோபுரம், அதன் அடியில் கிடக்கும் செங்கல் நான் என அமைச்சர் துரைமுருகன் பேசினார். இரண்டாவது முறையாக தி.மு.க., வின் பொதுச் செயலாளாக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம்,  காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு  இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க., வினர்  வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து  திறந்த ஜீப்பில் காட்பாடி சித்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துரைமுருகனுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் வெள்ளி செங்கோல் கொடுத்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர் பருவத்தில்  இந்த இயக்கத்தின் மீது எனக்கு பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவரணி  துணை பொது செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என பல பொறுப்புக்களை கருணாநிதி எனக்கு கொடுத்தார்....

கைது

Image
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது ராணிப்பேட்டை, அக். ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்த 70 வயது முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் எழு வயது மகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று  வீட்டு முன்பு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, கீழதேவதானம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சாரங்கபாணி, 70, என்பவர் சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்து மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகார்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார் சாரங்கபாணியை போக்சோவில் இன்று கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

கைது

Image
போலி டாக்டர் 3 பேர் கைது வேலுார், அக். வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வீட்டில் கிளினிக் நடத்திய  போலி டாக்டர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறையினர் இன்று திமிரியில் போலி டாக்டர் ஒழிப்பு ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் பாஷா, 38, காவனுார் இளங்கோ, 47, ஆகியோர் இரண்டாம் வகுப்பு படித்து விட்டு  எம்.பி.பி.எஸ்., என போர்டு போட்டுக்கொண்டு திமிரியில் உள்ள வாடகை வீட்டில் கிளினிக் நடத்தி வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அந்த கிளினிக்குகளை மூடி சீல் வைத்தனர். புகார்படி திமிரி போலீசார் போலி டாக்டர்களான அவர்களை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே கீழ்கொத்துார் பகுதியில் 3 ம் வகுப்பு படித்து விட்டு எம்.பி.பி.எஸ்., எம்.டி., என வீட்டில் போர்டு மாட்டிக்கொண்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் திருப்பதி, 47, என்பவரை வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

திறப்பு

Image
ஆட்டோ நுாலகம் திறப்பு வேலுார், அக்.  வேலுாரில், ஆட்டோவில் நுாலகம் திறக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், காட்பாடி ஆக்சிலியம் கல்லுாரியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சார்பில் நடமாடும் ஆட்டோவில் நுாலகம் திறப்பு விழா இன்று நடந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி., செந்தாமரைக்கண்ணன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:  மண்ணில் மரங்களை விதைப்பது போல மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை புத்தகங்கள் விதைக்கும். ஆட்டோவில் பயணிக்கும் போது சில நிமிடங்களாவது பயணிகள் புத்தகங்களை படிப்பதனால் மன மாற்றம் ஏற்படும். முதல்  கட்டமாக 10 ஆட்டோவில் நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நுாலகம் திறக்கப்படும். ஒரு ஆட்டோவில் 50 புத்தகம் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பந்தம்

Image
வி.ஐ.டி., டோகோ நாட்டின் கல்வி நிறுவனங்கள்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலுார், அக்.  வி.ஐ.டி., டோகோ நாட்டின் கல்வி நிறுவனங்கள்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலுார் வி.ஐ.டியில் செய்யப்பட்டுள்ளது. இதில் டோகோ நாட்டின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான அமைச்சர் அய்ேஹா வட்டேபா, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் ஆகியோர் கையேழுத்திட்டனர். இதனால் வி.ஐ.டி., டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். டோகோ நாட்டின் துாதரக அதிகாரி யானோ ஆக்பேமாடோ, வி.ஐ.டி., துணைத்தலைவர்கள் சங்கர், செல்வம், இணை துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

கைது

Image
ரூ 2,500 கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் கடன் தருவதாக மோசடி செய்தவர் கைது வாணியம்பாடி, அக்.  வாணியம்பாடியில், 2,500 ரூபாய் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி ஏராளமானோரிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர், விக்னேஷ், 25. இவர் செட்டியப்பனுார் பகுதியில், அட்சயம் என்ற மகளிர் சுய உதவிக்குழுவை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். பின்னர் 2,500 ரூபாய் முன்பணம் கொடுத்தால், 50 ஆயிரம் ரூபாய் வங்கியின் கடன் பெற்று தருவதாக கூறினார். இதை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் இவரிடம் பணத்தை கொடுத்தனர். ஆனால் யாருக்கும் கடன் வரவில்லை. பணம் கொடுத்தவர்கள் கேட்டதற்கு விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து  பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1 ம் தேதி திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரணையில், திருப்பத்துாரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கலெக்டர் ஏஜெண்ட்டாக பணியாற்றி வந்ததாகவும், பிறகு மகளிர் குழுவை துவக்கி ...

பறிமுதல்

Image
திருப்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் சோதனை ரூ 1.10 லட்சம் பறிமுதல் திருப்பத்துார், அக். திருப்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத 1.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். திருப்பத்துார் டாஸ்போஸ்கோ நகரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு ஜெயந்தி, 48, என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தீபாவளியையொட்டி, கணிசமான தொகையை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என சாராய வியாபாரிகளை இவர் வற்புறுத்தியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பத்துார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட  குழுவினர் இன்று இரவு 6:30 மணிக்கு இங்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரிகள் தப்பியோடினர். இரவு 9:00 மணி நிலவரப்படி இன்ஸ்பெக்டர்  ஜெயந்தி கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை மற்றும் ஜெயந்தியிடம் விசாரணை நடந்து வருகிறது.

சோதனை

Image
கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் விஜிலன்ஸ் சோதனை வேலுார், அக்.  கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில், தீபாவளியையொட்டி இடைத்தரகர்களிடம் வசூல் வேட்டை நடப்பதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து வேலுார் மாவட்டம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் ஏழு பேர் இன்று காலை 5:00 மணியலிருந்து நேற்று அதிகாலை 2:00 மணி வரை சோதனை நடத்தினர். இதில், பத்திரப்பதிவு அலுவலர் வேலுாரை சேர்ந்த சிவக்குமார், 50, என்பவர் பையில் வைத்திருந்த  கணக்கில் வராத 57 ஆயிரத்தி 400 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

Image
போலி டாக்டர்கள் 8 பேர் கைது திருப்பத்துார், அக். திருப்பத்துார் மாவட்டத்தில்,  போலி டாக்டர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டத்தில், போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில்  மூன்று டி.எஸ்.பி., க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 25 போலீசார் அடங்கிய குழுவினர் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கிளினிக்குகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரங்கநாதவலசை பகுதியை சேர்ந்த அப்துல்லா, 50, வேலு, 40, குரிசிலாப்பட்டு உமா சரஸ்வதி, 45, வடுகமுத்தப்பட்டி சென்னம்மாள், 40, திம்மாம்பேட்டை மணி, 45, சண்முகசுந்தரம், 34, வீரங்குப்பம், ஜெயபால், 60, பாலகிருஷ்ணன், 65, ஆகியோர் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர்கள் என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

கைது

Image
ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது; ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சப்ளை செய்ய எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிந்தது ஜோலார்பேட்டை,அக். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், ரயில்களில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை ஜோலார்பேட்டைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலின் எஸ்-6 காம்பார்ட்மெண்டில் ஆய்வு மேற்கொண்ட போது, அதில் சந்தேகத்தின் பேரில் இருந்த பயணி ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலம் சந்தனப்பூர் பகுதியை சேர்ந்த கைலாஷ் பிஸ்வால்(46). என்பதும், இவர் 18 பண்டல்களில் 18 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வந்தது தெரிந்தது.மேலும் இவர் புவனேஸ்வரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பெங்களூரில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சப்ளை செய்வது விசாரணை தெரிந்தது.பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,  கைலாஷ் பிஸ்வாலை கைது செய்த...

கைது

Image
18 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது ஜோலார்பேட்டை, அக்.  ஜோலார்பேட்டை வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இன்று அதிகாலை 2:00 மணிக்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அந்த ரயிலில் எஸ் 6 முன்பதிவு செய்த பெட்டியில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், ஒடிசா மாநிலம், சந்தனப்பூர் பகுதியை சேர்ந்த கைலாஷ் பிஸ்வால், 46, என்பதும், இவர் வைத்திருந்த பையில் 18 கிலோ  கஞ்சா இருந்தது, பெங்களூருவில் பணியாற்றும் ஐ.டி., ஊழியர்களுக்கு விற்பனை செய்ய கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேர்வு

Image
கிரிக்கெட் சங்க தலைவர் தேர்வு வேலுார், அக்.  கிரிக்கெட் சங்க தலைவராக சம்பத் தேர்வு செய்யப்பட்டார். வேலுார் மாவட்ட கிரிக்கெட சங்க பொதுக்குழு கூட்டம், வேலுாரில்  நடந்தது. சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரித்ரன் வரவேற்றார். கூட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத், துணைத்தலைவர்கராக விஜயகுமார், கிருஷ்ணகுமார், தினேஷ் சங்கர், கங்காதரன், வினோத்குமார், செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய்விக்னெஷ்வர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட சம்பத், சர்வதேச மேலாண்மை துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

ரத்த தான முகாம்

Image
300 பேர் ரத்ததானம் செய்தனர் வேலுார், அக் வேலுாரில் நடந்த முகாமில், 300 பேர் ரத்ததானம் செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு சார்பில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மற்றும் ரத்ததான முகாம் வேலுாரில்  நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலிபன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் நாராயணன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார். ரத்ததானம் செய்ய 300 பேருக்கு மேயர் சுஜாதா சான்றிதழ் வழங்கினார். தானமாக பெறப்பட்ட ரத்தம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. வேலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன், தாசில்தார் செந்தில், ரெட்கிராஸ் சங்க செயலாளர் ஜனார்த்தனன், மார்க். கம்யூ., மாவட்ட  செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கா

Image