Posts

Showing posts from September, 2023

தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து

Image
தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக ஆந்திர வனப்பகுதி வி கோட்டா என்ற இடத்தில் வருகிறது இதனால் இங்கே ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானை சிறுத்தை சிறுத்தை புலி கரடி போன்ற வனவிலங்குகள் குடிதண்ணீருக்காக தமிழக பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன அதேசமயம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் மர்ம நபர்கள் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர் இதற்காக இந்த பகுதியில் 24 மணி நேரமும் கள்ள சாராய அடுப்புகள் அடுப்புகள் மூலம் சாராயம் தயாரித்து வருகின்றனர் வருகின்றனர்  இந்நிலையில் வி கோட்டா பகுதியில் மர்ம நபர்கள்  சாராயம் தயாரித்து அதை ஒரு பானையில் வைத்து விட்டு சென்றனர் சாராயம் என தெரியாமல் அந்த வழியாக வந்த ஒரு சிறுத்தை அந்தப் பானையில் இருந்த மொத்த சாராயத்தையும் குடித்து விட்டது இதனால் போதை அதிகமாகி நடக்க முடியாமல் சிறுத்தை அங்கேயே படுத்து விட்டது அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தைக்கு போதை தெளிய தண்ணீர் ஊற்றினர் அப்படியும் சிறுத்தைக்கு போதை தெளியவில்லை சிறுத்தை அந்த பகுதியில் இருந்தால் ஆபத்து என்பதை அறிந்த ஊர் மக்கள் ...

தேர்தல்

Image
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு வேலூர், செப்.5- நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என வேலூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். *அவசர செயற்குழு கூட்டம்* வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; கலைஞர் நூற்றாண்டு விழாவுடன் கழகத்தின் பவள விழா, கட்சியின் முப்பெரும் விழாவை வேலூர் நடத்த வேண்டும் என தளபதி கூறியுள்ளார். இது வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை. மற்ற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வித்தியாசப்படுவது உண்டு. திமுகவிற்கு இது பவளவிழா ஆண்டாகும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி த...

தெரியுமா

Image
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்...அனைவருக்கும் பகிருங்கள்....🙏🙏🙏

VITவிழா

Image
வேலூர்    1-9-23 நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைத்து மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்யவுள்ளோம் - பி.எஸ்.எல்.வி லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி கிடைப்பதன் மூலம் தொடர்ந்து இயங்கி வருகிறது அதன் பிறகு மீண்டும் நிலவில் சூரிய ஒளி கிடைத்தால் ஆராய்ச்சிகள் தொடர சாத்திய கூறுகள் உள்ளதா என முயற்சி செய்வோம் - நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை - அவ்வாறு ஆட்களை அனுப்பினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுப்பும் சாத்தியகூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் இஸ்ரோ சந்திரயான் -3 இயக்குநர் மோகனகுமார் பேச்சு  _____________________________________________     வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர்தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் சந்திராயன் -3 வெற்றிகுறித்து அதன் இயக்குநர் மோகனகுமார் மாணவர்களுக்கு விளக்கி கூறும் நிகழ்வும் கலந்துரையாடலும் நடந்தது இதில் இஸ்ரோ சந்திராயன் -3 இயக்குநர் விஞ்ஞா...

தெரியுமா

Image
அன்றைய ஆசிரியர்கள்  *கற்றுக் கொடுத்ததில்*  இதுவும் ஒன்று...!!🔴🟢

ஆய்வு

Image
வேலூர்   1-9-23 வஞ்சூர் மற்றும் ஜாப்ராபேட்டை பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திடீர் ஆய்வு  ___________________________________        வேலூர்மாவட்டம்,காட்பாடி தொகுதிக்குட்பட்ட வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி மற்றும் ஜாப்ராபேட்டை நடுநிலைப்பள்ளி ஆகியவைகளில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இரு பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்ததுடன் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் காலை சிற்றுண்டி சரியாக வழங்கப்படுகிறதா நன்றாக இருக்கிறதா எனவும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்     பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் அவர்களால் காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவங்கப்பட்டு அதன் விரிவாக்கமாக கிராமப்புற பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய...

சண்டை

Image
வேலூர்   1-9-23  பேரணாம்பட்டில்மூன்று மசூதிகள் ஒரு மதரஸாவுக்கு முத்தவல்லி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இருதரப்பினருக்கு வாக்குவாதம்        வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மூன்று பள்ளிவாசல் ஒரு மதரசாவிற்கான முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளுக்கா வக்பு வாரியம் சார்பாக நடத்தப்படும் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.அப்பொழுது இரு தரப்பினருக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்த பள்ளிவாசல்களுக்கு நூறாண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகித்து வருகிறார்கள்அதனை மாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும் மாற்றக்கூடாது என்று இன்னொரு தரப்பும் வக்பு வாரியத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்வக்பு வாரிய அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பெயர் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான வேட்பு மனுவை இரு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டனஒரு தரப்பினர் இந்தப் பள்ளிவாசல்களுக்கும் மதரஸாவிற்கும் சுற்றி 4000 பேர் இருப்பதாகவும் அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் வக்புவாரியம் வெறும் 800 பேர் வாக்குரிமை பெற்று இருக்கிறார் என்று தெரிவ...

முகாம்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    ராணிப்பேட்டை சிப்காட்டில் மாபெரும் ரத்ததான முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ரோட்டரி சங்கம் மற்றும் வாலாஜா அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திவிமளாஎலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் கீர்த்தி ஆகியோர் தலைமையில்சிப்காட் ரோட்டரி சங்க தலைவர் அருள். செயலாளர் கிஷோர். பொருளாளர் விநாயகம். ஆகியோர் முன்னிலையில்மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றதுஇந்த முகாமில் சிப்காட்   தொழில் பேட்டை முழுவதும் உள்ள தொழிலதிபர்கள் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்  ரத்த தானம் செய்தவர்களுக்கு ஜூஸ் இளநீர் பழங்கள் என கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர் இதில் சிப்காட்டை சார்ந்த தொழிலதிபர்கள். உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   ஆற்காடு நகராட்சியில் 9.48 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் மற்றும் காய்கனி அங்காடி கட்டுமான பணிகளை தமிழக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் உட்கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தில் 6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையமும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.48 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கனி அங்காடி கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். பூமி பூஜைக்காக வருகை தந்த அமைச்சருக்கு நிர்வாகிகளும் நகராட்சி பிரதிநிதிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்க பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

பலி

Image
திருப்பத்தூர்மாவட்டம்  வாணியம்பாடி அருகே அகர்பத்தி தயாரிக்கும் தொழிற்சாலை மிஷினில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அகர்பத்தி தயாரிக்கும் தனியார்  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மோகன் என்பவர் மிஷினில் சிக்கி பலியானார் வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

விசாரணை

Image
🔸 *திருப்பத்தூர் மாவட்டம்* *வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நிலக்கரி அரவை இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு. வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை*

தரிசனம்

Image

உதவி

Image
வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்த மாணவி ஜெயபிரியா +2 வரை அரசு பள்ளியில் பயின்று தற்போது குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் BA பயின்று வருகிறார்.  சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வமுடன் இருந்த மாணவி தற்போது மாநில அளவில் நடந்த தரைப்பந்து(floor ball) போட்டியில் வென்று தேசிய அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவில் விளையாட நாக்பூர் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு தேவையான பயண கட்டணம் 3000 மாணவியிடம் நேரில் வழங்கினேன். ஏற்கனவே அம்மா நகைகளை அடகு வைத்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு இந்த அளவுக்கு முன்னேறியுள்ள மாணவியின் தாய் தந்தை 100 நாள் வேலை செய்பவர்கள். ஏழ்மை சூழலிலும் சாதிக்க துடிக்கும் மாணவிக்கு வாழ்த்துக்கள்..! - Dinesh Saravanan

VITவிழா

Image
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பயணிகள் விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உருவாக்கப்பட வேண்டும் என சந்திராயன் 3 திட்ட இயக்குனர் மோகன குமார் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெற்ற சந்திராயன் 3  விண்கலம் குறித்த  மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மோகனகுமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் பேசும்போது, சந்திராயன் 3 பணியின் வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் சந்திராயன் 3 யில் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகத்தான் அது செலவும் குறைவாக உள்ளது. சந்திரன் 3 தயாரிக்க அனைத்து தொழில்நுட்பங்களும்  இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது.  குறிப்பாக சந்திரன் 3 மிஷின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அதற்கான உதிரி பாகங்கள்  தயாரித்தவர்கள் தான். காரணம் சந்திராயன் 3 க்கு தேவையான உதிரி பாகங்களை குறிப்பிட்ட நேரத்தில் தயார் செய்து வழங்கியதால் தான் சந்திராயன் 3 குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.  தற்போது இந்தியாவி...

மகிழ்ச்சி

Image
வள்ளிமலை ரோடு டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது

அச்சம்

Image
திருப்பத்தூர்மாவட்டம்    3-9-23     வாணியம்பாடியில் ஸ்வைன்ப்ளு எனப்படும் பன்றிக்காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு. பகுதி மக்கள் அச்சம்.    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நுரையீறல் பிரச்சனை காரணமாக  உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடிற் காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு  ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றிக்காய்சல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர் வசித்து வந்த வீடு மற்றும் அப் பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் துய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்...

விழா

Image
வேலூர்   3-9-23 வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் ________________________________________________________       வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பால்,தயிர்,சந்தனம்,உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்து பின்னர் அருகம்புல் மாலை மலர்மாலைகள் அணிவித்தும் வெள்ளிக்கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்

திருட்டு

Image
வேலூர்   3-9-23    தொரப்பாடியில் ஆசிரியர் வீட்டின் பின் பக்க கதவை  உடைத்து 100 சவரன் தங்க நகை கொள்ளை - மிளகாய் பொடி தூவி சென்ற ஆந்திர கொள்ளை கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை     வேலூர்மாவட்டம்., தொரப்பாடி ராம் சேட் நகர் 1 ஆவது தெருவில்   வசித்து வருபவர் பாலாஜி இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரின்  மனைவி மோகனப்பிரியா   மூஞ்சூர் பட்டு பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் இன்று காலை அவர் மூஞ்சூர் பட்டு பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை  வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு    உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்  பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோகனபிரியாவின் தங்கநகை 20 சவரனும் அவர் மாமியார் நகை 80 சவரன் என மொத்தம்  100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து கொண்டு அதனை திசை திருப்ப கொள்ளையர்கள் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றது  கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாகாயம் போலீசருக்கு தகவல் அளித்...

பலி

Image
திருப்பத்தூர்மாவட்டம்       4-9-23 வாணியம்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் 16 வயது மகன் சிறுவன் அசார் இவர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருந்துள்ளார்.இந்நிலையில் சிறுவன் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி ஊராட்சி நாதிகுப்பம் பகுதியில் உறவினர்  சையத் பாஷா என்பவரின்  வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். திருமண வீட்டில் போடப்பட்டிருந்த  பந்தல் அருகே விளையாடி கொண்டிருந்த போது அங்குள்ள  இரும்பு கம்பத்தை பிடிக்கும் போது இரும்பு கம்பத்தில்  இருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய சிறுவனை  வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு வந்து பரிசோதனை செய்த போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலிசார் இது குறித்து வழக்குப் பதிவு ...

பரிசு

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     4-9-23   தேசிய் அளவில்  நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர் வீராங்கனைகள் 9 தங்கம்,6 வெள்ளி ,5 வெங்கலம் வென்றனர்.        ஜார்கண்ட் மாநிலம் காஞ்சியில் உள்ள ஹரி வாஞ்ச் தானாபகத்  உள்விளையாட்டு அரங்கில் வாக்கோ இந்தியா சார்பில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கிக் பாஸ் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 32 மாநிலங்களில் இருந்து ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிக் பாக்ஸின் வீரர்கள் பங்கேற்றனர் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தில் இருந்து 183 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்றனர்.இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கிக்பாக்ஸிங் சார்பில் மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மோகன்ராஜ் தலைமையில் 15 வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு 9 தங்க பதக்கமும் ,6 வெள்ளி பதக்கமும்,5 வெண்கல பதக்கமும் வெற்றி பெற்றனர்.இதனை தொடர்ந்து  பயிற்சியாளர் மோகன்ராஜ் தலைமையில் 15 வீரர் வீராங...

விழா

Image
வேலூர்    4-9-23   மது அருந்துபவர்களுடன் நட்பு வைத்துகொள்ளாதீர்கள் சிகரெட் புகைப்பவர்கள் அருகில் கூட செல்லாதீர்கள் - ஒழுக்கமாக இருங்கள் - மாநில அளவிலான கராத்தேபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் சான்றுகளை வழங்கி முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்  வேலூரில்  பேச்சு  __________________________________          வேலூர்மாவட்டம்,வேலூரில் ஜப்பான் ஷீட்டோ கராத்தே இந்திய பள்ளியின் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது போட்டியினை இந்திய தலைமை கராத்தே மாஸ்டர் ரமேஷ் துவங்கி வைத்தார் இதில் 600-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்  அவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் திரைப்பட முன்னணி சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்  வழங்கினார்   இதில் கராத்தே மாஸ்டர் விக்கி லச்சு,உள்ளிட்டோர் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர் இதில்  கராத்தேவில் சிறப்பாக பயின்று கற்ற மாணவ,மாணவிகளுக்கு  பிளாக் பெல்ட்டுகளையும்  வழங்கினார்கள்...

கைது

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   வேலூர்    4-9-23   வாலாஜா  அருகே ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாமியாரை அப்பகுதியினர் ஆபாச அர்ச்சனை செய்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  காகிதக்கார தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் இவர் அதே பகுதியில் பஜனை கோவில் வைத்துக்கொண்டு சாமியார் காவி உடை அணிந்து பெட்டிக்கடை நடத்தி வருகிறார்..  இந்த நிலையில் இன்று மாலை அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஜோதி என்பவரின் 9 வயது சிறுமி வீட்டிற்கு மேகி வாங்குவதற்காக கடைக்கு வந்தபோது சாமியார் சிவலிங்கம் அந்த சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்து சென்று உடையை கலைத்து பாலியல் சீண்டலில் சாமியார் ஈடுபட்டதாக தெரிகிறது.. இதுகுறித்து உடனே, சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் வேடமணிந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரை கூடியிருந்த பொதுமக்கள் ஆபாசமாக அர்ச்சனை செய்ததோடு  தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் போலீசார் நடைபெ...

பலி

Image
வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு. பகுதி மக்கள் அச்சம். வாணியம்பாடி, செப்.3- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்(59). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக  உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடிற் காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் துய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர் நடத்தி வந்த கடையை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்த மூட நகராட்சி ஆணையாளர் சதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் பன்றி காய்ச்சல் ...