காலை வணக்கம்
இறைவனிடமும் இயற்கையிடமும் மௌனமாக பேசுங்கள்........ மனிதர்களிடம் கவனமாக பேசுங்க......!! *இனிய காலை வணக்கம் நண்பர்களே இனிய காலை வணக்கம் இன்றைய சிந்தனை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "மகிழ்ச்சி எங்கே இருக்கிறது.."? ¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡ உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றான். இதில் கிடைத்து விடாதா அதில் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான். இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே. மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல. இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது. இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்துக் கொள்கின்றானோ, அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால், மகிழ்ச்சியும், நிம்மத...