செய்திகள்
வேலூர் 29-4-25 குடியாத்தம் பகுதியில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தானுக்கு சுற்றுசுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ள நிலையில் அதனை விரைந்து முடித்து சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமியர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் ____________________________________________ வேலூர்மாவட்டம்,குடியாத்தம் தாழையாத்தம் ஜோகிமடம் என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தான் எனப்படும் மயானம் உள்ளது இங்கு சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவர்களுக்கு ரூ.63 லட்சம் திட்டமதீப்பீடு சுற்றுசுவர் அமைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் வந்துள்ளது ஆனால் மூன்றாண்டுகளாகியும் இதுவரையில் சுற்றுசுவர் அமைக்கவில்லை இந்த நிலையில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த இஸ்லாமிய மக்கள் ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனுவினை அளித்தனர் அதில் விரைந்து சுற்றுசுவர் அமைக்க உரிய நடவ...