Posts

Showing posts from May, 2022

97 லட்சம் ரூபாய் மோசடி கூட்டுறவு பெண் வங்கி அதிகாரி கைது

Image
ரூ 97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு பெண் வங்கி மேலாளர் கைது வேலுார் அரியூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 38. இவர் வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி வேலுார் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 2018– 19ம் ஆண்டுகளில் குடியாத்தம் கிளையில் மேலாளராக இவர் பணியாற்றிய போது,    மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக  போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது வங்கி தணிக்கையில் தெரியவந்தது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வேலுார் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலுார், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது. வணிக குற்றப்பிரிவு போலீசார் உமா மகேஸ்வரியை  கைது செய்து வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர். ...

தலைவருக்கு அபராதம்

Image
ஊராட்சி மன்ற தலைவருக்கு ரூ 18 ஆயிரம் அபராதம் ஆற்காடு அடுத்த மோசூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க மின் இணைப்புக்கு அனுமதி வாங்கியிருந்தார். அனுமதி பெற்ற இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்காமல், வேறு இடத்தில் அமைத்து மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார். வேலுார் மின்வாரிய பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், முறைகேடாக இவர் மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. திமிரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்திபூஷன், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனுக்கு 18 ஆயிரத்து 633 ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்தாவிட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என்பதால், மகேந்திரன் அபராதத் தொகையை செலுத்தி விட்டார்.

30 பேருக்கு மெமோ

Image
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வராத 30 அதிகாரிகளுக்கு மெமோ திருப்பத்துார்  கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த 30 ம் தேதி நடந்தது. இதில் பொது மக்களிடமிருந்து 290 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளை அழைத்த போது பலர் வரவில்லை.  குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத பல்வேறு துறைகளை சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு சரியான விளக்கத்தை அளிக்காவிட்டால், பணியிட மாற்றம், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால், 30 அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளி முற்றுகை

Image
மொபைல் போனை தராததால் பள்ளி முற்றுகை குடியாத்தத்தில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  பள்ளிக்கு வரும் மாணவர்கள் மொபைல் போனை எடுத்து வர பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் தடை விதித்தது.  மொபைல் போனை மாணவர்கள் எடுத்து வந்ததால் 90 போன்களை பள்ளி ஆசிரியர்கள் பறிமுதல் செய்தனர். மொபைல் போன்களை திருப்பி தரும்படி மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் தரவில்லை. இதை கண்டித்து பெற்றோர் இன்று காலை 8:00 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்கள் இனிமேல் பள்ளிக்கு மொபைல் போன்கள் எடுத்து வரக்கூடாது என உறுதி அளித்ததன் பேரில், மொபைல் போன்கள் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.

காலை தரிசனம்

Image
🚩 *காலை தரிசனம் !* *பெருமாள் தரிசனம் !!* சுபகிருது வருடம் :  வைகாசி மாதம் 18 ஆம் நாள்....! ஜூன் மாதம் : முதல் தேதி :  (01-06-2022) இன்று புதன்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-02 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : துவிதியை !! துவிதயை.. இரவு 09-00 மணி வரை ! அதன் பிறகு  திரிதியை ! இன்றைய நட்சத்திரம் :  மிருகசீருஷம்.. காலை 11-50 மணி வரை ! அதன் பிறகு திருவாதிரை !! இன்று  சம நோக்கு நாள் ! யோகம் :   சித்தயோகம் !    சந்திராஷ்டமம் : இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் !! விருச்சிக ராசிக்கு, புதன் வியாழன் வெள்ளிக்கிழமை காலை 11-00 மணி வரை சந்திராஷ்டமம்.....!! ராகுகாலம் :  மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 06-00 மணி முதல் 07-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  06-00 மணி முதல் 07-00 மணி வரை ...

மக்கள் கவனத்திற்கு

Image

சாதனை

Image
இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட சுமார் 14 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஆகும்... பிரதமர் நரேந்திர மோடிஜியின் புதிய இந்தியா இதுதான் #தேசிய மாடல்.

இனிய காலை

Image
எத்தனை முறை  உன் சந்தோஷங்கள்  பறிக்கப் பட்டாலும்,  பூத்துக்  கொண்டே இரு,  பூக்களை  போல.!  திருச்சிற்றம்பலம்🚩🚩  இனிய காலை🙏🙏🙏

பணி நீக்கம்

Image
கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆர்.இளங்கோவன் நிலுவையில் இருந்த *லஞ்ச ஒழிப்புத் துறை* வழக்கு காரணமாக நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்

பலம்

Image
*"வார்த்தைகளின் பலம்."* *நேர்மறை ( positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும்.*...!!!!!! *நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.*... *வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இருந்தது இல்லை...*!!!!! *எதிர்மறை ( negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டு இருக்கும்.*...... *அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்குத் தோன்றும். அவை நமக்கு கொடுப்பது வலியும் வேதனையும் தான்.*....!!! *எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.*...!! *அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.*....!!!!!! *ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:*....!!! *சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை...*  *நீண்ட நாள் படுக்கையி...

உழைப்பு

Image
ஆளுமைத்திறன் நேர்த்தியான உழைப்பு.  ''வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருநாளும் நேர்ச்சியாகக் கிடைப்பதில்லை. அறிவுத்திறன் ஆளுமைத் திறன் மற்றும் தொடர்முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’' - என்று அழகாகக் கூறியிருக்கிறார் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளர் ஜான் ரஸ்கின் (John Ruskin)... (நேர்ச்சி- தற்செயல்) எந்தத் தொழிலாக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்த இடம் கிடைத்து விடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானே வருவதுமில்லை. *அறிவுத்திறன், சூழ்நிலைக்கேற்ப செயல்படும் மிகைத் திறன்,தொடர் முயற்சி, கடின உழைப்பு, இவை அனைத்தும்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...* அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். இரண்டு மாத காலமாக அவற்றில் ஓரிடத்தில் மட்டும் சிக்கல் ஏற்பட்டது. சடுதியில் ஒருநாள் கப்பலின் முதன்மை பாகத்தில் ஒரு இயந்திரம் இயங்காமல் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் நிறுவனத்தின் பொறிமுறை நிறைஞர்களால் என்ன பழுதானது என்பதைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை... (பொறிமுறை நிறைஞர்- இயந்திரவியல் நிபுணர்/ Engineer) கப்பல் கடலில்...

பணம்தான் வாழ்க்கையா?

Image
🌹மலரும் நினைவுகள்🌹 💐💐🙏🏻🌹🌹💐இன்றைய சிந்தனை.. ................................ ‘’பணம் தான் வாழ்க்கையா’’? ……………………………… வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.  “பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”  இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கி விட மாட்டார்கள்.  உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.  பணப் பிரச்சினையினால் தான் நிறையப் பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்குத் தங்கள் துணையை விட, ஏன் தங்கள் உயிரை விட பணம் தான் முக்கியமாக இருக்கிறது....

செய்தி துளிகள்

Image
*தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதமில்லாத அவல நிலை உருவாகியுள்ளது* *தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்* *திமுக ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது - ஓபிஎஸ்* *திருப்பூர், வெள்ளக்கோவில் பகுதியில் திட்ட அலுவலர் ராஜ ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டிய இளநிலை உதவியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்* *மாநில வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் சட்ட ஒழுங்கினை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்* *ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன* *திமுக ஆட்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு* *சென்னை, கோயம்பேட்டில் செல்போன் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ₨1 லட்சம் பணம், 6 செல்போன்கள் கொள்ளை* *"கெடு ஓவர்"..! - தலைமைச் செயலகம் நோக்கி பாஜக தலைவர்  அண்ணாமலை தலைமையில் சென்னையில் பேரணி*  *திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ப...

முத்தமிழ் விழா

Image
வேலூர் *தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி முத்தமிழ்* விழாவில் *வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவருடன் கல்லூரி முதல்வர் கல்லூரி போரசியர்கள்,பகுதி செயலாளர்கள் S.தாமோதரன்,C.M.தங்கதுரை மாமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன் ஜெயசங்கர் கல்லூரி மாணவிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்

ஆர்பாட்டம்

Image
🚩🚩🚩. மத்திய அரசின் விலை உயர்வை கண்டித்து! வாணியம்பாடியில்.. இடதுசாரி கட்சிகள் சார்பில்--👍---   எல்ஐசி -முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!!....🚩 🚩🚩................ தலைமை....👍தோழர்கள்.. எம்.. இந்துமதி.. cpi-(m ) தாலுகா செயலாளர். . இரா...முல்லை சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு..   .. தொழிலாளர்.. Welfare .. கட்சி சார்பில்.. Ahau . (மாவட்ட தலைவர்) வாசீம்................... Fituc சர்தார் . தொழிலாளர் கட்சி.. தலைமை தாங்கினார்.!👏---------  கண்டன உரையை தோழர்கள்!..🚩🚩- முகமது இஸ்மாயில் வெல்பர் கட்சி மாவட்ட தலைவர்-..... Cpi(m) மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுனன்....... நிறைவுரை. 🚩 சிபிஎம்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் --தோழர்........................k.சாமிநாதன்- போராட்டத்தை முடித்து வைத்தார்!. நன்றி உரை-🚩 ஜாகீர்உசேன். சிபிஐ.. நகர செயலாளர் - 75- பேர் கலந்து கொண்டனர்!!-🚩

பிறந்த நாள் வாழ்த்து

Image
👏👏👏.------------ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!-💐  வாழ்க பல்லாண்டு!!---👏.....  மே -30 -அன்று பிறந்தநாள் -காணும்!.💐. எங்களது- இளைய............. மகள்...  K. S.சித்திரை  செல்வி..!!.........அவர்களுக்கு!..😂.. இனிய------------🎂---- பிறந்த நாள்!!--- வாழ்த்துக்கள்!!-💐 --- அன்புடன்..... கே.. சாமிநாதன்.. Cpi(m) மாவட்ட செயற்குழு உறுப்பினர் -🚩 முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் -moongappattu...&--------🤝...........தலைவர்- பெற்றோர்..ஆசிரியர்-- கழகம்  .. தட்டப்பாறை............ எஸ்.. குமாரி -மாதர் சங்க மாவட்ட துணை தலைவர்..🤝... தாலுக்கா குழு உறுப்பினர். cpi(m)-🚩 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்.. பொன்னாங் கட்டி ஊர்...... தட்டப்பாறை குடியாத்தம்... 🌹 வேலூர் மாவட்டம். ❤ 👍 எங்கள். அன்பு- மகள்.k. S. சித்திரை செல்வி. பிறந்தநாள் நிகழ்வுக்காக. வாழ்த்து தெரிவித்த-!💐 -அனைத்து -உள்ளங்களுக்கும் நன்றி!- தெரிவித்துக் கொள்கிறோம்!!.🙏

மணல் பறிமுதல்

Image
குடியாத்தம் வட்டம், கீழ்பட்டி கிராமத்தில் மங்குலையான் மலையோரம் என்ற பகுதியில் முரம்பு மணல் கடத்தல் நடைபெறுவதாக  மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ரகசிய தகவல் வரப்பெற்றதின் மீது  குடியாத்தம்  வட்டாட்சியர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையிலான குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்த்த போது  ஜேசிபி நம்பர் TN24AE9523 மற்றும் ஒரு டிராக்டர்கள்  TN23VV7693 கைப்பற்றப்பட்டது இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

சொத்தை அரசுக்கு எழுதிக் கொடுத்த அமைச்சர்

Image
*♦️🔸சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்த அமைச்சர் மஸ்தான்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!* *_✍️விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மலைவாழ் மக்கள் (இருளர் பழங்குடியினர்) நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 26.2.21 அன்று தீவனூரில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.இந்த மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது._* *_இருப்பினும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் ஏதும் இல்லாததால் அரசு அதிகாரிகள் மாற்று இடம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக செஞ்சி சட்டமன்ற உறுப்பினரும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தனது சொந்த நிலத்தை கொடுக்க முன்வந்தார்._* *_அதன் அடிப்படையில், செஞ்சி பேரூராட்...

ஆர்பாட்டம் ஏன்?

Image
அனைவருக்கும் வணக்கம்  வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக  *பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் PM கிசான் சம்மன் காணொலி காட்சியின் அவமதிப்பு செய்த* மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து *கண்டன ஆர்பாட்டம்* 01.06.2022 புதன்கிழமை காலை11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடைப்பெறுகிறது  அனைத்து மாவட்ட, மண்டல், அணி, பிரிவு நிர்வாகிகள்  மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் வரவேண்டும்  மண்டல் தலைவர்கள் மண்டலுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் தகவல் தந்து அழைத்துவரவும் ஆர்பாட்டம் ஏன்? பிரதமர் பேச்சை புறக்கணித்த அதிகாரிகள் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,  5வது மாடியில் இன்று காலை 10:00 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுவதாகவும், விழா முடிந்ததும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில்,  மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த்,...

வாழ்த்துவோம் வாங்க

Image
பாசமிகு நமது மக்கள் கட்சியின்  நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறவினர்கள் நண்பர்கள்  அனைவருக்கும் அன்பு வணக்கம். 31-05-2001 அன்று இந்திய தேர்தல் ஆணையம் புதுடெல்லியில் பதிவு செய்யப்பட்ட நமது மக்கள் கட்சி 21 ஆண்டுகள் கடந்து  22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவத்தை பேணிக்காக்க அயராது உழைத்து வருகின்ற நமது மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அன்புடன்  தெரிவித்துக்கொள்கிறேன்.கல்வி பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நமது மக்கள் அனைவரும் வளர்ச்சி அடையும் காலம் வரை நாம் ஒற்றுமையாக உழைத்து மக்களுக்கு சேவைகள் செய்திட வேண்டும்.அரசியல் அதிகாரம் பெற அயராது உழைக்க வேண்டும்.நமது மக்கள் கட்சியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.நமது மக்கள் கட்சியை அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் மக்கள் மனதில் பதிய வைத்து நமது லட்சியத்தை அடைய பாடுபடவேண்டும் என்று அனைவரையும் இந்நன்னாளில் அன்புடன் கேட்டு...

சட்டம் அறிவோம்

Image
சட்டம்அறிவோம் ஐபிசிபிரிவு =  பொருள் பிரிவு 307 = கொலை முயற்சி பிரிவு 302 = கொலைக்கான தண்டனை பிரிவு 376 = கற்பழிப்பு பிரிவு 395 = கொள்ளை பிரிவு 377 = இயற்கைக்கு மாறான செயல் பிரிவு 396 = கொலை செய்யும் போது கொலை பிரிவு 120 = சதி பிரிவு 365 = கடத்தல் பிரிவு 201 = ஆதாரங்களை அழித்தல் பிரிவு 34   = பொதுவான நோக்கம் பிரிவு 412 = ஊர்சுற்றுவது பிரிவு 378 = திருட்டு பிரிவு 141 = சட்டவிரோத சட்டசபை பிரிவு 191 = தவறான ஆதாரங்களை அளித்தல் பிரிவு 300 = கொலை பிரிவு 309 = தற்கொலை முயற்சி பிரிவு 310 = மோசடி பிரிவு 312 = கருக்கலைப்பு பிரிவு 92 = மாற்றுத்திறனாளிக்கு எதிராக அட்டூழிய குற்றங்கள் ஆண்டு 2016 பிரிவு 93 = மாற்றுத்திறனாளிக்கு தகவல் தராமைக்கான தண்டனையை சட்டம் ஆண்டு 2016 பிரிவு 351 = தாக்குதல் பிரிவு 354 = பெண் அவமானம் பிரிவு 362 = கடத்தல் பிரிவு 415 = மோசடி பிரிவு 445 = வீடு உடைத்தல் பிரிவு 494 = வாழ்க்கைத் துணையின் வாழ்நாளில் மறுமணம் பிரிவு 499 = அவதூறு பிரிவு 511 = ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கக்கூடிய குற்றங்களைச் செய்ய முயற்சித்ததற்கான தண்டனை. ▫▪▫▪▫▪▫▪ (1) மாலையில் பெண்களை க...

போக்குவரத்து மாற்றம்

Image
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி இரயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால்  வருகின்ற 01.06.2022 முதல் காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கீழ்கண்டவாறு மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெகுமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்கள் * காட்பாடியிலிருந்து பாகாயம் மார்கமாக செல்லும் அனைத்து நகரத்தட பேருந்துகளும் காட்பாடி இரயில் நிலையலித்திருந்து இயக்கப்படும். குடியாத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து நகரத்தட பேருந்துகள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக TEL வரை இயக்கப்படும்.  தடம் எண். 16B/A, 16/D, 16/T, பேருந்துகள் அனைத்தும் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் வழியாக இயக்கப்படும்.  தடம் எண்.16/E, 16F/A, 16F/B ஆகிய தடப்பேருந்துகள் பள்ளத்துர், புரதராமிக்கு வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து இயக்கப்படும் 16/M, தெரிவித்துள்ளார்கள் முறையே மகாதேவமலை, ரகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு காட்பாடி, வள்ளிமலை கூட்டுரோட்டிலிருந்து இயக்கப்படும். தடம் எண்.20/A, 20A/A, 20A/B, 20B/A, ஆகிய தடங்கள் VIT, EB. கூட்டுரோட...

22 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது மக்கள் கட்சி

Image
பாசமிகு நமது மக்கள் கட்சியின்  நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறவினர்கள் நண்பர்கள்  அனைவருக்கும் அன்பு  வணக்கம். 31-05-2001 அன்று இந்திய தேர்தல் ஆணையம் புதுடெல்லியில் பதிவு செய்யப்பட்ட நமது மக்கள் கட்சி 21 ஆண்டுகள் கடந்து  22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவத்தை பேணிக்காக்க அயராது உழைத்து வருகின்ற நமது மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அன்புடன்  தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நமது மக்கள் அனைவரும் வளர்ச்சி அடையும் காலம் வரை நாம் ஒற்றுமையாக உழைத்து மக்களுக்கு சேவைகள் செய்திட வேண்டும்.அரசியல் அதிகாரம் பெற அயராது உழைக்க வேண்டும். நமது மக்கள் கட்சியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.நமது மக்கள் கட்சியை அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் மக்கள் மனதில் பதிய வைத்து நமது லட்சியத்தை அடைய பாடுபடவேண்டும் என்று அனைவரை...

பிரதமர் பேசினார்

Image
காணொலி காட்சி வாயிலாக பிரதமர் பேசினார் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,  5வது மாடியில் இன்று காலை 10:00 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த்,  மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், தி.மு.க., பிரமுகர் வள்ளலார் ரமேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் பிரம்மாண்டமான டிவியில் பிரதமரின் காணொலி வாயிலாக அனைத்து மாநில மக்களுடன் உரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

தற்கொலை

Image
தற்கொலை ஒரு தீர்வல்ல காட்பாடி அருகே தந்தை, மகள் துாக்கிட்டு தற்கொலை வேலுார் காட்பாடி டி.கே. புரத்தை சேர்ந்தவர் தினகரன், 52. இவர் காட்பாடி காந்திநகர் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார்.  இவர் மனைவி சிவகுமாரி, 45, உடல் நலக்குறைவால் கடந்தாண்டு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 16 வயதுள்ளவர்   அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும், இரண்டாவது மகள் 14 வயதுள்ளவர் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். மனைவி இறந்ததால் மனவேதனையில் இருந்த தினகரன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். இதை அவரது மகள்களிடம் கூறியதற்கு, நீங்கள் இல்லாவிட்டால் நாங்களும் அனாதைகளாகிவிடுவோம் என்று கூறி மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு, நேற்று  நள்ளிரவு 12:00 மணிக்கு வீட்டில், தினகரன், இரண்டு மகள்கள் பேன் கொக்கியில் துாக்கிட்டு தொங்கினர். இதில் பாரம் தாங்காமல் 16 வயது மகள்  கீழே விழுந்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் தினகரன், இரண்டாவது மகள் பிருந்தா துாக்கில...

பாராட்டு

Image
ராணிப்பேட்டை *மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்*  *மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களை* *இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்ரகுநாதன் * சந்தித்து 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 158.914 மெட்ரிக்டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி *ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது.* அதனை பாராட்டி ஆட்சியர் அவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆயுட்கால *உறுப்பினர்கள் என்.டி.சீனிவாசன் ,கே.முஹம்மத் அயூப் ஜி.முஹம்மத் பஹிம் ,கே.ஓ.நிஷாத் அஹ்மத் ,எச்.முஹம்மத் ஹாஷிம் ஆகியோர்கள் உடனிருந்தனர்.*

உதவி

Image
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றியம் தேவி செட்டி குப்பம் ஊராட்சி கிராமத்தை சேர்ந்த *.சாந்தகுமார்* என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து *வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் தனது சொந்த பணத்தில் இருந்து *ரூபாய் 50 ஆயிரம்* சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக வழங்கினார் அவருடன் மத்திய ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன் அவைத்தலைவர் R.C.மணிமாறன் அவர்கள் உடன் இருந்தனர்

சிகிச்சைக்கு உதவி

Image
வேலுர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி மக்களின் செல்ல பிள்ளை என்பதை மத்திய ஒன்றிய தேவிசெட்டி குப்பத்தை சார்ந்த சாந்தகுமாருக்கு சிறுநீரகஅறுவை சிகிச்சைக்கு தன் சொந்த பணத்தில் ரூபாய்50.000வழங்கினார் இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த இளம் புயல் அண்ணன் APN MA MLA AVLக்கு வசந்தநடை ஊராட்சி திமுக கழகத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்களுடன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்   P . MUNSO அனைக்கட்டு கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் திமுக கிளைகழக செயலாளர் வசந்தநடை

திருப்பதிக்கு இலவச தரிசனம்

Image
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க *திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுப்பினர் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்* நந்தகுமார் தன்சொந்த செலவில் *வேலூர் மாவட்ட திமுக* அலுவலகத்தில் இருந்து பொது மக்கள் தினமும் திருப்பதி செல்லும் வகையில் 12 பேர் அமரக்கூடிய வாகனம் இன்று காலையில் 6 மணிக்கு சென்றது. இது போன்ற சிறப்பான செயல்திட்டத்தை மக்களுக்காக தொடர்ந்துசெய்துவரும் ஏ பி நந்தகுமார் எம்எல்ஏ அவர்களுக்கு பெருமாள் பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

காலை தரிசனம்

Image
🚩 *காலை தரிசனம் !* *முருகப் பெருமான் தரிசனம் !!* சுபகிருது வருடம் :  வைகாசி மாதம் 17 ஆம் நாள்....! மே மாதம் : 31ஆம் தேதி :  (31-05-2022) இன்று செவ்வாய்க்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-02 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : பிரதமை !! பிரதமை.. இரவு 07-00 மணி வரை ! அதன் பிறகு துவிதியை ! இன்றைய நட்சத்திரம் :  ரோகிணி... காலை 10-05 மணி வரை ! அதன் பிறகு மிருகசீருஷம் !! இன்று  மேல் நோக்கு நாள் ! யோகம் :   சித்தயோகம் !  அமிர்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! குளிகை :   மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  08-00 மணி முதல் 09-00 மணி வரை ! மதியம் :  12-00 மணி முதல் 01-00 மணி வரை ! இரவு : 07-00 மணி முதல் 08-00 மணி வர...