Posts

Showing posts from March, 2023

கைது

Image
திருட்டு, வழிப்பறி வழக்கில் 2 பேர் குண்டாசில் கைது ஆற்காடு, மார்ச்  ஆற்காடு அருகே, திருட்டு, வழிப்பறி வழக்கில் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரியை சேர்ந்தவர்கள் சசிகுமார், 46, திருவள்ளுவர் மாவட்டம், மதுரவாயிலை சேர்ந்த ரமேஷ், 51, ஆகியோரை திருட்டு, வழிப்பறி வழக்கில் திமிரி போலீசார் கடந்த மாதம் 27 ல் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தலா 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட  கலெக்டர் வளர்மதிக்கு, எஸ்.பி.,  கிரண்ஸ்ருதி பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் இன்று அளித்தனர்.

வழக்கு

Image
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு வேலுார், மார்ச்  வேலுாரில், 1. 25 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்ப போலீசார் வழக்கு பதிவு  செய்தனர். வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு ஊராட்சி உதவி இயக்குனர் ( தணிக்கை )  பிரிவு உள்ளது. வேலுார் மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் 2013 ம் ஆண்டு முதல் நடந்து வரும்  100 நாள் வேலை வாய்ப்பு திட்டப்பணிகள் குறித்த தணிக்கை கடந்த 15 ம் தேதி நடந்தது. அப்போது, கிராம ஊராட்சி  செயலாளர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருவதாக வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   அன்று மாலை 5:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி, கணக்கில் வராத ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். விசாரணையில்,  இந்த பணத்தை ஊராட்சி ச...

தெரியுமா

Image

கைது

Image
தோல் தொழிற்சாலைகளில் திருடிய 3 பேர்  கைது ஆம்பூர், மார்ச்  ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், உம்மராபாத் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் வந்த ஒரு  காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ஆட்டுத்தோல் இருந்தது. காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கீழ்கன்றம்பல்லியை சேர்ந்த பிரதீப், 25, முருகன், 41, மேல்விஷாரம் அஜூபாஷா, 47, என்பதும், ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஆட்டுத்தோல்களை திருடியதும், கடந்த ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தோல்களை திருடியதும் தெரியவந்தது. உம்மராபாத் போலீசார் அவர்களை  கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆட்டுத்தோலை பறிமுதல் செய்தனர்.

தம்பதி கைது

Image
ரூ 500 செலுத்தினால் ரூ 5 ஆயிரம் மளிகை பொருட்கள் தருவதாக ரூ 20 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது ராணிப்பேட்டை, மார்ச்  ராணிப்பேட்டை அருகே, 500 ரூபாய் செலுத்தினால் 5 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது  செய்தனர். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் இன்று (27) கூறியதாவது: ராணிப்பேட்டை சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் மீரா, அவரது கணவர் தயாளன். இவர்கள் இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளம் என்ற அமைப்பின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளாக உள்ளதாக கூறிக்கொண்டு, கட்டட தொழிலாளர்கள், ஏழைகளிடம் 500 ரூபாய் செலுத்தினால் ஆறு மாதம் கழித்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்படும் என                 அறிவித்தனர். இதை நம்பி ஏராளமானோர்  பணத்தை செலுத்தினர். நேற்று முன்தினம் (26) ராணிப்பேட்டை அருகே அம்மூரில் உள்ள திருமண மண்டபத்தில் மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்தனர்.  பணம் கட்டியவர்கள் அங்கு சென்ற போது ஒரு சிலருக்கு மட்டும் 300 ரூபா...

விழா

Image
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா வேலுார், மார்ச்  வேலுார் பிராமணர் சங்கத்தின் சார்பில் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில்  நடந்தது. சங்கத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவி லலிதா வரவேற்றார்.  முரளிதர சுவாமிகள் பங்கேற்று, சோபகிருது ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தினமும் பஞ்சாங்கத்தை பார்த்து வாரம், திதி, கரணம், யோகம், நட்சத்திரம் படி செயல்களை செய்தால் அவற்றால் சக்தி கிடைக்கப்பட்டு நல்லது நடக்கும். பூஜைகள்  செய்து, சனாதன தர்மத்தை கடைபிடித்து, நாம்  செயல்களை  செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் ஜெயகுமார், சந்தானம், ராஜகோபால், வரதராஜன், கணபதி, ராஜசேகர், லட்சுமணன்,  துணைத்தலைவர் ராமகிருஷ்ணன்,  ஆலோசகர் சத்தியமூர்த்தி, செயலாளர் சேகர், மகளிரணி செயலாளர்கள் சுகந்தி, பிருந்தா, லட்சுமணன், நிர்மலா பங்கேற்றனர். பிராமணர் சங்க  செய்தி தொடர்பாளர் ராஜா நன்றி  கூறினார்.

நல்ல நேரம்

Image
🚩  *காலை தரிசனம் ---!* *கிருத்திகை தரிசனம்---------- !!* "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே...! சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 12 ஆம் நாள் ! மார்ச் மாதம் : 26 ஆம் தேதி ! (26-03-2023)  ஞாயிற்றுக்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : பஞ்சமி ! பஞ்சமி.. இரவு 07-45 மணி வரை ! அதன் பிறகு    சஷ்டி !! இன்றைய நட்சத்திரம் :  கார்த்திகை.. மாலை 05-00 மணி வரை ! அதன் பிறகு ரோகிணி !! யோகம் :  சித்தயோகம் !  இன்று கீழ் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மாலை :  04-30 மணி முதல் 06-00 மணி வரை !! எமகண்டம் :  மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! குளிகை :   மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! சூலம் : மேற்கு ! பரிகாரம் : வெல்லம் !! கரணம் :  காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 07-00 மணி முதல் 09-00 மணி வரை ! 11-00 மணி முதல் 12-00 மண...

நேரம்

Image
🚩 *காலை தரிசனம் ---!* *சோம வார ஷஷ்டி தரிசனம்---------- !!* *அருள்மிகு திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்....!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 13 ஆம் நாள் ! மார்ச் மாதம் : 27 ஆம் தேதி ! (27-03-2023)   திங்கட்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : ஷஷ்டி ! ஷஷ்டி.. இரவு 08-45 மணி வரை ! அதன் பிறகு    ஸப்தமி !! இன்றைய நட்சத்திரம் :  ரோகிணி.. மாலை 06-30 மணி வரை ! அதன் பிறகு மிருகசீருஷம் !! யோகம் :  அமிர்தயோகம் !  இன்று மேல் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்றும் துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! எமகண்டம் :  காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! சூலம் : கிழக்கு ! பரிகாரம் : தயிர் !! கரணம் :  காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை ! நல்ல நேரம் :  மதியம் :  12-00 மணி முதல் 02-00 மணி வரை ! 03-00 மணி முதல் 04-00 மணி வரை ! மாலை :...

பாமக தலைவர் அன்புமணி பேட்டி,

Image
2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,  தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் அன்புமணி திருப்பத்துார், மார்ச்  2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,  தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். திருப்பத்துாரில்  இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தினால்  48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19 வது நபர் தற்கொலை  செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக கவர்னர்தான். தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் விற்பதற்கு  வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு பிறகுதான் மது விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க 17 ஆயிரம் போலீசார், ஒரு டி.ஜி.பி., என உருவாக்கப்பட்டு தடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் அதிகளவு போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்தியாவி...

போலீஸ் குவிப்பு

Image
🔸  *Escape*  *வேலூர் சிறுவர் இல்லத்தில் இருந்து 6 பேர் தப்பி ஓட்டம்.* *3 பேரை தாக்கிவிட்டு* *டிஐஜி* *எஸ்பி விரைவு.* *போலீஸ் குவிப்பு.*

ஓட்டம்

Image
வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 3 பேரை தாக்கிவிட்டு  6 பேர் தப்பியோட்டம் வேலுார், மார்ச்  வேலுார் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து மூன்று பேரை தாக்கிவிட்டு ஆறு பேர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறை பகுதியில் அரசினர் பாதுகாப்பு இல்லம் உள்ளது.( அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம்)  இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த இளம் வயதுள்ள  42 சிறுவர்கள்   அடைக்கப்பட்டுள்ளனர்.   கடந்த 25 ல் மாலை 4:00 மணிக்கு இங்கிருந்த ஒரு சிறுவன் தன்னை வேறு ஊரில் உள்ள இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி இல்லத்தின் சுவற்றின் மீது ஏறி நான்கு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினார்.  நான்கு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரவு 8:00 மணிக்கு அந்த சிறுவன் கீழே இறங்கினார். உள்ளே சென்ற அந்த சிறுவன் அன்று இரவு 8:30 மணிக்கு மேலும் 10 சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு இல்லத்திலிருந்த பாதுகாவலர்களை தாக்கி வெளியே துறத்தி விட்டு, இல்லத்தை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ப...

ஆர்பாட்டம்

Image
லஞ்சம் வாங்கும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் ஆர்பாட்டம் வேலுார், மார்ச்  லஞ்சம் வாங்கும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் சங்கங்களின்  கூட்டமைப்பின் சார்பில் வேலுாரில்  ஆர்பாட்டம் நடந்தது. வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தனியார்  பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நரசரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ். இ பள்ளிகள் சங்கத்தின் மநில பொதுச்  செயலாளர்   நந்தகுமார் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தனியார் பள்ளிகளால் அரசுக்கு எந்தவித நிதிச்சுமை ஏற்படவில்லை.  லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கி,  பல கோடி ரூபாய்கள் அரசுக்கு வரியாக செலுத்தி, தரமான கல்வியை தந்து தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறோம். தனியார் பள்ளிகள் வேலுார் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் புதுப்பிக்க, பள்ளிகளை பார்வையிட...

சண்டை

Image
வேலூர்  25-3-23  முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும்- அவதூறாக பேசும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம மக்கள் சாலை மறியல்- அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  வேலூர் மாவட்டம் குடியாத்தம்,குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் உள்ள கல்லூர்,குறிஞ்சி நகர், பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதுஇங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி என்பவரிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டால் அவர் அவதூறாக பேசுவதாகவும் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் பலமனேரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம்- பலமனேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் குடியாத்தம் வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்  அப்பொழுது முறையாக தண்ணீர் வி...

விழா

Image
வேலூர்  25-3-23 அரியூரில் விளையாட்டு கலையோகாவில் சாதனை புரிந்த மாணவ,மாணவிகளின் அன்னையர்களுக்கு கிரீதா பாரதி ஜீஜாமாதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது - மாணவர்களுக்கு செல்போனால் உடல் நலன் பாதிப்பு மன அழுத்தம் ஏற்படுவதால் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்த அனுமதிக்க கூடாது - நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி விருதுகளை வழங்கி பேச்சு  _______________________________________________________________         வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி மண்டபத்தில் தங்ககோவில் மற்றும் கிரீதா பாரதி அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாராயணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான பாலாஜி தலைமையில் கிரீதா பாரதி ஜீஜாமாதா விருதுகள் வழங்கும் விழாவானது நடந்தது இந்த விழாவில் ,ஒருங்கிணைப்பாளர் அசோக்,திருநாவுக்கரசு ,தியாகசந்தன் உள்ளிட்ட பலரும் திரளான மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் பங்கேற்றனர் மாணவியின் பரத நாட்டியம் மற்றும் உடலை வில் போல் வளைத்த யோகாசனம் ஆகியவைகளும் செய்து காண்பிக்கப்பட்டது இவ்விழாவில் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற கார்ணாம்பட்டு ...

முற்றுகை

Image
வேலூர்  25-3-23 பேரணாம்பட்டு கிராம சாவடி முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம். நடத்தினர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கிராம சாவடி முன்பு ஒண்ணாவது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தனியாரிடமிருந்து அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் அமைத்துதரக்கோரி பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில்  கிராமச் சாவடி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பேரணாம்பட்டு தரக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது இவர் தரக்காடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார் .2006ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தரக்காடு பகுதியில் 49 பேருக்கு வருவாய்துறை மூலம் பட்டா வழங்கியுள்ளனர். ஒரு நபருக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை இதனால் ரியாஸ் அஹமத் தனக்கும் பட்டா வேண்டும் எனமுயற்சி செய்து வந்தார். ரியாஸ் அஹமத் என்பவர் கட்டியுள்ள வீடு சாலை புறம்போக்கு எனக்கூறி ஒன்னாவது வார்டு கவுன்சிலர் அதிகூர்  ரஹ்மான் தலைமையில் அப்பகுதி மக்கள் கடந்த வாரம்   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகூர் ரஹ்மான் உட்பட 9 பேர் மீது க...

பேட்டி

Image
ராகுல்  காந்தி பதவி நீக்கம்  செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல அமைச்சர் துரைமுருகன் வேலுார், மார்ச்  ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல  என வேலுாரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வேலுாரில் இன்று மாலை நடந்தது. மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ., வுமான நந்தகுமார் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். வரும் எம்.பி., தேர்தலை எதிர்கொள்ள வேலுார் தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்த வேண்டும், வரும் ஜூன் மாதம் கலைஞர் நுாற்றாண்டு விழா தொடங்குவதால் அதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   பின்னர்  அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது, குற்றத்தின் அடிப்படையில் இது நடந்ததாக யாரும்  கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்தது. அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ச...

விழா

Image
வேலூர்  25-3-23 அரியூரில் விளையாட்டு கலையோகாவில் சாதனை புரிந்த மாணவ,மாணவிகளின் அன்னையர்களுக்கு கிரீதா பாரதி ஜீஜாமாதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது - மாணவர்களுக்கு செல்போனால் உடல் நலன் பாதிப்பு மன அழுத்தம் ஏற்படுவதால் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்த அனுமதிக்க கூடாது - நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி விருதுகளை வழங்கி பேச்சு  _______________________________________________________________         வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி மண்டபத்தில் தங்ககோவில் மற்றும் கிரீதா பாரதி அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாராயணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான பாலாஜி தலைமையில் கிரீதா பாரதி ஜீஜாமாதா விருதுகள் வழங்கும் விழாவானது நடந்தது இந்த விழாவில் ,ஒருங்கிணைப்பாளர் அசோக்,திருநாவுக்கரசு ,தியாகசந்தன் உள்ளிட்ட பலரும் திரளான மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் பங்கேற்றனர் மாணவியின் பரத நாட்டியம் மற்றும் உடலை வில் போல் வளைத்த யோகாசனம் ஆகியவைகளும் செய்து காண்பிக்கப்பட்டது இவ்விழாவில் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற கா...

வாக்குவாதம்

Image
வேலூர்  25-3-23  முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும்- அவதூறாக பேசும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் கிராம மக்கள் சாலை மறியல்- அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  வேலூர் மாவட்டம் குடியாத்தம்,குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் உள்ள கல்லூர்,குறிஞ்சி நகர், பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதுஇங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி என்பவரிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டால் அவர் அவதூறாக பேசுவதாகவும் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் பலமனேரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம்- பலமனேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் குடியாத்தம் வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்  அப்பொழுது முறையாக தண்ணீர் வி...

முற்றுகை

Image
வேலூர்  25-3-23 பேரணாம்பட்டு கிராம சாவடி முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம். நடத்தினர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கிராம சாவடி முன்பு ஒண்ணாவது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தனியாரிடமிருந்து அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் அமைத்துதரக்கோரி பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில்  கிராமச் சாவடி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பேரணாம்பட்டு தரக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது இவர் தரக்காடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார் .2006ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தரக்காடு பகுதியில் 49 பேருக்கு வருவாய்துறை மூலம் பட்டா வழங்கியுள்ளனர். ஒரு நபருக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை இதனால் ரியாஸ் அஹமத் தனக்கும் பட்டா வேண்டும் எனமுயற்சி செய்து வந்தார். ரியாஸ் அஹமத் என்பவர் கட்டியுள்ள வீடு சாலை புறம்போக்கு எனக்கூறி ஒன்னாவது வார்டு கவுன்சிலர் அதிகூர்  ரஹ்மான் தலைமையில் அப்பகுதி மக்கள் கடந்த வாரம்   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகூர் ரஹ்மான் உட்பட 9 பேர் மீது க...

பேட்டி

Image
வேலூர்      25-3-23 ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் கருத முடியாது இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல மெஜாரிட்டியுடன்  பெரிய நாட்டை ஆளும் கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறது   - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் அதனை பெட்டிற்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது நீர் வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் பேட்டி  __________________________________________        வேலூர்மாவட்டம்,வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார் இந்த கூட்டத்தில் ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா துவங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வாரியா...

பேட்டி

Image
வேலூர்      25-3-23 ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் கருத முடியாது இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல மெஜாரிட்டியுடன்  பெரிய நாட்டை ஆளும் கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறது   - ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் அதனை பெட்டிற்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது நீர் வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் பேட்டி  __________________________________________        வேலூர்மாவட்டம்,வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார் இந்த கூட்டத்தில் ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா துவங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வாரியா...

நாசம்

Image
அரசு கூர்நோக்கு இல்லத்தில் ரூ 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உடைத்து சிறுவர்கள் நாசம் வேலுார், மார்ச்  வேலுாரில் உள்ள அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை  உடைத்து சிறுவர்கள் நாசம் செய்து தப்பிக்க திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டரை பகுதியில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த இளம் வயதுள்ள  42 சிறுவர்கள்   அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் ஒரு சிறுவன் தன்னை வேறு ஊரில் உள்ள இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி இன்று மாலை 4:00 மணிக்கு பள்ளி சுவற்றின் மீது ஏறி தர்ணா போராட்டம் நடத்தினார். பேச்சு வார்த்தைக்கு சென்ற அதிகாரிகளை செங்கற்கள், இரும்பு ராடு ஆகியவற்றால் தாக்கினார். நான்கு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரவு 8:00 மணிக்கு அந்த சிறுவன் கீழே இறங்கினார். இல்லத்தின் உள்ளே சென்ற அந்த சிறுவன் இரவு 8:30 மணிக்கு மேலும் 10 சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு இல்லத்திலிருந்த பாதுகாவலர்களை தாக்கி வெளியே துறத்தி விட்டு, இல்லத்தை உள...

ரகளை

Image
வேலூர்      25-3-23    வேலூர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட இளம் சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடல் பகலில் ஒரு நபர் மட்டும் சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார் உழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி உயிருக்கு பாதுகாப்பில்லை என அச்சம்  ________________________________________      வேலூர்மாவட்டம்,காகிதப்பட்டறையில் ஆட்சியர் அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் சார்பில் நடத்தபடும் சிறுவர்கள் இளம் சிறார்கள் (குற்றம் செய்தவர்கள் ) பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது இதில் 42 இளம்  குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு குற்றவாளி மாலை தன்னை வேறு இல்லத்திற்கு மாற்ற கூடாது என கூறி சுவற்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இரும்பு ராடு செங்கற்களை கொண்டு அங்கு வந்தவர்களையும் தாக்கினார் பின்னர்  4 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மேலே இருந்து உள்ளே சென்ற அந்த இளம் குற்றவாளி மேலும் 10 பேருடன் இணைந்துகொண்டு அங்கிருந்த பாதுகாவலர்களை அடித்...

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !* *குருவார தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 09 ஆம் நாள் ! மார்ச் மாதம் : 23 ஆம் தேதி ! (23-03-2023)  வியாழக்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : துவிதியை ! துவிதியை.. இரவு 09-15 மணி வரை ! அதன் பிறகு  திரிதியை !! இன்றைய நட்சத்திரம் :  ரேவதி... மாலை 04-45 மணி வரை ! அதன் பிறகு அஸ்வினி !! யோகம் :  சித்தயோகம் ! அமிர்தயோகம் !! இன்று சம நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று மாலை 04-45 மணி வரை சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் ! அதன் பிறகு கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !! ராகுகாலம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் :  காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை :   காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் :  மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 07-00 மணி வரை...

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !* *அம்பாள் தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 10 ஆம் நாள் ! மார்ச் மாதம் : 24 ஆம் தேதி ! (24-03-2023)  வெள்ளிக்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : திரிதியை ! திரிதியை.. இரவு 08-15 மணி வரை ! அதன் பிறகு   சதுர்த்தி !! இன்றைய நட்சத்திரம் :  அஸ்வினி.. மாலை 06-15 மணி வரை ! அதன் பிறகு  பரணி !! யோகம் :  அமிர்தயோகம் ! சித்தயோகம் !! இன்று சம நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் :  மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் :  மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !! 10-00 மணி முதல் 10-30 மணி வரை !! மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !! இரவு : 08-00 மணி முதல் 11-00 ...

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !* *அம்பாள் தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 10 ஆம் நாள் ! மார்ச் மாதம் : 24 ஆம் தேதி ! (24-03-2023)  வெள்ளிக்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : திரிதியை ! திரிதியை.. இரவு 08-15 மணி வரை ! அதன் பிறகு   சதுர்த்தி !! இன்றைய நட்சத்திரம் :  அஸ்வினி.. மாலை 06-15 மணி வரை ! அதன் பிறகு  பரணி !! யோகம் :  அமிர்தயோகம் ! சித்தயோகம் !! இன்று சம நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் :  மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் :  மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !! 10-00 மணி முதல் 10-30 மணி வரை !! மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !! இரவு : 08-00 மணி முதல் 11-00 ...

நல்ல நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !* *வளர்பிறை சதுர்த்தி தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 11ஆம் நாள் ! மார்ச் மாதம் : 25 ஆம் தேதி ! (25-03-2023)  சனிக்கிழமை !! சூரிய உதயம் :  காலை : 06-27 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-28 மணி அளவில் இன்றைய திதி : வளர்பிறை : சதுர்த்தி ! சதுர்த்தி.. இரவு 08-00 மணி வரை ! அதன் பிறகு    பஞ்சமி !! இன்றைய நட்சத்திரம் :  பரணி... மாலை 04-30 மணி வரை ! அதன் பிறகு கார்த்திகை !! யோகம் :  சித்தயோகம் ! அமிர்தயோகம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று இரவு 10-30 மணி வரை கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்  ! அதன்பிறகு.. துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !! ராகுகாலம் :  காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! எமகண்டம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! குளிகை :   காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! சூலம் :  கிழக்கு ! பரிகாரம் : தயிர் !! கரணம் :  மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை : 05-00 ...

பேட்டி

Image
வேலூர்மாவட்டம் துரைமுருகன் பேட்டி ஒரு மாபெரும் நாட்டை ஆளும் மாபெரும் தனி மெஜாரிட்டியுடன் உள்ள கட்சி ஒரு தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ ஆன்லைன் சூதாட்டம்   தடைக்கு இந்த முறை கண்டிப்பாக ஒப்புதல் அளித்து ஆக வேண்டும்  இந்த முறை பெட்டுக்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது

பறிமுதல்

Image
வேலூர் மாவட்டம்  தேதி 25.03.2023. ♻️ *வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ள சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*  ♻️இந்த நிலையில் 25.03.2023- ம் தேதி வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. பழனிமுத்து, அவர்கள் தலைமையிலான போலீசார் குப்பம்பட்டி கானாத்து ஓடைக்கரை அருகே சோதனை செய்தபோது  எதிரி சாமி S/O, துரைசாமி, செங்காடு கிராமம் அணைக்கட்டு என்பவர் ஒரு லாரி ட்யூபில் சட்டவிரோதமான விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 25 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் அதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு எதிரி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அழிப்பு

Image
வேலூர் மாவட்டம்  தேதி: 25.03.2023. ♻️ *பேரணாம்பட்டு சாதகர் மலையின் மேல் சோதனை செய்து கள்ளச்சாராயம் ஊழல்கள் அழிக்கப்பட்டது.*  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி, அவர்கள் தலைமையிலான போலீசார் இன்று பேரணாம்பட்டு சாதகர் மலையின் மேல் சோதனை செய்து சுமார் 1200 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல்களை (F/W) அளித்தனர்.

பரிசளிப்பு விழா

Image
கிரிடா பாரதி ஜிஜா மாதா பிரஸ் கார் விருது விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ மாணவியர்களின் தாயாருக்கு இந்த விருது வழங்கிய கௌரிப்பது மிக பெருமைக்குரியதாகும். இன்றைய காலத்தில் செல்போனுக்கு அடிமையாகி மூளை செயல்பாடு குறைந்து வருகிறது சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வடைந்து காணப்படுகின்றனர் மேலும் மன அழுத்தம் உடல் பருமன் சர்க்கரை வியாதி உள்ளிட்டவை குழந்தைகளை எளிதில் தாக்குகிறது இதை தவிர்க்க நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விளையாட்டில் ஆறுமுகம் மாணவர்கள் கவனம் சிதறாது இதனால் படிப்பிலும் அவர்கள் கவனம் சிதறல் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த செயலுக்கு கிரீடம் பாரதி உறுதுணையாக உள்ளது. தினமும் ஒரு மணி நேரம் விளையாட மாணவர்கள் அனுப்ப வேண்டும். யோகா விளையாட்டு ஆர்வம் அதிகமானால் உடல் உறுதி பெறும் பெற்றோர்கள் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆர்பாட்டம்

Image
வேலூர்,மார்ச்.25- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே  தமிழ்நாடு பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்காமல் அலைக்கழிக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4.50 லட்சம் மாணவர்கள் படிப்பதற்காக ஆர்.டி .இ  2 ஆண்டு கல்வி கட்டண பாக்கியம் உடனே வழங்க வேண்டும்.பள்ளி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜா மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார் மாநில துணைத்தலைவர் இன்பராஜ், சட்ட ஆலோசகர் ஜெயவேலு உள்பட தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியை,ஆசிரியர்கள் திரளான கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டம்

Image
லஞ்சம் வாங்கும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் ஆர்பாட்டம் வேலுார், மார்ச் 25 லஞ்சம் வாங்கும் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் சங்கங்களின்  கூட்டமைப்பின் சார்பில் வேலுாரில்  ஆர்பாட்டம் நடந்தது. வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தனியார்  பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நரசரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ். இ பள்ளிகள் சங்கத்தின் மநில பொதுச்  செயலாளர்   நந்தகுமார் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தனியார் பள்ளிகளால் அரசுக்கு எந்தவித நிதிச்சுமை ஏற்படவில்லை.  லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கி,  பல கோடி ரூபாய்கள் அரசுக்கு வரியாக செலுத்தி, தரமான கல்வியை தந்து தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறோம். தனியார் பள்ளிகள் வேலுார் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் புதுப்பிக்க, பள்ளிகளை ...