Posts

Showing posts from January, 2025

தகனம்

Image
*🔹🔸தகனம் செய்த பிறகு திரும்பி வந்த நபர்..* *அதிர்ந்து போன குடும்பத்தினர்*😱 - *தகனம் செய்த பிறகு உயிருடன் வந்த நபர்* *▪️. மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே ஆற்றில் மிதந்தது காணாமல் போன செல்வராஜின் (62) சடலம் என நினைத்து மருத்துவமனை பிரேத பரிசோதனைக்குப் பிறகு, தகனம் செய்த அவரது குடும்பத்தினர்.* *வெளியூருக்குச் சென்றிருந்த செல்வராஜ் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி.* *▪️. "30ம் நாள் படையல் வைத்துவிட்டீர்களா?* *சரக்கு எங்கே?* *போய் எடுத்துட்டு வாங்க" என குடும்பத்தினரிடம் சிரித்துக்கொண்டே செல்வராஜ் கேள்வி.* *தகனம் செய்யப்பட்டது யாருடைய சடலம் என கண்டறிய போலீசார் தீவிரம்* #Mayiladuthurai *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*     *ѕυи∂αγ 𝟬𝟱, נαи. 𝟮𝟬𝟮𝟱* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

இலவச கண் சிகிச்சை முகாம்

Image
நாள்.06.01.2025 *சேர்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சென்னை அகல்வால் கண் மருத்துவமனை காட்பாடி ரெட்கிராஸ், எஸ்.வி.வி.ஜெயின் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்* &&&&&&& வேலூர் மாவட்டம் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்டம், சென்னை அகல்வால் கண் மருத்துவமனை, காட்பாடி ரெட்கிராஸ், எஸ்.வி.வி. ஜெயின் அறக்கட்டளை இணைந்து இன்று சேர்க்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலை 9.00 மணியளவில் கிராமபுற மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.  எஸ்.வி.வி.ஜெயின் அறக்கடளையின் அறங்காவலர் ச.ரமேஷ்குமார்ஜெயின் முதல்வர் பொறுப்பு முனைவர் அ.மு.சரவணன் நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பா.உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், கண்சிகிச்சை முகாமினை தொடக்கி வைத்தார்.  கண் மருத்துவ அலுவலர் கே.பிரகதி தலைமையில் கண் பரிசோதகர்கள் சுகேந்திரன், சாம்பவி...

சோர்ந்து விடாதீர்

Image
எதுவும் நிரந்தரமல்ல எல்லாமே மாறும். எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாடு நாயுடு!! அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!! கடைசி வரை பிரதமரை சந்திக்க  வாய்ப்பு கிடைக்கவில்லை! ஏமாற்றுத்துடன் திரும்பினார். 73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்! கடைசி நேரத்தில் கூட சிறை! இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர். தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்த பிரதமர் சந்திக்காமல் தவறவிட்டாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார்.கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் வலிய பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல! எல்லோருக்குமானது! அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்! உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள். வரவேண்டியது தானே வரும். முகநூலில் ரசித்தது. சுப்ரமணியன். நீதி_சாஸ்திரம்...🍒🍒 இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் ...

பெருமாளுக்கு பட்டு சேலை

Image
*ஏழுமலையானுக்கு தீப்பெட்டியில் அடங்கும் பட்டு சேலை வழங்கிய நெசவு தொழிலாளி* திருப்பதி:தெலுங்கானா மாநிலம், ஸ்ரீசில்சை சேர்ந்தவர் நல்ல விஜய். கைத்தறி தொழிலாளி.  இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். அப்போது தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலையை ஏழுமலையானுக்கு வழங்கினார். ஆண்டுதோறும் வெமுல வாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலைகளை நெய்து வழங்குவது வழக்கம்.  200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளியில் 5½ மீட்டர் நீளமும், 48 அடி அங்குலத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை வழங்கியதாக தெரிவித்தார். இந்த பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது என்றார்.

சோதனை நிறைவு

Image
44 மணி நேர E.D சோதனை நிறைவு* வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.     தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடக்கம்* தாம்பரம்  - கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து மாலை 4 மணி வரை ரத்து  விருதுநகர் அருகே 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர் கைது* ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சசிபாலன் கைது பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீசார்   பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்* தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் உட்பட 5 ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன தாம்பரம் - கன்னியாகுமரி, சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன அமெரிக்க மாடல் எனக் கூறி ஆன்லைன் டேட்டிங் செய...

தீர்ப்பு

Image
செல்ல பிராணிகள் மலம், சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கும் விதி செல்லாது:* *அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் சிவில் கோர்ட் தீர்ப்பு* சென்னை:* *▪️. செல்லப் பிராணிகள் மலம் கழித்தால் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், இயற்கை உபாதைகளுக்காக அழைத்துச் செல்ல லிப்ட் பயன்படுத்த தடை என்ற அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.* 🔘. சென்னையில் உள்ள ஆர்ட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 78 வயது மூதாட்டி மனோரமா ஹிதேஷி, நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டுப்பாடுகள் விதித்து விதிகள் கொண்டு வந்தது. அந்த விதிகளில், அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்ல பிராணிகள் மலம் கழித்தால் அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முதல் முறை 1000 ரூபாயும், இரண்டாவது முறை 2000 ரூபாயும், மூன்றாவது முறை 3000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். 🔘. மூன்று முறைக்கு மேலானால் குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட...

நீதி

Image
இன்றைய சிந்தனை🙏               🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 உலகில் எத்தனை வகையான ஜீவன்கள் இருக்கின்றனவோ, அத்தனை வகையான மொழிகளும் இருக்கின்றன. நமக்குத் தான் அது புரிவதில்லை. மனிதன் என்ற ஒரு தனி சிருஷ்டி இல்லை. ஆனால், மனிதர்களுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்கின்றது என்று அந்த இல்லாதப் பொருள் நமக்கு உண்டென்று தோன்றுகிறது. அந்தத் தோற்றம் நசியும் போது தான் நாம் மனிதனாகிறோம்.  நான் என்ற அகந்தையில் உழலுகின்ற வரையில், நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மனிதர்கள் அல்ல. வாழ்க வளமுடன். 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 தினம் ஒரு புத்தக மொழி 📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹 நீ பொய் சொல்லும் போது உன் மீது எனக்கு ஒரு சிறிய அதிகாரம் இருந்தது..   உன்னை வெல்வதற்கான ஒரு சிறிய சந்தர்ப்பம் இருந்தது..    நீ ஒரு சிறிய உண்மையைக் கூட சொல்லாமல் விடுவதில்லை..   அவை ஒரு சிலந்தியைப் போல என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டது..   எனது எல்லா அதிகாரத்தையும் அது பறித்துக் கொண்டு விட்டது..    உனது பொய்களின் வழியே நான் உனக்கு அவ்வளவு அருகாமையில் இரு...

மரியாதை

Image
 கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து   வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!    மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்   அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே!  நீராடவாராய். 🌹 "இன்றைய சிந்தனை"* _எல்லாம் முன்னரே எழுதப்பட்டு விட்டது, நாம் எதையும் "மாற்ற முடியாது" என சொல்பவர்கள் கூட, சாலையைக் கடக்கும் போது நின்று, இருபுறமும் பார்த்து கடந்து செல்கின்றனர்...._ _உன் எதிர் காலத்தின் சாவி.!!!_ _உன் "எண்ணங்களில்" இருந்து  பிறக்கிறது...._ மரியாதை தெரியாத நபர்களுடன் நெருங்கி பழகுவதை விட, மரியாதை தெரிந்தவர்களுடன் தூரமாக பயணிப்பதே மேல்.* *வாழ்க்கையில் தடம் மாறும்போது தட்டிக் கேட்பவர்களோடும், தடம் பதிக்கும்போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள்.* *நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள், அவர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலைகளை ஒதுக்கி பேசுபவர்களை நேசியுங்கள், அவர்களை மறக்காமல் இருங்கள்.* *அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருப்பின் "திருத்தி விட்டு" நகருங்கள். தவறாக இருப்பின் "சிரித்து விட்டு" நகருங்க...

செய்திகள்

Image
வேலூர்      வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் 2600 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் அழித்தனர்  ______________________________________________        வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு  காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையில் சாத்கர மலைபகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 லிட்டர்  சாராய ஊறல்கள் மற்றும் 90 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவைகளை அழித்தனர் மேலும் பேர்ணாம்பட்டை சேர்ந்த சாராயம் காய்ச்சிய மணிமாறன்,வைதீஷ்வரன்,ஜெகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர் இதே போல பேர்ணாம்பட் காவல் ஆய்வாளர் ருக்மான் கதன் தலைமையில் போலீசார் சாத்கர் மலை பகுதிகளில் எலந்துமரத்து ஏரி,மாமரத்து பள்ளம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்ததில் 1100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஆஷா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர் இதே போல கணியம்பாடி காவல்துறையினரும் 60 லிட்டர் சாராயத்தை பறிம...

தெரியுமா

Image
*திருப்பதியில் அதிசயம்..............*   *எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*  *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில்,  BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled],  Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது.  இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. *உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்.*  (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)  *நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். *கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.*   *எப்படி அணுக வேண்டும்*              பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.   முதலில் டோக்கனை பெ...

திருமண பத்திரிக்கை

Image
இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!! திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன்,  திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.  அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். . திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி To Sri Lord Venkateswara swamy, The Executive Officer TTD Administrative Building K.T.Road Tirupa...

காலை வணக்கம்

Image
 அகலகில்லேன்இறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா ! நிகரில்புகழாயுலகமூன்றுடையாய் !என்னையாள்வானே!  நிகரிலமரர் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே ! புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. 🌹 காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான்... புத்திசாலித்தனம்..!! ஸுப்ரபாதம்.  *திருப்பல்லாண்டு* தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்   கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்   மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. *பெரியாழ்வார்*  🙏 : இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  விளைவறிந்து விழிப்போடு துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். [23/06/2024, 11:34 am] Dhinakaran: இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  செயலின் விளைவாக இறைவனைக் காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.  இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம். நம்மை நேசிப்ப...

மன அமைதி பெற

Image
 *அபீதிஸ்தவம்* 🌷ரமா தயித ரங்கபூரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே த்ரிவிக்ரம ஜநார்தந த்ரியுக நாத நாராயண! இதீவ ஸுபதாநி ய: படதி நாமதேயாநி தே ந தஸ்ய யம வஸ்யதா நரக பாத பீதி: குத: !!🌹 🌷கதாசிதபி ரங்கபூ ரஸிக யத்ர தேஸே வஸீ த்வதேக நியதாஸயஸ்த்ரிதஸ வந்திதோ வர்த்ததோ!  ததக்ஷத தபோவநம் தவ ச ராஜதாநீ ஸ்திரா ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் ஸுசரிதஸ்ய துர்க்கம் மஹத் !!🌷  *ஸ்ரீ வேதாந்ததேசிகர்*🙏 இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. குடும்ப அமைதியைப் பெற சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும், உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும் கவலையாக மாறுகிறது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. நாம் சமுதாயத்தில் ஒரு அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.  இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நல...

கூட்டம்

Image
நாள். 05.01.2025  *தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு செயற்குழு கூட்டம் &&&&&&&&& தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் வேலூர் (மாவட்ட அலுவலகத்தில்) பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.   மாவட்ட தலைவர் முனைவர்  பே.அமுதா தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  மாவட்ட துணைத்தலைவர்  ரா.காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து துணைத்தலைவர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் அறிஞர்கள், முக்கிய அறிவியல் கணித நிகழ்வுகள் அடங்கிய வருடாந்திர நாட்காட்டியினை தலைவர் பே.அமுதா வெளியிட்டார். வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், மாவட்ட இணைச்செயலாளர் எ.பாஸ்கர் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.  மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும் கே.வி.குப்பம் ஒன்றியத்தின...

திருச்சிற்றம்பலம்

Image
*🙏ஓம் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் துணை🙏 ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்* 🙏  *உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் அல்லும் பகலும் அயராத பணியாற்றும் ஆன்மீக செம்மல் வாழ்நாள் சாதனையாளர் மதிப்பிற்குரிய திரு டாக்டர் ஐயா என் சி சீனிவாசன் ஜி ஐயா அவர்களின் ஆசிர்வணத்துடன் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க தினம் ஒரு பதிவு நம் ஆன்மீக குழுவிலிருந்து பதிவிடப்படுகிறது இன்றைய ராசிபலன் பதிவு எண் 107வது நாள்🙏🙏🙏*   *ஐயா அவர்களின் ஆசிர்வாதத்துடன் என்றும் இறைபணியில் வேலூர் மாவட்ட தலைவர் ரமேஷ்🙏🙏🙏🙏

வணக்கம்

 அகலகில்லேன்இறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா ! நிகரில்புகழாயுலகமூன்றுடையாய் !என்னையாள்வானே!  நிகரிலமரர் முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே ! புகலொன்றில்லாவடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே. 🌹 காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான்... புத்திசாலித்தனம்..!! ஸுப்ரபாதம்.  *திருப்பல்லாண்டு* தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்   கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்   மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. *பெரியாழ்வார்*  🙏 : இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  விளைவறிந்து விழிப்போடு துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  செயலின் விளைவாக இறைவனைக் காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻.  நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம். நம்மை நேசிப்பவர்களை ஒரு போதும் நோகடிக்கக் கூடாது  . வாழ்க வைய...