Posts

Showing posts from May, 2024

கூட்டம்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்        ராணிப்பேட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரக்கோணம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் கூட்டணி கட்சியினர் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென கலந்தாய்வு கூட்டம் -  இந்த அரக்கோணம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி சரியாக கடைபிடிக்கவில்லை எனவே வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பாளரை நியமிக்க தேர்தல் ஆணையரிடம் பாமக மனு அளிக்கும் பாமக வேட்பாளர் பாலு பேட்டி  ________________________________________________________________     ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிகையில் கலந்துகொள்ளும் முகவர்கள் பயிற்சி கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இதில் அரக்கோணம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் பாலு ,அமாமுக பார்த்திபன்,பாமகவை சேர்ந்த நிர்வாகிகள் சக்கரவர்த்தி,கிருஷ்ணன்,ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சரவணன்,இளவழகன்,ஜானகிராமன்,உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் நிர...

சீரமைப்பு பணிகள்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்        சோளிங்கர் பகுதிகளி ல் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உடைந்த குடிநீர் பைப்புகளை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட  27  வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழியாக செய்ய பொன்னை ஆற்றில் இருந்து பைப்லைன் மூலம்  நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  சின்ன நாகபூண்டி சோளிங்கர் செல்லும் சாலையில்  கடந்த மூன்று நாட்களாக குடிநீர் பைப் லைன் 12 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உடைந்த பைப் உடனடியாக சீரமைக்க வேண்டும் என  நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் . புகாரை ஏற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக  ஜேசிபி இயந்திரம் மூலம் நகராட்சி பணியாளர்கள் கொண்டு உடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே பைப்லைன் சீரமைக்கும் பணியில் ஈடு...

விழா

Image
வேலூர்   30-5-24   வேலூர் செங்காநத்தம் மலையில் உள்ள பிரத்யங்கராதேவி ஆலயத்தில் மிளகாய் யாகம் மற்றும் நவகிரக ஹோமம் தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு  ___________________________________________________      வேலூர்மாவட்டம்,சித்தர் மலை என்றழைக்கபடும் செங்காநத்தம் குகை கோவிலில் தேய் பிரை அஷ்டமியை முன்னிட்டு பிரத்யங்கரா தேவி பைரவர் மற்றும் நவகிரக ஹோமங்கள் மற்றும் மிளகாய் யாகமும் நடைபெற்றது பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு கலசநீரானது பிரத்யங்கரா தேவிக்கு பூர்னாஹதி ஆரத்திகளுக்கு பின்னர்  கலசாபிஷேகமும் நடந்தது இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வேலூர் சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் தீபாராதணைகளும் நடைபெற்றது  இதனை பகவதி சித்தர் சுவாமிகள் உட்பட திரளான வேதவிற்பனர்களும் இதில் பங்கேற்றனர்

புகார்

Image
திருப்பத்தூர்மாவட்டம்    வக்கனம்பட்டி கிராமத்தில் பைனான்ஸ் எம்டியாக இருந்து சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றிய நபரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10க்கும் மேற்பட்டோர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! பணத்தை மீட்டு தர கோரி கதறி அழுந்து பேட்டி கொடுந்த கேன்சர் நோயாளி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புது ஓட்டல் பகுதியைச் சேர்ந்த தமிழரசி (கேன்சர் நோயாளி) மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அழித்தனர்.அந்த மனுவில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசி, பாரதி, சரோஜா, மற்றும் உஷா ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த பத்து வருடத்திற்கு முன்பு வக்கணம் பட்டி கிராமத்தில் விநாயகா பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தினோம்.இந்த நிலையில் உஷாவின் கணவர் நந்தி மலை என்பவரை பைனான்ஸில் எம்டியாக பணியமர்த்தி அவருடைய தலைமையில் பைனான்ஸ் நடத்தப்பட்டது.அதன்பின்னர் பைனான்ஸ் மூலம் சீட் ஆகவும் நடத்தினோம்.இந்த நிலையில் பங்குதாரர்கள் நான்கு பேருக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் இந்த சீட்டில் ஒன்றிணைந்து சீட்டு நடத்தப்பட்டது.அதன் பின்னர் 20...

சீல்

Image
திருப்பத்தூர்மாவட்டம்   வேலூர்   30-5-24  குனிச்சி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மற்றொரு பெயரில் மெடிக்கல் பார்மசி லைசன்ஸ் வைத்து போலி மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது! மெடிக்கல் ஷாப்புக்கு   சீல்  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் வினோத் என்பவர் 12ஆம்வகுப்பு மட்டுமே முடித்து விட்டு குனிச்சி பகுதியில் செல்வி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வந்துள்ளார் இந்த நிலையில் வினோத் இந்த மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவமனை ஊரக நலப் பணிகள் இணைய இயக்குனர் கண்ணகி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டும் மெடிகளில் பரிசோதனை செய்ததில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகளை நோயாளிகளுக்கு செலுத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.மேலும் மருந்தாய்வாளர் சபரிநாதன் மெடிக்கலில்  ஊசி போட பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார்.அதனைத் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்க...

தி மு க கூட்டம்

Image
*வேலூர் மாநகர அவசர செயற்குழு கூட்டம்* : இன்று, 30-05-2024,  வேலூர் பேபி மஹால்,  *வேலூர் மாநகர அவசர செயற்குழு கூட்டம்* வேலூர் மாநகர கழக செயலாளர் *திரு.ப.கார்த்திகேயன் MLA* அவர்களின் ஏற்பாட்டில்  மாநகர கழக  அவைத்தலைவர் *சூரி (எ) கோவிந்தன்* அவர்கள் தலைமையில்    நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில தலைவர்,  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த் MP* அவர்கள் வேலூர் மாவட்ட கழக செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார் MLA* அவர்கள்  மாவட்ட அவைத்தலைவர் *திரு.தி.அ.முகமது சகி* அவர்கள் மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன்,  மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர்.விஜய்,   வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார்,  துணை மேயர் M.சுனில்குமார்,  மாநகர துணை செயலாளர்கள்,   தலைமை செயற்குழு மற்றும்  பொதுக்குழு உறுப்பினர்கள்,   பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள்,  கழக தோழர்கள் உடனிருந்தனர்.

உதவி

Image
வேலூர் தோட்டப்பாளையம் காணாறு ஒரம் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும் விதமாக புதிய கேரம் போர்டு வழங்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக வந்த தகவலை அடுத்து விளையாட்டின் மீது கவனத்தை திசை திருப்பி நல்வழிபடுத்தும் நோக்கில் செய்யப்பட்டது. - Dinesh Saravanan

உதவி

Image
திருச்சியை சேர்ந்த நரிக்குறவர் இன பெண்ணுக்கு கேன்சர் கட்டி அகற்ற திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு போதிய வசதி இல்லாததால் சென்னைக்கு வந்துள்ளனர். அங்கும் கைவிரித்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். நாடோடிகளான அவர்கள் ஒரு பெண்ணுக்காக 17 பேர் மொத்தமாக குடும்பமாக வேலூர் வந்து மருத்துவமனையில் சேர்த்து பின் தங்க சாப்பிட வசதியின்றி தவித்தனர். அவர்கள் தங்க இட வசதி செய்து கொடுத்தோம். ஆனால் பொது வெளியில் தங்கி கொள்வதாக சொல்லி உணவு மட்டும் கேட்டனர். எனவே 17 பேருக்கும் உணவு வாங்கி கொடுத்துவிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட பெண் நிச்சயம் மீண்டு வருவார் என நம்பிக்கை கொடுத்தோம். வந்தாரை நிச்சயம் வேலூர் கைவிடாது..! - Dinesh Saravanan

பாவம்

Image
🌺🍁🌹பாவங்களின் 42 வகை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்...🍒🍒🍒 1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது. 13. ஆசை காட்டி மோசம் செய்வது. 14. பொது வழியை மூடி அடைப்பது. 15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது. 16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது. 17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது. 18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது. 19. நட்டாற்றில் கை நழுவுவது. 20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது. 21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது. 22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது. 23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது. 24. கருவைக் கலைப்பது. 25. குருவை வணங்கக் கூசி நிற்பது. 26. கு...

வணக்கம்

Image

முகாம்

Image
ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை பயிற்சி வகுப்புகள்  இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜே அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக கவலை அதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வரமாக இயற்கை சார்ந்த வேளாண் தோட்டக்கலை போன்ற பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபு சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் ஆற்காடு நகர ஆய்வாளர் சசிகுமார் கலந்துகொண்டார்.

பாராட்டு சான்று வழங்கும் விழா

Image
*ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக வேளாண்மை பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற  மாணவர்களுக்கு டி.எஸ்.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்*  இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜே அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வரமாக இயற்கை சார்ந்த வேளாண் தோட்டக்கலை மற்றும் நீர் மேலாண்மை போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபு சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் காவல் துறை துணை ஆய்வாளர் தமிழ் செல்வி மற்றும் பெல் பிரபு கலந்துகொண்டார்.

வணக்கம்

Image
இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு. அன்பு வேறு சிவம் வேறு அல்ல. சிவத்தை உணர்ந்ததால் அன்பாக மலர்ந்தது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்🙏🏼🙏🏻🙏🏻. உடல் தானாகவே காற்றில் இருந்தும் கோள்களின் அலை வீச்சிலிருந்தும் சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். அண்ணா நகர் நாச்சியப்பன்

பிறப்பு

Image
பிறரின் முன் வாழ்ந்து காட்ட நீங்கள் பிறக்கவில்லை. உங்களின் மாபெரும் சக்தியை உணர்ந்து உச்சத்தை தொடுவதற்கே பிறந்துள்ளீர்கள்.     உங்கள் வாழ்வை உயர்த்த உங்களைத் தவிர யாரால் முடியும் ? நீங்களாக விரும்பி உயராவிட்டால் உங்களை யாராலும் உயர்த்த முடியாது. இப்பூவுலகில் விதைகள் தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை. மாறாக கிடைத்த இடத்தில் தன்னை மரமாகவோ செடியாகவோ மாற்றிக்கொள்கின்றன. விழுந்த இடத்திலேயே இருந்து முன்னேறுங்கள். வணக்கம் நண்பர்களே

பணம்

Image
பணம் நம்மைக் கையாளக் கூடாது.   _*பாசிட்டிவ்வாக வாழ்க்கையை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல...*_ _*ஆனால்...*_  _*பழக்கப்படுத்திவிட்டால் வாழ்க்கையில் நீங்கள்*_ _*சந்தோஷமாக இருப்பதை*_ _*யாராலும் தடுக்க முடியாது .*_  _*மண் போல் மனதை*_ _*மாற்றிவிடுங்கள்....*_ _*நல்ல சிந்தனைகளை முளைக்கவிடுங்கள்.....*_ _*கெட்ட சிந்தனைகளை*_ _*மக்க செய்து விடுங்கள்.*_ _*பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே*_ _*செய்யும்.*_ _*தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்*_ *இருப்பதை வைத்து வாழ பழகிக் கொண்டவர்கள்....* *இல்லாத போதும் வாழ பழகிக் கொள்கிறார்கள்.* *கேள்வி:* உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட 10 விஷயங்கள் யாவை.  *பதில்:* நாம ஒன்னும் பெரிய தத்துவஞானி எல்லாம் கிடையாதுங்க. சும்மா எனக்கு தெரிஞ்ச ஒரு நாலு வார்த்தைய மட்டும் சொல்லுறேன். 1.முகத்தில் ஒரு சிறிய புன்னகை - நமக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை அளிக்கும். 2.பணத்தை நாம் கையாள வேண்டும். பணம் நம்மைக் கையாளக் கூடாது. 3.அன்பு-அழகான பொக்கிஷம். அதை பத்திரமாக பயன்படுத்துங்கள். 4.கோபம்- வரவேண்டிய இடத்தில் வராவிடில் பயனற்றது. ...

மரியாதை

Image
மரியாதை என்பது  எல்லோருக்கும் கிடைக்கும்  வயதின் அடிப்படையில்... மதிப்பு என்பது  சிலருக்கு மட்டுமே கிடைக்கும்  செயலின் அடிப்படையில்... இனிய காலை வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽

முற்றுகை

Image

கண்ணீர் அஞ்சலி

Image

நரசிம்மர் ஜெயந்தி

Image

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயத்தில் இரவு 12 மணி அளவில் ஊரில் உள்ள மின்விளக்குகள் அனைத்து தீப்பந்தங்கள் இயங்கியவாறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பொன்னியம்மன் எல்லை திருவீதி உலா - மழை வேண்டி விவசாயம் செழிக்க தீபந்தங்கள் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்பு           ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் ஐந்து நாள்கள் நடைபெறும் பொன்னியம்மன் திருவிழாவின் 4 வது  நாளான இன்று  இரவு 11 மணி அளவில் ராம தேவதையான பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரவு 12 மணி அளவில் ஊரில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அனைக்கப்பட்டு வினோதமான முறையில் ஊர் மக்கள் கையில் தீ பந்தங்கள் ஏந்தியவாறு  மழை பொழிய வேண்டியும்  அந்த மழையினால் விவசாயம் செழிக்கவும் ஊர் வளம் பெற வேண்டி மலர்களால் அலங்கரி...

திருட்டு

Image
திருப்பத்தூர்மாவட்டம்      22-5-24  வாணியம்பாடியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையில்  ஈடுபட்ட இளைஞர் கைது :11 மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல்.-அவரிடமிருந்த 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  நியூடவுன்  பகுதியில் வசித்து வருபவர்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்  விக்னேஷ் இவர் கடந்த மாதம் 29ந்தேதி இரவு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.இந்த நிலையில் இதை நோட்டமிட்ட மர்மநபர்கள்  வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த  5 சவரன் தங்க நகைகள்,46 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.வெளியே சென்ற விக்னேஷ் இன்று அதிகாலை 5 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்க பட்டுள்ளது கண்டு  அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.மேலும்  பீரோவில் இருந்த பணம் நகை கொள்ளை போன...

தேர் திருவிழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    22-5-24 ரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் 2 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ   மரத்தேர் விழா  திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்  ___________________________       ராணிப்பேட்டைமாவட்டம்,ரத்தினகிரியில் அருள் மிகு பாலமுருகன் திருக்கோவில் உள்ளது   இன்று  பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமையில் மரத்தேர் திருவிழாவானது இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்றது இதில் இந்த ஆலயம் கட்டப்பட்டு 40 ஆண்டுகாலமாகி மிகவும் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் தற்போது தான் இரண்டாம்  ஆண்டு பிரம்மோற்சவ விழா வைகாசி விசாக விழாவாக  நடந்தது இதில் சிறப்பு யாக பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் முழங்க பூர்னஹதியானது நடந்தது பின்னர் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைக்கு பின்னர் முருகர் வள்ளி தெய்வானை மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டு தேரில் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களை ஏழுப்பி தேரை வடம் பிட...

பறிமுதல்

Image
`திருப்பத்தூர்மாவட்டம்     22-5-24 ஆம்பூரில் ஹவாலா பணம் ரூ.17 லட்சம் பறிமுதல்    ஆம்பூர் அருகே பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் என சந்தேகிக்கப்படும் ரூ.17 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் கொண்டு சென்ற பணத்தை இரு நபர்கள் மாதனூர் அருகே பேருந்தில் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.    ஆனால் அந்த பணத்தை கொண்டு சென்ற நபர் நபர் அவர்களிடம் போராடி பணத்தை மீட்டுள்ளார்.  ஆனால் அவரிடமிருந்து செல்போன் மட்டும் பறித்துக் கொண்டு இரு நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு வந்த அந்த நபர் தன்னிடமிருந்து பணத்தை இரு நபர்கள் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் தன்னுடைய செல்போனை மட்டும் அவர்கள் பறித்துக் கொண்டு சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.   விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேர்ண...

அணை நிரம்பியது

Image
திருப்பத்தூர்மாவட்டம்     22-5-24   வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை  முழுவதும் நிரம்பியதுதமிழக. ஆந்திரா எல்லையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளிலும் எல்லையை ஒட்டி உள்ள வனப்பகுதியிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழக ஆந்திரா எல்லையில் புல்லூர் கிராமத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற இடத்தில்  பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள 12 அடி உயர தடுப்பணை முழுவதும் நிரம்பியுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி தடுப்பணை கட்டியதால் பாலாற்றில் செல்லக்கூடிய வெள்ள நீர் அந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது. பாலாற்றில் தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் தமிழக பாலாற்றில் அதிக அளவு நீர்வரத்து இருந்திருக்கும் தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியிருந்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் சேமித்து வைத்திருக்க வசதியாக இருந்திருக்கும்  என்று.விவசாயிகள் வேதனை தெரிவிக்க...

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் வைகாசி கருட சேவை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்  அருள்மிகு  ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி  கருடசேவை பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கருட சேவை  பிரம்மோற்சவம் முன்னிட்டு பக்தோசிப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை‌ அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கருட வாகனத்தில் பக்தோசி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாத வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வீடு தோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து ச...

கருட சேவை

Image
ராணிப்பேட்டைமாவட்டம்      வாலாஜா  அருகே மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ  கருட சேவை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம்              ராணிப்பேட்டைமாவட்டம் ,வாலாஜா  வெங்கட்ரமண பாகவதர் வீதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான திருத்தலமான ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் கோவிலில் நடைபெறுவது வழக்கம் மேலும் 10 நாட்களும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று கருட சேவை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி, வைர, வைடூரிய, திருவாபரணங்கள் மற்றும் பல்வேறு புஷ்ப மாலைக...

108 பால்குடம்

Image
வேலூர்    22-5-24  காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி  திருக்கோவிலில் முருகப் பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகத்தையொட்டி 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக வள்ளியம்மை சன்னதியில் உள்ள மூலவர் ஆறுமுகசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தேரடி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் 444 படிகள் மலை மீது ஏறி பம்பை மேளம் மலைக்கோவில் மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் வெள்ளி கவசத்தில் எழுந்தருளினார் வள்ளியம்மைக்கு தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்