Posts

Showing posts from August, 2022

அவதி

Image
🔸  *வேலூர் மாவட்டம்* *வேலூரில் ஆவின் பால் காலை 6 30 வரை வண்டிகளிலேயே பால் எற்றப்படவில்லை.இன்று காலை 8 மணிக்கு மேல் தான் பால் கிடைக்கும்.முகவர்கள் சொந்த செலவில் வண்டி ஏற்பாடு செய்து வேலூர் ஆவின் அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி ஆவின் பால் குறித்த நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேணும்.* என பால் முகவர்கள் கோரிக்கை விடுத்தனர்.    👇

காலை தரிசனம்

Image
🚩  *காலை தரிசனம் !* *ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் !!* இன்று வியாழக்கிழமை  ! சுப கிருது வருடம் : ஆவணி மாதம் 16 ஆம் நாள் ! செப்டம்பர் மாதம் : முதல் தேதி (01-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-24 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : பஞ்சமி.. மதியம் 01-30 மணி வரை அதன் பிறகு சஷ்டி !! இன்றைய நட்சத்திரம் :  சுவாதி.. இரவு 12-40 மணி வரை ! அதன் பிறகு விசாகம் !! இன்று சம நோக்கு நாள் ! யோகம் :   அமிர்தயோகம் ! சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்று மீன ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் :  காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை :   காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் :  மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 08-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சுப ஓரைகள் : சுக்ர ஓரை :...

மறியல்

Image
சாலை வசதிக்காக மக்கள் சாலை மறியல் வேலுார் வேலுாரில், சாலை வசதிக்காக பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலுார் சத்துவாச்சாரியில் பல இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால்  சத்துவாச்சாரி சி.எம்.சி., காலனி, விஜயராகவவுரம், பகுதி ஒன்று, இரண்டு பகுதிகளில் மக்கள் செல்ல முடியாதபடி சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில் விரைவாக சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்க வலிறுத்தி சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் மக்கள் இன்று காலை 11:00 சாலை மறியிலில் ஈடுபட்டனர். விரைவில் சாலை வசதி செய்து கொடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மதியம் 1:00 மணிக்கு கலைந்து சென்றனர்.

கொலை

Image
முகம் சிதைத்து மூதாட்டி கொலை பேர்ணாம்பட்டு பேர்ணாம்பட்டு அருகே, முகம் சிதைத்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறிதது போலீசார் விசாரிக்கின்றனர். வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே அரவட்லா பாஸ்மாக் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 45. விவசாயி. அவரது தாயார், வள்ளியம்மாள், 60. கடந்த 25 ம் தேதி வெளியே சென்ற வள்ளியம்மாள் வீடு திரும்பவில்லை. பேர்ணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு பாஸ்மாக் பெண்டா வனப்பகுதியில் மூதாட்டி ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் வள்ளியம்மாள் என்பதும், மர்ம நபர்கள் அவர் முகத்தை சிதைத்து கல்லால் தாக்கி கொலை செய்தும் தெரியவந்தது. பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

குழப்பம்

Image
வேலூர்      மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக துணை மேயரும் மண்டல தலைவரும் வாக்குவாதம் - மாமன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்  ______________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பாலாற்றில் குப்பைகளை மாநகராட்சியினர் மக்களும் கொட்டுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்கள் மேலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் தெருவிளக்குகள் எரிவதில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மண்டலம் ஒன்றிற்கு போதிய திட்டபணிகள் ஒதுக்கவில்லை என கூறி பேசினார்கள் அப்போது மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக கூறி துணை மேயர் சுனில் மற்றும் ஒன்றாவது மண்டல குழுதலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் மன்ற கூட்டத்தில் கூச்சல் ...

ஆர்பாட்டம்

Image
வேலூர்    வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்பாட்டம்  __________________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியமும் கேட்டு மாவட்டத்தலைவர் வில்வநாதன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதனை மாநில செயலாளர் சுமதி துவங்கி வைத்தார் இதில் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் வழங்க வேண்டும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உதவியாளர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களின் மூலமே அமுல்படுத்த வேண்டும் தனியார் குழுக்களுக்கு வழங்க கூட...

சேதம்

Image
திருப்பத்தூர்மாவட்டம்   ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம் அடையும் அபாயம். உயிர் சேதம் ஏற்படுவதற்க்கு முன்பு சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. ________________________ திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இணைக்க கூடிய தரைப்பாலம் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாதனூர்-உள்ளி இணைக்கக் கூடிய தரைப்பாலம் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாலாற்றில்  ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அப்போது மாணவர்கள், பொதுமக்கள் மாதனூரில் இருந்து உள்ளி, வளத்தூர், சின்ன தோட்டாளம், தொட்டாளம், குடியாத்தம்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குசெல்லக்கூடிய மக்கள் போக்கு வரத்து தடையால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் அமைத்து தற்காலிக சாலை அம...

எப்படி

Image
*திருப்பத்தூர் நகராட்சி பகுதியில்.. கை பம்ப் போர்வெல் அகற்றாமல் போடப்பட்டுள்ள சாலை*

படிக்கவும்

Image
தயவுசெய்து இந்த பகுதியைப் படியுங்கள்.  வெறும் 2 நிமிடங்கள் ஆகும்.   *அமெரிக்காவில் உள்ள மருத்துவ அதிகாரிகள், அனைவருக்கும் உதவுவதற்காக இதை அனுப்பியுள்ளனர்.  தயவு செய்து படித்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் - டாக்டர் ஓகியர்.*  *சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் விகிதம் கவலையளிக்கிறது.*   நமக்கு உதவக்கூடிய ஒரு பதிவைப் பகிர்கிறேன். தயவுசெய்து கீழே படிக்கவும்:  முக்கியமானது - சிறுநீரகம் சிறந்தது.  சில நாட்களுக்கு முன்பு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பொதுப்பணித்துறை அமைச்சர், மாண்புமிகு டெகோ ஏரி தற்போது சிறுநீரக பிரச்சனைகளுடன் உயிர் ஆதரவுடன் மருத்துவமனையில் உள்ளார்.  சிறுநீரக நோயின் இந்த அச்சுறுத்தலை எவ்வாறு தடுப்பது என்பதை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.  *சிறுநீரக நோய்க்கான முதல் 6 காரணங்கள் இங்கே:* *1. கழிப்பறைக்குச் செல்வதை தாமதப்படுத்துதல்.*  உங்கள் சிறுநீரை உங்கள் சிறுநீர்ப்பையில் அதிக நேரம் வைத்திருப்பது ஒரு மோசமான யோசனை.  ஒரு முழு சிறுநீர்ப்பை சிறுநீர்ப்பை சேதத்தை ஏற்படுத்தும்.  சிறு...

மக்கள் சந்திப்பு இயக்கம்

Image
👍🙏🙏.. மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர் முயற்சியால்.. தட்டப்பாறை பகுதியில்..01- கோடி ரூபாய்- மதிப்பில்- சாலை அமைப்பு மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பு!!- தொடங்கி நடைபெற்று வருகிறது!--👌 வாழ்த்துக்கள்!-🌹- பாராட்டுக்கள்!!-👏- அன்புடையீர் வணக்கம்!-🙏-  வேலூர்- மாவட்டம் குடியாத்தம் -வட்டம்- தட்டப்பாறை நெடுஞ்சாலை பகுதியில்-👍- மழை மற்றும் கழிவுநீர்- வீடுகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுகிறது- சாலைகளில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள்- பள்ளி மாணவர்கள் பெண்கள் ஆசிரியர்கள் விவசாயிகள் வியாபாரிகள்- குடியாத்தம் நகருக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது!- மேற்படி சாலையை சீரமைத்து தர வேண்டும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி--- சார்பில்!-👍------ நாற்று நடும் போராட்டம்- மீன்பிடிக்கும் போராட்டம்- ஆர்ப்பாட்டம்- என பல்வேறு போராட்டங்களை நடத்தி ------இதன் விளைவாக!- மாண்புமிகு-- தமிழக முதல்வர்- வேலூர் மாவட்ட ஆட்சியர்- குடியாத்தம்- - ஆர்டிஓ.. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி-ee.. வட்டாட்சியர்.  அவர்கள்! குடியாத்தம்..Bdo.. குடியாத்தம் நெடுஞ்சாலைத் துறை...

கொலை

Image
🔸  *வேலூர் மாவட்டம்* *பெண் தலையில்* *பாறாங்கல்லை போட்டு* *கொன்ற கொடூரம்..* *பாலியல் வன்கொடுமை காரணமா?..* *போலீசார்* *விசாரணை..!* *வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் அரவட்லா மலை பகுதியில் இருக்கும் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் வசிப்பவர் முருகேசன்.* *இவருக்கு வள்ளியம்மாள் (60), முனியம்மாள் (55) என இரண்டு மனைவிகள்.* *இதில் முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல் என இரண்டு மகன்களும் தவமணி ஜெயலட்சுமி என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.* *கடந்த 20 வருடங்களுக்கு முன் தனது கணவனை விட்டு பிரிந்து வந்த வள்ளியம்மாள் அதே கிராமத்தில் இளைய மகன் வடிவேல் வீட்டில் இருந்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார்.* *நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாலையில் ஓட்டி கொண்டு வந்து பட்டியில் அடைத்து விட்டு சகோதரி மகள் லட்சுமி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு 10.30 மணி வரை இருந்த வள்ளியம்மாள் தனது வீட்டுக்கு செல்வதாக கூறி கிளம்பி இருக்கிறார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.* *இந்நிலையில் ரோட்டோரம் இருக்கும் நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை 6 மணியளவில் வள்ளி...

திருட்டு

Image
2 வீடுகளில் 100 பவுன் திருட்டு ஜோலார்பேட்டை இரண்டு வீடுகளில் 100 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனுாரை சேர்ந்தவர் சந்திரன், 65. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 27 ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை, 4 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 59. சென்னையில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு சேலத்திற்கு சென்றார். நேற்று காலை 11:00 மணிக்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் பீரோவிலிருந்த 80 பவுன்...

திருட்டு

Image
3 கோவில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருட்டு அரக்கோணம் அரக்கோணம் அருகே, மூன்று கோவில்களில் பூட்டை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போனது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் மெயின்தெருவில் அடுத்தடுத்து அகத்தீஸ்வரர், நாக முனியீஸ்வரி, பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று  இரவு 8:00 மணிக்கு கோவில்களை பூட்டி வீட்டு சென்றனர். இன்று காலை 8:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, மூன்று கோவில்களிலும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது. பொன்னியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிவிந்திருந்த 10 பவுன் தாலி, 2 பவுன் பொட்டு திருட்டு போனது தெரியவந்தது. தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கைது

Image
பள்ளிக்கு செல்லாமல் மாணவியை திருமணம் செய்த மாணவர் கைது குடியாத்தம் குடியாத்தம் அருகே, பள்ளிக்கு செல்லாமல் மாணவியை திருமணம் செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வி. குப்பத்தில் தனியார் பள்ளி 16 வயதுள்ள மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். குடியாத்தத்தை சேர்ந்த 17 வயதுள்ள மாணவர் ஒருவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இருவரும் பள்ளிக்கு செல்லாமல் காதலித்து வந்தனர். பெற்றோருக்கு தெரிவித்ததில், படிக்கும் வயதில் காதலா என்று கேட்டுள்ளனர். இதனால் இருவரும் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து பெற்றோர் தனித்தனியாக குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துாரில் உள்ள ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை மீட்டு வந்தனர். குடியாத்தம் போலீசார் இன்று போஸ்கோவில் மாணவரை கைது செய்து, சென்னை கெல்லிசில் உள்ள சிறுவர் சிறையில் அடைத்தனர். மாணவியை வேலுார் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

வெள்ளம்

Image
பாலாற்றில் வெள்ளம் வேலுார் வேலுார் பாலாற்றில் வெள்ளம் வந்ததால், நீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பத்துார், வேலுார்  மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம், சித்துாரில் பெய்து வரும் கன மழையால் குடியாத்தம் அருகே மோர்த்தானா அணை நிறம்பி உபரிநீர் வெளியேறுவதால் கவுண்டன்யா ஆற்றுக்கு  வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளக்கல் கானாறு, ஆமைமடுகு, கண்டிப்போப்பு என 20 க்கும் மேற்பட்ட கானாறுகள் நிரம்பி அதிலிருந்து உபரிநீர்  பாலாற்றுக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் வேலுார் காட்பாடி சாலை பாலாற்றில் இன்று மாலை முதல் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வேலுார் மக்கள் பாலாற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். இது குறித்து வேலுார் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், பாலாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஆற்றில் இறங்க வேண்டாம், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி...

திருட்டு

Image
வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்ச ரூபாய் கொள்ளை அரக்கோணத்தில் பரபரப்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வசிக்கும் தனது மூத்த மகனின் வீடு கிரகப்பிரவேசத்திற்காக  சென்று  நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோ உடைத்து பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார. உடனே இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் புகார் அளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  இந்நிலையில் இது குறித்து பிரபாகரன் கூறுகையில் பீரோவில் இருந்த 70% தங்க நகை ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாய் கொள்ளை போனதாக  தெரிவித்துள்ளார் வீட்டில் கதை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்பறவர் பெயர் படுத்தி வருகின்றது  மேலும் தற்பொழுது அரக்கோணம் பகுதியில்  வீட்டின் கதவை உடைத்து கொள்ளடிக்கும் சம்பவம் அதிகரித்து வருவத...

உடைப்பு

Image
🔸    *ராணிப்பேட்டை* *மாவட்டம்* *அரக்கோணம் அருகே 3 கோவில்களில் உண்டியல் உடைப்பு*

வாழ்த்துக்கள்

Image
பள்ளிகொண்டா பேரூராட்சி பொதுமக்கள்  அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் : அன்புடன் சி. சுபபிரியா குமரன் தலைவர் பள்ளிகொண்டா பேரூராட்சி : *அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தின்* சார்பாக அனைவருக்கும் *இனிய விநாயகர் சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்*... *என்றும் அன்புடன்* *திரு.கோ.குமரபாண்டியன் BA,* *ஒன்றிய கழக செயளாலர்* அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம்,* *அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம்*  *வசந்தநடை ஊராட்சி சார்பாக* அனைவருக்கும் *இனிய வினாயகர் சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்...* *இங்கனம்* *K.மேகநாதன் B.COM,* *வசந்தநடை ஊராட்சி,* *தகவல் தொழில்நுட்ப அணி,* *அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம்,* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைக்கட்டு ஒன்றியம் புத்தூர் ஊராட்சி‌‌‌ சார்பில் அனைவருக்கும்  இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏 இங்ஙனம் செ.மோகன் . தலைவர் புத்தூர் ஊராட்சி மன்றம் ❤️❤️❤️❤️

சேதம்

Image
✒️✒️ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பச்ச குப்பம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கிய தால் ஆம்பூர் குடியாத்தம் செல்லக்கூடிய பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதற்கிடையே ஏற்கனவே வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட மாதனூர் பாலாற்று தலைப்பாலம்  தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது மீண்டும் கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினருக்கு  அப்பகுதி மக்கள் கோரிக்கை✒️✒️

பலி

Image
குடியாத்தம்  *குடியாத்தம் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து- 2500 கோழிகள் தீயில் கருகி பலி*  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் புதூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது  இந்த கோழி பண்ணையில் 2500 கோழிகளை வைத்து வளத்து வருகிறார் இதனிடையே  இன்று இரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு  கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவியது உடனடியாக இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர்  சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் மேலும் கோழி பண்ணையில் இருந்த 2500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது மேலும் இந்த தீ விபத்து காரணம்  குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பலி

Image
6,500 கோழிகள் தீயில் கருகி பலி குடியாத்தம் குடியாத்தம் அருகே 6,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் புதுார் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 55. இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து 6,500 கோழிகள் வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை 1:00 மணிக்கு கோழிப்பண்ணையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் பண்ணையிலிருந்த 6,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன. மின் கசிவால் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்ததும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகள் இறந்ததும் குடியாத்தம் தாலுகா போலீசார் நடத்திய  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சேதம்

Image
வேலூர்   31-8-22 குடியாத்தத்தில் 7 அடி விநாயகர் சிலையை திருடமுயற்சி செய்த இளைஞர்கள்- விநாயகர் சிலை சேதம்- சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை. வேலூர் மாவட்டம்இன்றுவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனிடையே குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்  வைக்கப்பட்டுள்ள நிலையில்குடியாத்தம் அரசு  மருத்துவமனை அருகே அண்ணா தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சேர்ந்து 7 அடி விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.இதனிடையே அதிகாலையில் பார்த்த போது சிலை வைத்த இடத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் சிலையில் கை மற்றும் தும்பிக்கை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள்  குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்த பொழுது அதில்  மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது தெரியவந்தது.மேலும...

கைது

Image
வேலூர்    31-8-22   ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது. வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பேபி மத்திய நுண்ணறிவு பிரிவு   காவலர்கள் சிவக்குமார்  ரங்கன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திருப்பதியில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் தமிழக அரசு பேருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான இளைஞரை சோதனை செய்த போது அவர் கஞ்சா கடத்துவது தெரியவந்து. இதனையடுத்து கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது அர்ஷத் (22) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ரிட்டன்

Image
வேலூர்    31-8-22    ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்படும் 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினார்கள்  ____________________________________       வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி பொது இடங்களில் 10 அடிக்கு மேல் விநயாகர் சிலைகள் வைக்க கூடாது என்பதால் 10 அடிக்கு குறைவாக உள்ள விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர் இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து டிராக்டர்கள் வேன் லாரிகள் மூலம் 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை மக்கள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய வாங்கி வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தியதை விட சிலைகள் பெரிய அளவில் இருப்பதால் அவைகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினார்கள்

வெள்ளம்

Image
தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது ஆம்பூர்,  ஆம்பூர் அருகே,  பச்சகுப்பம்  தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. திருப்பத்துார் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள பச்சகுப்பம் தரைப்பாலம் இன்று அதிகாலை 2:00 மணிக்கு வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் ஆம்பூரிலிருந்து செல்லும் பச்சகுப்பம், வெள்ளக்குட்டை, பேர்ணாம்பட்டு, வளத்துார் உள்ளிட்ட 25 கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் 50 கி.மீ., சுற்றிக் கொண்டு  குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக ஆம்பூருக்கு செல்கின்றனர். ஏற்கனவே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாதனுார் பாலாற்று தரைப்பாலம் தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பாலமும் உடையும் நிலையில் உள்ளதால், அதை சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைது

Image
வாழை தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது குடியாத்தம்– குடியாத்தம் அருகே, வாழை தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏர்த்தாங்கல் கலர்பாளையம் பெரும்பாடி ஏரிக்கரையோரம் உள்ள நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் பெரும்பாடியை சேர்ந்த விவசாயி கக்கன், 65, என்பவர் வாழை தோட்டத்தில் 40 கஞ்சா செடிகள் பயிர் செய்தது தெரியவந்தது. போலீசார் கக்கனை கைது செய்து கஞ்சா செடிகளை அழித்தனர்.