தெரிந்து கொள்வோம்
இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலுார் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்தது வேலுாரில் தான். இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசித்து வரும் இன்றைய இளைய தலைமுறையினர் சுதந்திரம் எப்படி கிடைத்தது, அதற்கான மூல காரணம் குறித்து அறிந்து கொள்ளவில்லை. பழைய தலைமுறையினர் அவர்களுக்கு அதை பற்றி சொல்ல நேரம் கிடைக்காதபடி நம் வாழ்க்கை முறை தற்போது அமைந்துள்ளது. இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டியது இந்திய விடுதலைக்கு வித்திட்ட வேலுாரில் நடந்த சிப்பாய் புரட்சி ஆகும். ஜாலியன் வாலாபாக்கில் கி.பி., 1857 ல் நடந்த சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போரில் முக்கிய பங்கு வகிப்பது உண்மைதான். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேலுார் கோட்டையில் நடந்த சிப்பாய் கலகம், பின்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது. வரலாறு: கி.பி., 1799 ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களால் திப்புசுல்தான் கொல்லப்பட்டார். இதனால் அவரது 12 மகன், 8...