வாலாஜா தன்வந்திரி பீடத்தில் அட்சய திருதியில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை இராணிப்பேட்டைடை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 3.5.2022, செவ்வாய்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது அன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்...