Posts

Showing posts from June, 2024

முதலாவது பொதுக்குழு கூட்டம்

Image
முதலாவது பொதுக்குழு கூட்டம் சென்னை: சென்னை அண்ணாநகர் வெஸ்டன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திட்டம் 205 ல் செயல்பட்டு வரும் ELITE ENCLAVE WELFARE ASSOCIATION முதலாவது பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ம் தேதி மாலை 4:00 மணிக்கு குடியிருப்பு தரைதளத்தில் நடந்தது. சங்க  தலைவர் திரு.  சரவணன் வரவேற்றார். தொடர்ந்து குடியிருப்பு சட்ட  திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். சங்க செயலாளர் திரு. தினகரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் திரு. பழனியப்பன் நிதி நிலை அறிக்கை வாசித்தார். தொடர்ந்து நமது குடியிருப்பில் நடந்து வரும் டிரைனேஜ் சிஸ்டம் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதை சரி செய்ய எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தலைவர் திரு. சரவணன் விரிவாக பேசினார். பின் உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. அதில், குடியிருப்பில் உள்ள பிரச்சனைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். அவற்றை சரி செய்வது பற்றி  நிர்வாகிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பின் சங்க நிதி நிலை, அதை சரி செய்ய மாதா மாதம்       ரூ 500  உறுப்...

வாய்ப்பு

Image
*🙏🏻இன்றைய சிந்தனை..( 11.06.2024..)* *...........................................* *''கிடைத்த வாய்ப்பை.....''* *.......................................* வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.அப்படிக் கிடைத்தால் கிடைத்த வாய்ப்பை யாரும் பொருட்படுத்துவது இல்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது அதனை யார் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்..  கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தைப் பின் வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான்.  அது தான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை. அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும். சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள் ...  உனக்கு இறக்கை எதற்கு..?நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக! முன்னந்தலையில் கூந்தல் எதற்கு? மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக! ஏன் பெருவிரலில் நிற்கிறாய்? சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோர...

நேரம்

Image
*மாற்ற முடியாதவற்றிற்காக நேரத்தை வீணாக்காதீர்கள்!* 🌹🌹🌹 "Never waste time on the things you can't change or the opinions other people have of you. நீங்கள் மாற்ற முடியாததற்கும், மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிப்ராயத்திற்கும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்" - Rachel Ray. அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி பிரபலம் மற்றும் பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு வெற்றிப் பெண்ணின் மொழி இது. அவர் கூறியபடி இந்த இரண்டே விஷயங்களில் கவனம் வைத்தால் நிச்சயம் வெற்றி தேவதை நம் கரங்களைக் குலுக்குவாள். அந்தப் பெண் பெற்றோருக்கு ஒரே மகள். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவள் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கி படிக்க முடியும். ஆனால் எதிர்பாராத ஒரு விபத்து காரணமாக அவள் தந்தை வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். தாயோ படிப்பு அறிவு குறைந்த வெகுளித்தாய். அந்தப் பெண்ணுக்கு பள்ளி இறுதி முடிந்ததும் அவள் பெற்ற மதிப்பெண்களை வைத்து மிகப்பெரிய ஒரு கல்லூரியில் அவளுக்கு ஸ்பான்சர் செய்து கல்வி கற்க அழைத்தது கண்டு அனைவருமே மகிழ்ந்தனர் அவளைத் தவிர. ஆம...

திருமண விழா

Image
வேலூர் GGR இல்ல திருமண விழாவில் ஜி.கே.குழுமம் திரு.சந்தோஷ்காந்தி.அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இதில் GGR.கோகுல் தமிழ்மணி இராணிப்பேட்டை கோபிகிருஷ்ணன் MC அன்பரசு மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்

கிறுக்கன்

Image
தமிழ் கிறுக்கன் முயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம் பழமொழிகள் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை. குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது. ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும். கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர். ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமில...

கிறுக்கன்

Image
"உங்களுக்குத் தெரியுமா..! சங்க இலக்கியங்களின் சங்கமமாம் சங்கத்தமிழ சங்கத்தமிழ் சங்கத்தமிழ் திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது. கடவுள் வாழ்த்து கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த் தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி. மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும் ஓசை ஒழுங்குடன் மூலப்படல் × கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. விளக்கம்: உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நி...

திரிகடுகம்

Image
"உங்களுக்குத் தெரியுமா..! சங்க இலக்கியங்களின் சங்கமமாம் சங்கத்தமிழ் இணையம் இப்பொழுது செயலி வடிவிலும் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் சங்கத்தமிழ் சங்கத்தமிழ் திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது. கடவுள் வாழ்த்து கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த் தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும் பூவைப் பூ வண்ணன் அடி. மூலப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும் ஓசை ஒழுங்குடன் மூலப்படல் × கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. விளக்கம்: உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந...

கோபம் கவிதைகள்

Image
கோபம் கவிதைகள் வரிகள் KOVAM KAVITHAIGAL  இந்த தொகுப்பு “கோபம் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது. கோபம் கவிதை வரிகள் கோபம் கவிதைகள் Kovam Kavithaigal Tamil கோபம் கவிதைகள் வரிகள் நேர்மையாக இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வரும்.. காரணம் ஏமாற்றங்களை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருப்பதில்லை..! கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே.. பிறகு பாசம் எனும் பகல் கண்ணனுக்கு தெரியாது..! கோபம் வருவதற்கு தகுதியே உரிமை தான்.. உரிமை இருந்தா தான் கோபமும் செல்லுபடியாகும்.. அன்பு இருந்தா தான் அந்த கோபமும் மதிக்கப்படும்..! உன் கோபம் காற்று மோதியதும் உதிர்ந்திடும் இலையை போல.. என் கவிதையை பார்த்ததும் மறைந்து போய்விடும்..! வராத போது வரும் கோபம்.. நீ வரும் போது வராததால்.. கோபம் கோபமாய் வரும் இந்த கோபத்தின் மீது..! உள்ளே அடக்கி வைத்து அதி வன்மத்தோடு வெளியேறும் உச்ச கட்ட கோபம்..! கோபத்திற்கு விளக்கம் கேட்காமல்.. அதை புறக்கணித்து அரவணைக்கும் உறவு.. ஒரு ஈடு இணையற்ற வரம் தான்..! உன் மீதுள்ள கோபங்களை எல்லாம் முற்றாக அழித்து விட்டேன்.. என் கண்ணீர்த் துளிகளைக் கொண்டு..! கோபத்தில் கூட இழக்காத நிதானமும் கொட...

கோபம்

Image
கோபத்துக்கும் கோபம் வரும் கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும் போதும், யாரோ என்மேல் எறியும் கோபக் கனல்கள் வீட்டில் மனைவி மேல் தெறிக்கும் போதும், எனக்கு நானே கோபப்பட்டுக் கொள்கிறேன். என்னைத் தவிர யார்மீதும் கோபப்படும் உரிமை எனக்கில்லை. என் புலன்களுக்கே நான் முடி சூடிய அரசனாக முடியவில்லை அடுத்தவன் சாம்ராஜ்யத்தில் சக்கரவர்த்தியாவதெப்படி ? ‘எறியும் கோபம் எரிக்கலாம், அடக்கும் கோபம் வெடிக்கலாம் புன்னகையால் கோபத்தைத் துடைத்து விட்டுப் போகலாமே ! ‘ என கவிதை எழுதினேன் கோபம் அடங்கவில்லை. என் அஸ்திரங்கள் எல்லாம் பூமராங் போலாகி என்னையே துரத்தின. பின்னொரு நாள், என் கடிவாளத்தின் முனையை கடவுளிடம் கொடுத்தேன், இப்போது லாடம் இல்லாப் பாதங்கள் தீ மிதித்தாலும் சிரிக்கின்றன கோபம் கெட்டதா ? கோபத்திலிருந்து விடுபட இவை இரண்டும் போதும் ! Author: சேவியர் VIEW ALL POSTS TAGGED: இயேசு, கவிதை, கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், சேவியர், பைபிள்,...

இடியாப்ப சிக்கல்

Image
"     சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood பாலு சத்யா ‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொ...

இடியாப்பம்

Image
"     சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood ‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்தி...

காகம்

Image
வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க             உலகில் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக கருதப்பட்ட சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை தனது கொள்கைகள் மூலம் விளக்கியுள்ளார். கடவுள் பூமிக்கு அனுப்பிய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது சிறப்பு குணம் இருக்கும். இதனை சாணக்கியர் நமது வாழ்க்கைக்கு எவ்வாறு பாடமாக எடுத்துரைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம். 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? ஒரு சிறு எறும்பு கூட நமக்கு அருமையான பாடம் கற்பிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்நிலையில் சில பறவைகளின் குணங்கள் நமக்கு எப்படி வெற்றியை கொடுக்கும் என்பதை சாணக்கியர் கூறியதை வைத்து தெரிந்து கொள்வோம்.  பறவைகளின் குணங்களில் வெற்றியை பெறலாம் கொக்கின் பண்புகள் ஒரு நபரை வெற்றியடைய மிகவும் பயனுள்ளதாக இருக்குமாம். அதாவது இரையைப் பிடிப்பதற்கு தனது அனைத்து புலன்களையும் பயன்படுத்துகின்றது. புலன்களை கட்டுப்படுத்துவது மனிதர்களின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். அதாவது புலன்களைக் ...

பொய்யோடு ஏன் வாழ வேண்டும்

Image
குணமும் பணமும் ஒன்றுதான்.  _*எங்கும் எதிலும் எந்த உத்திரவாதமும் நாளை நமக்கு இல்லாத போது,*_ _*நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும்,பகையோடும்,*_ _*பாவத்தோடும்,தீங்கோடும், திமிரோடும் நம்*_ _*வாழ்க்கையை*_ _*நாம் வாழவேண்டும்!*_ _*அர்த்தமுள்ள வாழ்க்கையை*_ _*வாழ்வோமே*_ _*வயதாக வயதாகத் தான் தெரிகிறது*_ _*நம் வாழ்நாள் முழுவதும் உடன் வர யாரும் இல்லை என்று.*_ _*தனியா தானே வந்தாய். தனியாக தான் போக வேண்டும் என்று இந்த வாழ்க்கை கற்றுத் தருகிறது.*_ _*தவிக்கும் போது துடுப்பை தராதவர்கள் கரை சேர்ந்த பின் கப்பலை அனுப்பி என்ன பயன் ?*_ _*புரிந்து கொண்டவர்கள் வெறுப்பதில்லை, பிரிந்து செல்ல நினைப்பவர்கள் நிலைப்பதில்லை.*_ _*சாதனையில் கை கோர்ப்பவரை விட, சோதனை காலங்களில் உங்களை கை பிடிப்பவரே உண்மையானவர்கள் அவர்களை இழந்து விடாதீர்கள்.*_ _*உறவு என்பது ஒரு புத்தகம், அதில் தவறுங்கறது ஒரு பக்கம்.*_ _*ஒரு பக்கத்திற்காக ஒரு  புத்தகத்தையே வீணாக்கிவிடாதீர்கள்.*_ *நிதானமாக யோசித்து பாருங்கள்*       *நிதானத்தின் அருமையை* *நிதானமாக உணர்வீர்கள்.* குணமும் , பணமும் ஒருவகையில் ஒன்றுதான் மனிதர்கள...

மதம்

Image
வரலாறு 🚩மதத்தை  பரப்புவதற்காக  கிரிஸ்துவர் மிஷனரியால்  அசாமுக்கு ஒருவர்  அனுப் பப் பட்டார்.  அவரது பெயர் க்ரூஸ்.   அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்  ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்.  🚩போதகர், மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார்.  அந்த பையனின் பாட்டி தான்  அவ்வீட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார்...பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால்  குடும்பத்தையே கிறிஸ்தவர்களாக்கலாம்' என்று அவர் நினைத்தார். 🚩பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.  - இயேசு எப்படி குஷ்டரோ கிகளின் குஷ்ட நோயை குணப்படுத்தினார், எப்படி குருடர்களுக்கு பார்வை கொடுத்தார்... ஏசு தண்ணீரின் மீது நடந்தார்... என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.  🚩ஆனால் ஹிந்து சனா தனத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள  பாட்டி சொன்னார்... 🌹-- எங்கள் ராமனின் பாதங்கள் பட்டதிலேயே ஒரு கல்லாய் இருந்த அகலிகை, சாபம் நீங்கி  பெண் வடிவம் பெற்றாள்!   🌹- லங்கா செல்ல அமைக்கப்பட்...

நல்லவர்களோடு சேருங்கள்

Image
*நல்வர்களோடு சேர்ந்தால் நல்லதையே பேசினால் நல்லதையே செய்தால்* விஸ்வாமித்திரா் ஒரு யாகம் செய்யத் தீா்மானித்தாா் அந்த யாகத்தின் முடிவில் இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விட வேண்டும் என்பது முறை. அதை அனுசாித்து விஸ்வாமித்திரா் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தாா் அதை அறிந்த வசிஷ்டா் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தாா். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரா் மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்கு மிகுந்த கா்வத்துடன் தானம் கொடுத்தாா். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாக திரும்பினார். சில நாட்கள் ஆகின.... விஸ்வாமித்திரா் செய்ததை போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டா். நல்லவா்களின் நல்ல தீா்மானம் அல்லவா உடனடியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. ஆம்., வசிஷ்டா் யாகம் செய்தாா் யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரா்., வசிஷ்டா் தானம் கொடுக்கிறாா் என்றால் அது விசேஷம்தான் நாமும் போய் அதைப் பெற வேண்டும் என்று புறப்பட்டு வந்தாா். ஆனால் விஸ்வாமித்திரா் வருவதற்குள்ளாக வசிஷ்டா் தன்னிடம் இருந்த அனைத்தையு...

பெருஞ்சித்தனார்

Image
பாவலரேறு பெருஞ்சித்திரனார் காலமான  தினமின்று😢 💥"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''- என்று எழுதி அதன்வழி வாழ்ந்துகாட்டியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். தமிழில் பிறமொழிச் சொற்களை வகை தொகையின்றிக் கலந்து எழுதும் போக்கை இருபதாம் நூற்றாண்டில் தடுத்துநிறுத்தியவர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் என்றால், தமிழைத் தூய தமிழாக வழக்கில்கொண்டுவர முனைந்து நின்றவர்கள் மொழிஞாயிறு பாவாணரும், அவர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார் இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த பாதிப்புகளைவிட இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. சமற்கிருதச் செல்வாக்கு, இந்தி எதிர்ப்பு, வடபுல ஆதிக்கம், ஆங்கிலவழிக்கல்வி, ஈழத்தமிழர் போராட்டம் என்று பலமுனைகளில் தமிழும், தமிழர்களும் தாக்கப்பட்டனர். இவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டவர்களுள் பாவலரே...

30 நாளில் வாழ்க்கையை மாற்ற முடியுமா?

Image
*ஒவ்வொரு உறவும்                                  ஒரு கண்ணாடிக் குவளையைப் போன்றது. குவளையின் எந்தப்  பக்கத்தில் ஒரு  சிறு  கீறல் விழுந்தாலும் அது குவளையின் மறு பக்கத்திலும் பிரதிபலிக்கும். எனவே, எப்போதுமே எல்லோருடைய உணர்வுகளையும் அக்கறையோடும், மிகுந்த மரியாதையோடும் நாம் கையாள வேண்டும்*   *காலப்போக்கிலே,                                   கால ஓட்டத்திலே,                                  நமது வாழ்க்கையிலே                                 நாம் மறந்து போகக்கூடிய சில மனிதர்கள் இருப்பார்கள். ஆனால், சிலர் நம்மோடு இருக்கும்போது காலம், நேரத்தை எல்லாம் நாம் மறந்துவிடுவோம்.  அவர்களை ஒருபோதும்  நாம் இழந்துவிடவே கூடாத...

கண்ணாடி குவளை

Image
*ஒவ்வொரு உறவும்                                  ஒரு கண்ணாடிக் குவளையைப் போன்றது. குவளையின் எந்தப்  பக்கத்தில் ஒரு  சிறு  கீறல் விழுந்தாலும் அது குவளையின் மறு பக்கத்திலும் பிரதிபலிக்கும். எனவே, எப்போதுமே எல்லோருடைய உணர்வுகளையும் அக்கறையோடும், மிகுந்த மரியாதையோடும் நாம் கையாள வேண்டும்*   *காலப்போக்கிலே,                                   கால ஓட்டத்திலே,                                  நமது வாழ்க்கையிலே                                 நாம் மறந்து போகக்கூடிய சில மனிதர்கள் இருப்பார்கள். ஆனால், சிலர் நம்மோடு இருக்கும்போது காலம், நேரத்தை எல்லாம் நாம் மறந்துவிடுவோம்.  அவர்களை ஒருபோதும்  நாம் இழந்துவிடவே கூடாத...

கண்ணாடி தத்துவம்

Image
11.06.2024 செவ்வாய்க்கிழமை இனிய காலை வணக்கம் இன்றைய சிந்தனை ……………………………………      கண்ணாடி தத்துவம் …………………………………… ஒரு வயதானவர் அடிக்கடி  கண்ணாடியைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…! ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை... பெரியவரை நெருங்கினான். “ஐயா…!” “என்ன தம்பி?” “உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?” “ஆமாம்!” “அதில் என்ன தெரிகிறது?”  “நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!” “அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?” “ஆமாம்!” “பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” பெரியவர் புன்னகைத்தார். “சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!” “பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?” “அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்” “எனக்கு ஒன்றும் புரியவில்லை!” “ஒருவர் மற்றவரின் கு...

திறப்பு

Image
ராணிப்பேட்டைமாவட்டம்        சோளிங்கர் கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி 19 லட்சம் மதிப்பிலான வகுப்பறைகள் திற்டக்கப்பட்டது  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று  வருகின்றனர். கூடுதலாக பள்ளி கட்டிடம் வேண்டுமென பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்று அரசு கடந்த ஆண்டு 19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி முடித்தது .தற்போது பள்ளி துவக்கம் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய கட்டிடம் திறப்பு விழா    ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் பயண்பாட்டிற்க்கு கொண்டு வந்தார் மாணவ மாணவிகள் பொதுமக்கள் இனிப்பு வழங்கினார்கள். மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மனு

Image
ராணிப்பேட்டைமாவட்டம்       சோளிங்கர் அருகே சமத்துவபுரம் பகுதி மக்கள் வீட்டுமனைபட்டா கோட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்     ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் சமத்துவபுரம்  பகுதியில்  23 ஆண்டுகளாக 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதில் 20 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதாகவும்  மேலும் 50 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா  வழங்க கோரி  50-க்கும் மேற்பட்டோர்  சோளிங்கர் வட்டாட்சியர் ஸ்ரீதேவியை  நேரில் சந்தித்து  மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர்  மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

அஞ்சலி

Image
வேலூர்         வேலூர் அருகே தீவிரவாத தாக்குதலில் 1998 ஆம் ஆண்டு பலியான வீரரின் நினைவு தினமான இன்று சி.ஆர் பி.எப் டி.ஐஜி நேரில் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் இந்த ஆண்டு முதல் தீவிரவாத தாக்குதலில் பலியாகும் வீரர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சலி செலுத்தும் திட்டம் துவக்கம்  ___________________________________________      வேலூர்மாவட்டம்,பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவர் 1994 ஆம் ஆண்டு சி.ஆர் பி.எப் பாதுகாப்பு படையில் சேர்ந்தார் 1998 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் ஆந்திர பிரதேசத்தில் பாசாரவில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு வெடிப்பு செய்து கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் துணிச்சலாக எதிரியை தாக்கி வீரமரணமடைந்தார்கள் 8 பேர் அதில் வேலுவும் ஒருவர் சி.ஆ.ர்பி.எப்பில் தேச பக்தியை எடுத்து காட்டும் வண்ணம் மத்திய அரசு இந்த மார் ச் மாதம் முதல் இது  போன்று பாதுகாப்பு பணியின் போது தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் வீடுகளுக்கு அவர் உயிர் தியாகம் செய்து வீரமரணமடைந்த நினைவு நாளில் நேரில் சென்று அதிகாரிகள் படத்தை அலங்கரித...

நடல்

Image
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் பொய்கை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சியில் கன்னிகாபுர ஏரி கரையோரம் 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, அதன் தொடக்கமாக 200 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. அடுத்தகட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகள் நன்கு வளரும் வரை 100 நாள் பணியாளர்கள் கொண்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் என ஊராட்சி தலைவர் திரு.இளங்கோ அவர்கள் உறுதி அளித்தார். #vellore #tree #plantation  - Dinesh Saravanan

மரக்கன்று நடல்

Image
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் பொய்கை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சியில் கன்னிகாபுர ஏரி கரையோரம் 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, அதன் தொடக்கமாக 200 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. அடுத்தகட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகள் நன்கு வளரும் வரை 100 நாள் பணியாளர்கள் கொண்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் என ஊராட்சி தலைவர் திரு.இளங்கோ அவர்கள் உறுதி அளித்தார். #vellore #tree #plantation  - Dinesh Saravanan

முடிவு

Image
இனிய காலை வணக்கம்  நட்பூக்களே      உலகம் என்பது ஓடும் நீரோடை போலத் தான், எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நமக்காக அது காத்திருக்காது, நாம் தான் நமக்கான வழியைக் கண்டறிந்து அதில் பயணம் செய்ய வேண்டும். நாம் வாழும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் காரணிகள், நேர்மையான குணம், தயாள மனம் எதையும் செய்யத் தயாராகும் மனோபலம், வாழ்க்கை நம்மிடம் தந்திருப்பது வெற்றுக் காகிதங்கள் மட்டுமே, அவற்றை வரைவதா, எழுதுவதா, கிறுக்குவதா, கசக்குவதா, கிழிப்பதா, *முடிவு நம் கையில் தான் உள்ளது.*

கண்ணன் அழுதான்

Image
#மகாபாரதத்தில் #கண்ணன்_அழுத_இடமும்  #கர்ணனின்_ஈகை_குணமும் :  *உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.  அஃது எந்த இடம் தெரியுமா?  *கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *அவனைக் காத்து நின்றது.*   *அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .   *கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.  அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.   *கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை.   *கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.*   *கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.*   *கர்ணன் கேட்டதோ இல்லை என்ற...

தங்கம்

Image
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை.

தாயே

Image
சரித்திரப் புகழோடு சந்தனப்பெட்டியில்  உறங்கச் சென்றது #ஜெ_ஜெயலலிதா எனும் சகாப்தம்.. எனினும் காலமெல்லாம் வாழ்ந்திருக்கும் உங்கள் நாமம் தாயே #தாயின் #2742ஆம் நாள் #நினைவுதினம் இன்று! #நினைவுகளுடன் *சூளை கே எம் ஆனந்தன் வேலூர் ❤️*

கைது

Image
திருப்பத்தூர்மாவட்டம்   வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது.11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகன தணிக்கையின் போது நகர போலீஸார் நடவடிக்கை.  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்து வந்தது.இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர போலீசார் வாணியம்பாடி - பெருமாள்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் தாலுக்கா அலுவலகம் பின்புறம், முனீஸ்வரன் கோயில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்  அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தும்பேரி பகுதியை சேர்ந்த அய்யப்பன்(28), சிக்னாங் குப்பம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதன் பேரில்,  பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈ...

ரத்த தான முகாம்

Image
வேலூர்  வேலூரில் மூலிகைக்கண்காட்சி மற்றும் மருத்துவமுகாம் ரத்ததான முகாம் திரளானோர் பங்கேற்றனர்  _________________________________________________________      வேலூர்மாவட்டம்,வேலூரில்  அப்பாஜி சுவாமிகள் தலைமையில் இலவச சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவ முகாம் மற்றும் மூலிக்கைக்கண்காட்சி மற்றும் ரத்ததான முகாமினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் துவங்கி வைத்தார் இதில் சித்த மருத்துவ முகாம் டாக்டர் பாஸ்கரன் தலைமையிலும் ஆங்கிலம் மருத்துவ முகாம் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் தலைமையிலும் நடைபெற்றது இதே போன்று மூலிகைக்கண்காட்சி பாரம்பரிய மருத்துவ சங்கத்தை சேர்ந்த செல்வம் தலைமையிலும் நடைபெற்றது இதில் அரிய வகை மூலிகைகள் அதன் பயன்கள் தீர்க்கும் நோய்கள் குறித்தும் இம்முகாமில் எடுத்துரைக்கப்பட்டது ரத்ததான முகாமும் நடைபெற்றது இதில் திரளானோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்

ஒப்படைப்பு

Image
வேலூர்     வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் களவு போன மற்றும் காணாமல் போன 250 செல் போன் களை ரூ.50 லட்சம் மதிப்புள்ளவைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார் - கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காவல்துறை சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதானவைகளை சரி செய்ய தொழில் நுட குழு அமைக்கப்பட்டுள்ளது  இந்த ஆண்டு மட்டும் 1. 74 கோடி மதிப்புள்ள 922 செல் போன் கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி  வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்   களவு மற்றும் காணாமல் போன செல்போன் கள் சி டிராக்கர் மூலமும் மற்றும்  சியர் போர்டல் மூலமும் 250 செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டது இவைகளின் மதிப்பு ரூ.50 ..20 லட்சம் மதிப்புள்ள செல்போன் கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்   இதுவரையில் ஓராண்டில் 922 செல்போன் கள் ரூ.1.  74 கோடி மதிப்பிலானவை உரியவ...

அவதி

Image
திருப்பத்தூர்மாவட்டம்      வாணியம்பாடி அருகே பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் கூலித் தொழிலாளியின் வீடு பாதியில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்ஜன்னல் கதவு மற்றும் மற்றும் கட்டுமான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கட்டித் தரப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததால் நான்கு ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்கப்படாமல் குடிசை வீட்டில் மழைக் காலங்களில் அவதிப்பட்டு வரும் கூலித்தொழிலாளியின் குடும்பம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர்  பகுதியை சேர்ந்தவர் ரபிக் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் . வசதி இல்லாமல் ஓலை குடிசை வீட்டில்  வாழ்ந்து வரும் ரபிக் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணை வந்ததாகவும், வீடு கட்டும் திட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் பணம் கேட்டு கொடுக்காததால் வீடு  கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த இ...

விபத்து

Image
திருப்பத்தூர்மாவட்டம்      ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய லாரியில் சிக்கிய லாரி ஓட்டுநரை உயிரிழந்த நிலையில்  மீட்டனர்  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் இருந்து விடியற்காலையில் மினி லாரி மூலம் கொத்தமல்லி லோடு ஏற்றிக்கொண்டு வேலூர் சென்று இறக்கி விட்டு மீண்டும் திரும்பிய போது  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி தலைகுப்புற  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது விபத்தில் லாரி இடிபாடுக்குள்  சிக்கிய லாரி ஓட்டுநர் சூளகிரி பகுதியை சேர்ந்த சாதிக் என்பவரை  தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறை  மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு மீட்க முடியாமல் கிரேன் ...

உடைகள் தானம்

Image
*அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*       06.06.24 அமாவாசை அன்று நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக நன்கு படிக்கக்கூடிய வசதி குறைந்த பெண் பிள்ளைகளுக்கு உடைகள்  தானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.         🌷நன்றி🌷

அனுமதி பெறுவது அவசியம்

Image
*🔹🔸ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்* ▪️. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  ▪️. அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *▪️. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.*                        *🌹✍️*

காலம் ஒரு புதிர்

Image
*கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்....!*  *இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது...* *இவர்கள் இருவரும் இணைந்து யாரைக்  கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்..! என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது...* *சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார்*  *எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ ....! அதே சந்திரபாபுக்காக.....! அவரின் ஆதரவு வேண்டும்...! அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்....! எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை...* *காலம்தான் எத்தனை விசித்திரமானது...???* *ஆதலால் "நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது" என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் ...

ஒன்றுபடு

Image
*தொடர் தோல்வி.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு* அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதரவு

Image
*🔹🔸காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த சங்லி தொகுதி எம்.பி. விஷால் பாட்டில்* - *இந்தியா கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.* ▪️. மஹாராஷ்டிரா: சங்லி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டில், கார்கேவை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். *▪️. இதன் மூலம் 'இந்தியா' கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.*

கனமழை மரத்தடியில் தங்காதீர்

Image
கனமழையால் மின்னல் ஏற்படலாம்.  நீங்கள் வெளியில் இருந்தால், மரத்தடியில் தங்க வேண்டாம்.  உங்கள் மொபைலை உடனடியாக அணைக்கவும் அல்லது விமானப் பயன்முறையில் வைக்கவும்!  பாக்கெட்டில் இருந்த மொபைல் போன்கள் ஆண்டெனா நிலையில் இருப்பதை அறியாமல், பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மரத்தடியில் தஞ்சம் அடைந்தனர்.  இதைப் பற்றி தெரியாதவர்களின் உயிரைக் காப்பாற்ற வீடியோவைப் பகிரவும்!  நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு இடியுடன் கூடிய மழையும் பத்தாயிரம் வோல்ட் மின்சாரம்⚡⚡⚡.