மறைவு
பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக காலமானார் வேலுார், ஜன. 1,500 படங்களுக்கு சினிமா சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தினம் தன் 95 வது வயதில் காலமானார். வேலுார் மாவட்டம், குடியாத்தம், தர்ணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் கே.கே. ரத்தினம். இவர் சினிமா சண்டை பயிற்சி இயக்குனராகியதால் ஜூடோ ரத்தினம் என அழைக்கப்பட்டார். 1959 ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். 1966 ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்திலிருந்து சண்டை பயிற்சி இயக்குனரானார். 1980 ம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற படத்தை தயாரித்தார். 1,500 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சங்...