மாற்றம்
4 மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் வேலுார் புகார்களின் எதிரொலியாக வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி இன்று பிறப்பித்தார். அன்படி திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டராகவும், நாட்றம்பள்ளி சாந்தி வாணியம்பாடி மகளிருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கலால் இன்ஸ்பெக்டர் மலர் திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி ஸ்டேஷனுக்கும், வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆம்பூர் மகளிருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி காட்பாடி மகளிர் ஸ்டேஷனுக்கும், திருவண்ணமலை மாவட்டம், ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் திருவண்ணாமலை மாவட்டம், கடலாடிக்கும், இங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வேலுார் மகளிர் போலீஸ் ...