Posts

Showing posts from September, 2022

நல்ல நல்ல நேரம்

Image
🚩 *காலை தரிசனம்-------------!* *நவராத்திரி 02 ஆம் நாள் தரிசனம் !!* சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 10 ஆம்  நாள் ! செப்டம்பர் மாதம் : 27 ஆம் தேதி : (27-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-10மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-08 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : துவிதியை ! பிரதமை.. பின் இரவு 03-30 மணி வரை அதன் பிறகு திரிதியை !! இன்றைய நட்சத்திரம் :  அஸ்தம்... காலை 08-00 மணி வரை ! அதன்பிறகு சித்திரை !! இன்று சம நோக்கு நாள் ! யோகம் :    சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! குளிகை :   மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  08-00 மணி முதல் 09-00 மணி வரை ! மதியம் :  12-00 மணி முதல் 01-00 மணி வரை ! இரவு : 07-00 மணி முதல் 08-00 மணி வரை ! இன்றைய சுப ஓர...

தீ

Image
ஆம்பூர் அருகே ஷூ கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஆம்பூர், செப்.  ஆம்பூர் அருகே, ஷூ கம்பெனியில்  ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்னவரிகம் பகுதியில் பரிதா ஷூ கம்பெனிக்கு சொந்தமான ஜாப் ஒர்க்ஸ் பார்ஸ்ன் என்ற காலனி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இரவு 6:00 மணிக்கு இங்கு வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு தொழிற்சாலை திடிரென தீ பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷூ தயாரிக்கும் இயந்திரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருந்த ஷூ க்கள், தோல் பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஆம்பூர் தீயணைக்கும் துறையினர் தீயை அணைக்க முயன்று வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது உம்மராபாத் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது தொழிலாளர்கள்...

கைது அதிர்ச்சி

Image
தமிழகத்தில் மத அடிப்படைவாதிகள் 11 பேர் கைது அதிர்ச்சி அளிக்கிறது நாடு முழுவதும் தேசிய புலனாய்வு துறை  NIA மற்றும் அமலாக்கத்துறை சோதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்திய சோதனைகளில் தேச விரோத செயல்களில் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் கம்ப்யூட்டர்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என் ஐ ஏ மற்றும் அமுலாக்கத்துறை அறிவிப்பு நாடு முழுவதும் நடத்திய சோதனையில் 45 பேர் கைது கேரளத்தில் 19 பேரும் தமிழகத்தில் 11 பேரும் கர்நாடகத்தில் ஏழு பேரும் மீதமுள்ள எட்டு பேர் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படை வாதம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதா ? என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுகிறதா மீண்டும் 1998 -99 நிகழ்வுகள் நடைபெற திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்று பொதுமக்கள் அஞ்சுகி...

கண்டிப்பு

Image
தமிழகத்தில் மத அடிப்படைவாதிகளின் வன்முறைகள் வன்மையாக கண்டிக்கிறோம் தமிழகம் முழுவதும் என் ஐ ஏ சோதனை எதிரொலியாக பாஜக மற்றும் இந்து அமைப்பு பொறுப்பாளர்களின் வீடுகள் கடைகள் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு கைகட்டி வாய் புத்தி வேடிக்கை பார்க்கும் தமிழக திமுக அரசு வன்மையாக கண்டிக்கத்தக்கது வன்முறையில் ஈடுபட்ட ஈடுபட்டுக் கொண்டுள்ள சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளால் பிரச்சனைகளை திசைதிருப்ப இது போல வன்முறைகள் தூண்டி விடப்படுகிறதா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இதற்கு தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்  தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் பரப்புரை கழகம் என்ற அமைப்பை தொடங்கி வைத்து பேசும்பொழுது மொழியால் இணைந்தவர்களை மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள் அது நடக்காது என்று பேசுகிறார்கள் பாரத தேச அளவில் கலாச்சார பண்பாட்டால் சனாதான தர்மத்தால் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களை கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் மொழியை காப்பதாக சொல...

புகார்

வேலூர் வள்ளலார் பூங்கா பாரமரிப்பின்றி கிடக்கிறது.. தினசரி வள்ளலார் பூங்காவில்  இளைஞர்கள் முதல் வயதானோர் வரை நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். குழந்தைகள் சிலம்பம் பயிற்சி செய்கின்றனர். பெரியவரகள் volly Ball,shuttle  ஆடுகின்றனர். வள்ளலார் பகுதி மக்களுக்கு  இந்தப்பூங்கா மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் பூங்கா சரிவர பாரமரிப்பதில்லை. செடிகள் பாரமரிப்பின்றி உள்ளது. பூங்காவிற்க்குள் குப்பை உள்ளது. மரத்தடியில் உள்ள உட்காரும் மேடைகள் சுத்தம் செய்யாமல் உள்ளது. செடிகள் புதர்கள் போல் வளர்ந்துள்ளது. மேற்கண்ட பாரமரிப்பு பணிகளை உடனடியாக சரி செய்திட கேட்டுக்கொள்கிறோம். ஏ.நாராயணன். சிபிஎம் வேலூர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்*  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த புகாரில் சோளிங்கர் காவல்நிலைய தலைமை காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய தலைமை காவலர் ரமேஷ், அரக்கோணம் நகர காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி டாக்டர் தீபா சத்யன் உத்தரவு.

திருட்டு

Image
இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(47) மாட்டு வண்டி ஓட்டிவரும் இவர் இன்று காலை வெளியில் சென்றிருந்த போது  வீட்டில் யாருமில்லாத நேரத்தில்  மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து ராஜாமணி வைத்திருந்த்தாக்க்கூறப்படும. ரொக்கப்பணம் ரூ50ஆயிரம்10 சவரன் நகை கொள்ளையிடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து ராஜாமணி அளித்தப்புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்

தேடல்

வாலாஜாவில்  சகோதரியின் கணவனை    கத்தியால் வெட்டிய மைத்துனர் தலைமறைவு  போலீஸார் வலைவீச்சு  இராணிப்பேட்டை, செப் வாலாஜாவில் கணவன் மனைவி தகாராறு காரணமாக  அக்கா கணவரை  கத்தியால் வெட்டிதலைமறைவான மைத்துனரை போலீஸார் தேடிவருகின்றனர்.. இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சாலத்தெருவைச் சேர்ந்த அசோகன்32,ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும்  இவருக்கும் அதே தெருவைச்சேர்ந்த விஜயலஷ்மிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமாணமாக கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.  இதனால் மனம் வெறுத்து அசோகன்   தன்னுடன் வாழ  வருமாறு அடிக்கடி  விஜயலஷ்மியிடம் வற்புறுத்தியதாகவும்  அதற்கு அவர் சேர்ந்து வாழ   மறுத்து  வந்ததாகவும்  இதனால் இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று மாலை  அசோகன்  விஜயலஷ்மியிடம்  சென்று   வழக்கம் போல அழைத்ததாகவும் அப்போது இருவருக்குமிடையே   ஏற்பட்ட

கத்திகுத்து

வாலாஜாவில்  சகோதரியின் கணவனை    கத்தியால் வெட்டிய மைத்துனர் தலைமறைவு  போலீஸார் வலைவீச்சு  இராணிப்பேட்டை, செப் வாலாஜாவில் கணவன் மனைவி தகாராறு காரணமாக  அக்கா கணவரை  கத்தியால் வெட்டிதலைமறைவான மைத்துனரை போலீஸார் தேடிவருகின்றனர்.. இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சாலத்தெருவைச் சேர்ந்த அசோகன்32,ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும்  இவருக்கும் அதே தெருவைச்சேர்ந்த விஜயலஷ்மிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமாணமாக கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.  இதனால் மனம் வெறுத்து அசோகன்   தன்னுடன் வாழ  வருமாறு அடிக்கடி  விஜயலஷ்மியிடம் வற்புறுத்தியதாகவும்  அதற்கு அவர் சேர்ந்து வாழ   மறுத்து  வந்ததாகவும்  இதனால் இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று மாலை  அசோகன்  விஜயலஷ்மியிடம்  சென்று   அழைத்ததில்  இருவருக்குமிடையே  வழக்கம்போல தகராறு   ஏற்பட்டபோது அருகிலிருந்த விஜயலஷ்மியின் தம்பி விஜயகுமார்( எ) மணி(...

கைது

Image
இராணிப்பேட்டையருகே கள்ளத்தனமாக  மதுபாட்டில் விற்றவர் கைது   காவல் போலீஸார் நடவடிக்கை. இராணிப்பேட்டை ,செப் இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த நவலாக் புளியங்கன்னில்  வீட்டில் வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்ற இளைஞரை காவல் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே உள்ள நவலாக் புளியங்கன்னுவில்    நீண்ட நாட்களாக மதுபாட்டில்களை   வீட்டில் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக  விற்கப்படுவதாக  பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பிவந்தனர்   . இந்நிலையில் நேற்று   மாவட்ட காவல்பிரிவு உதவி ஆணையர் சேகர்மற்றும்  வாலாஜா காவல் போலீஸ்எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் . நேற்றுகாலை மேற்படி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது  விஜயகுமார்(44 ) தனது  வீட்டில்  மதுபாட்டில்களை பதுக்கிவைத்து  கள்ளத்தனமாக விற்பனை செய்வதையறிந்தனர் .உடனே  அங்கு சென்ற உதவிஆணையர் சேகர்மற்றும் காவல் போலீஸார் மதுபாட்டில்     விற்பனையில்  ஈடுபட்டிருந்த விஜயகுமாரை கையும் களவுமாக ...

கைது

Image
*3 புல்லட், ஒரு கார் திருடிய வேலூர் இளைஞர்கள் இரண்டு பேரை அரக்கோணம் போலீசார் கைது செய்தனர்* ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்துக்குட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போனது.  வாகனங்களை பறி கொடுத்தவர்கள் காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி பிரபு உத்தரவின் பேரில் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல் , சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் திருட்டு புல்லட்டை ஒருவரிடம்   ரூபாய் 15 ஆயிரத்திற்கு இரு வாலிபர்கள் விற்பனை செய்ய முயன்றனர். இந்த தகவல் அரக்கோணம் தாலுகா போலீசருக்கு கிடைத்தது . போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு குளக்கரை தெருவை சேர்ந்த ஓம் பிரகாஷ் வயது 25 மற்றும் காட்பாடி பாரதிநகரை சேர்ந்த நிதிஷ்குமார் வயது 19 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  அவ...

தீ விபத்து

Image
ஆம்பூர் அருகே சின்னவரிகம் ( பரிதா ஷூ கம்பெனியின் ஜாப் ஒர்க்ஸ் பார்ஸ்ன்) தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள ஷூ தயாரிக்கும் இயந்திரம் மற்றும் பெரும்பாலானவை எறிந்து நாசம் ஆம்பூர் தீ அனைப்பு துறைகளையும் உமராபாத் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து.சென்ற

விழா

Image

தீ

Image
ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் இயங்கி வரும் பரிதா ஷீஸ் தனியார் காலனி தொழிற்சாலையின்  குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இதனால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் காலணிகள் எரிந்து நாசம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்ட  உதிரி பாகங்களும் தீயில் கருகின மளமளவென பரவிய தீயினை அனைக்க ஆம்பூர் நாட்றம்பள்ளி குடியாத்தம் பேர்ணாம்பட்டு வாணியம்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்க  போராடி வருகின்றனர்

சேகாரம்

Image
ஸ்ரீ பகளாமுகீ த்யானம்  கம்பீராம்ஸ மதோன்மத்தாம்  தப்த காஞ்ஜன ஸந்நிபாம் ஸதுர்புஜாம் த்ரிநயனாம் கமலாஸன ஸம்ஸ்திதாம் பீதாம்பரதராம் ஸாந்த்ர த்ருடபீன பயோதராம் ஹேமகுண்டல ஸம்பூஷாம் பீத சந்த்ரார்த்த சேகராம் ! , பொருள் :  கம்பீரமான தோற்றம் அளிப்பவளும் அம்ருதக் கடலின் நடுவில் மணிமண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்மாசனத்தில் அல்லது தாமரைமலரில் வீற்றிருப்பவளும் உருக்கிவிடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியை உடையவளும் மூன்று கண்களை உடையவளும் தங்க குண்டலங்களை அணிந்தவளும் பிறைச்சந்திரனை தன் சிரசில் சூடியிருப்பவளும் மேல்நோக்கிய ஜடாபாரம் உடையவளும் பயம் அளிக்கும் முகத்தைக் கொண்டவளாகவும் சௌம்ய முகத்தைக் கொண்டவளாகவும் காட்சியளிப்பவளும் தெரிக்கும் புருவத்தை உடையவளும் ஒரு கையில் கதாயுதத்தையும் மறு கையில் எதிரியின் நாக்கினைக் கொண்ட இரு கரத்தினளாகவும் வஜ்ரம் ; கதை ; நாக்கு ; அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவளும் சம்பகவனம் போன்று திகழ்பவளும் வெண்மயான சந்திரனைப் போன்று பிரகாசம் வாய்ந்த முகத்தை உடையவளும் ஆகிய பகளாமுகி தேவியை வணங்குகிறேன்!  ,

ஆய்வு

Image
🔸 *திருப்பத்தூர் வட்டம், பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள மக்கள் கணினி மையத்தை, திருப்பத்தூர் வட்டாட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சான்றுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகை ரூபாய் 60 ஐ விட கூடுதலாக  கட்டணம்  வசூல் செய்ததால், இ- சேவை மையத்திற்கு வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

சீல்

Image
திருப்பத்தூர் அருகே பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவாய் சான்றிதழ் வழங்கிய மக்கள் இ-சேவை மையத்துக்கு வருவாய் துறையினர் நேற்று சீல் வைத்தனர். அரசு இ-சேவை மையங்களில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பவற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், திருப்பத்தூர் வட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான இ-சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் இ- சேவை மையங்களில் ஆய்வு நடத்தி விதிமீறி செயல்படும் இ-சேவை மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். அதன்படி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சி...

பலி

Image
அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரு பச்சிளம் அடுத்தடுத்து உயிரிழப்பு திருப்பத்துார்,செப் திருப்பத்துார் அருகே செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண்(28). கட்டட தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு  ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கர்ப்பம் தரித்த புவனேஸ்வரிக்கு  ஒரு மாதத்துக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. அதன்பின் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதால், குறைந்தது ஒரு மாதமாவது தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் இருக்க வேண்டுமென டாக்டர்கள் குழந்தையின் பெற்றோரிடம் கூறினர். இதனையடுத்து டாக்டர்கள் ஆலோசனைப்படி ஒரு மாதம் முடிந்ததும் குழந்தைகளை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன் இரண்டு குழந்தைகளுக்கும் திடீரென மூச்சு திணறு ஏற்பட்டது. உடனே குழந்தைகளை மீட்டு மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில...

கைது

Image
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது ஜோலார்பேட்டை,செப் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுமி இரு நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பார்சம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன்(22). என்பவர், அச்சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

ஆந்தை மீட்பு

Image
அரிய வகை ஆந்தை மீட்பு திருப்பத்துார்,செப் திருப்பத்துார் காமாட்சியம்மன் கோயில் தெருவில், அரிய வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் கிடப்பதாக வந்த தகவலின் பேரில், திருப்பத்துார் வன சரக அலுவலர் பிரபு மற்றும் வன குழுவினர் அங்கு சென்று பறக்க முடியாமல் தவித்த அரிய வகை ஆந்தையை மீட்டு மாம்பாக்கம் காப்பு காட்டில் விட்டனர். மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை, தமிழகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வாழக்கூடியது.மேலும் ஆந்தைக்கு பகலில் பார்வை திறன் இல்லாத காரணத்தினால். பறக்க முடியாமல் ஒரே இடத்தில் தவித்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அரிய வகை ஆந்தை மீட்டு காப்பு காட்டில் விடப்பட்டது. அது தன் இருப்பிடம் நோக்கி சென்றுவிடுமென  வனத்துறையினர் தெரிவித்தனர். 

புறக்கணிப்பு

திருப்பத்துார் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் விளையாட்டு துறை திருப்பத்துார்,செப். திருப்பத்துார் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு துறை புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தடகளம், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தி அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், திருப்பத்துார் மாவட்டத்தில் வட்ட மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் முறைப்படி நடத்துவதில்லை.மேலும் இப்போட்டிகளுக்கு முறையான பயிற்சிகள் எடுக்க மாணவர்களுக்கு எந்தவித அவகாசமும் கொடுக்காமல், ஓரிரு நாட்கள் முன்னதாக அவசரமாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்துகின்றனர். அதற்கான அறி...

பலி

Image
மின்சாரம் தாக்கி ப்ளஸ்2 மாணவி பலி; வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய போது பரிதாபம் ஜோலார்பேட்டை,செப் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் பெருமாள் சாமி கோயில் வட்டத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி தேவி. இவர்களின் மகள் ரத்தினா தேவி(17).இவர், தாமலேரி முத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். மேலும், ரத்தினா தேவியின் பெற்றோர் பாண்டிச்சேரியில் கட்டட தொழிலாளியாக உள்ளனர்.இதனால் ரத்தினதேவி தனது பாட்டி பானுமதியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், ரத்தினா தேவி நேற்று மாலை குளிப்பதற்காக, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.இதில் ரத்தினாதேவி துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது பாட்டி பானுமதி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரத்தினா தேவியின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருது

Image
வேலூர் அக்சீலியம் மகளிர் கல்லூரியில் நடந்த NSS நாள் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதை மாண்புமிகு சிறைத்துறை DIG திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவிகளிடம் சமூக பங்களிப்பு குறித்த எனது அனுபவங்களை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கல்லூரி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்..! - Dinesh Saravanan #vellore #service

கூட்டம்

Image
காட்பாடியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காட்பாடி பவானி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பின் வடக்கு மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார் கூட்டத்தின் முன்னிலையாக யாதவர் மகாசபையின் மாநில செயலாளர் சேது மாதவன் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் ஏகாம்பரம் முதலியார் சங்க பொறுப்பாளர் பிரகாஷ் போயர் பேரவை மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் நாயுடு மகாஜன சங்க பொறுப்பாளர் சடகோபன் பிள்ளைமார் சமுதாய நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி சலவைத் தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய இவர்களின் வாழ்வாதாரமான கல்வி வேலை வாய்ப்பு ஆகிய வெற்றி பெற  மிகவும் தேவையான இட ஒதுக்கீட்டை முழுமையாக  பெற்றிட சமுதாய மக்களை ஒன்றிணைக்கவும் இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றி உணர்வை அனைவரும் உணரும்படி செய்யவும் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்ய வேண்டுமென ...

காலை தரிசனம்

Image
🚩 *காலை தரிசனம்-------------!* *நவராத்திரி முதல் நாள் தரிசனம் !!* சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 09 ஆம்  நாள் ! செப்டம்பர் மாதம் : 26 ஆம் தேதி : (26-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-10 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : பிரதமை ! பிரதமை.. பின் இரவு 04-10 மணி வரை அதன் பிறகு துவிதியை !! இன்றைய நட்சத்திரம் :  உத்திரம்... காலை 07-30 மணி வரை ! அதன்பிறகு அஸ்தம் !! இன்று மேல் நோக்கு நாள் ! யோகம் :    சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! எமகண்டம் :  காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! சூலம் : கிழக்கு ! பரிகாரம் : தயிர் !! கரணம் :  காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை ! நல்ல நேரம் :  மதியம் :  12-00 மணி முதல் 02-00 மணி வரை ! 03-00 மணி முதல் 04-00 மணி வரை ! மாலை :  06-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சுப ஓரைகள் : புதன...

மீட்பு

சினிமாவில் நடிக்க ஆசையால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள் மீட்பு வேலுார் வேலுரில், சினிமாவில் நடிக்க ஆசையால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டனர். வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் இன்று காலை சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகளை போலீசார் மீட்டு வேலுார் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்டைத்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பத்துார் மாட்டத்தை சேர்ந்தவர்கள், பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர், சினிமாவில் நடிக்க ஆசையால் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்னை கோடம்பாக்கத்திற்கு சென்று சில ஸ்டியோக்களில் வாய்ப்பு கேட்டுள்ளனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்ததால் அவர்கள் பஸ் மூலம்  வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நல்ல நேரம்

Image
🚩 *காலை தரிசனம்-------------!* *பிரதோஷ தின தரிசனம் !!* "பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக.. அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக.. சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக.. எந்தன் சந்ததியே,உந்தனுக்கு அடிபணிய.. இறைவா. . .!!" வெள்ளிக்கிழமை ! சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 06 ஆம்  நாள் ! செப்டம்பர் மாதம் : 23 ஆம் தேதி : (23-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-13 மணி அளவில் ! இன்றைய திதி : தேய்பிறை : திரயோதசி ! திரயோதசி பின் இரவு 03-00 மணி வரை அதன் பிறகு சதுர்த்தசி !! இன்றைய நட்சத்திரம் :  மகம் ! மகம்.. பின் இரவு 05-20 மணி வரை ! அதன் பிறகு பூரம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! யோகம் :    நன்றாக இல்லை !! சந்திராஷ்டமம் : இன்று மகர ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் :  மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் :  மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல ந...

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !*  *ஸர்வ ஏகாதசி தரிசனம் !!  புதன்கிழமை ! சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 04 ஆம்  நாள் ! செப்டம்பர் மாதம் : 21 ஆம் தேதி : (21-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-13 மணி அளவில் ! இன்றைய திதி : தேய்பிறை : ஏகாதசி ! ஏகாதசி... பின் இரவு 12-15 மணி வரை அதன் பிறகு  துவாதசி ! இன்றைய நட்சத்திரம் :  பூசம் ! பூசம்.. பின் இரவு 01-15 மணி வரை ! அதன் பிறகு ஆயில்யம் !! இன்று மேல் நோக்கு நாள் ! யோகம் :    சித்தயோகம் !  சந்திராஷ்டமம் : இன்று  தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 06-00 மணி முதல் 07-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  06-00 மணி முதல் 07-00 மணி வரை ! 09-00 மணி முதல் 10-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 05-00 மண...

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !*  *குருவார தரிசனம் !!*  வியாழக்கிழமை ! சுப கிருது வருடம் : புரட்டாசி மாதம் 05 ஆம்  நாள் ! செப்டம்பர் மாதம் : 22 ஆம் தேதி : (22-09-2022) சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-13 மணி அளவில் ! இன்றைய திதி : தேய்பிறை : துவாதசி ! துவாதசி... பின் இரவு 01-50 மணி வரை அதன் பிறகு திரயோதசி இன்றைய நட்சத்திரம் :  ஆயில்யம் ! ஆயில்யம் பின் இரவு 03-30 மணி வரை ! அதன் பிறகு மகம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! யோகம் :    சித்தயோகம் ! அமிர்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்  !! ராகுகாலம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் :  காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை :   காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் :  மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 08-00 மணி முதல் 09-00 ம...

நல்ல நேரம்

Image
பாலாற்றில் உள்ள ஆக்கரமிப்புக்களை அகற்ற வேண்டும். பாலாற்றின் இரு கரைகளை அளவிட்டு கரைகளில் தடுப்பு சுவர் அமைத்து தோல் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். ஆம்பூர் பகுதியில் பாலாற்றங்கரைகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யாமல் வெளியேற்றுவதால் பாலாறு மாசுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்  குறிப்பிட்டிருந்தனர். அப்போது கோவில் நிலம் ஆக்கரமிப்பு எப்போது அகற்றப்படும் என தலைவர் ஜெய்சங்கர் கேட்டதற்கு, ஆய்வு நடத்திய பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார். ஒவ்வொரு முறை மனு கொடுக்கும் போதும் இப்படித்தான் கூறுகிறீர்கள், ஆக்கரமிப்பு அகற்றும் தேதியை உடனே சொல்ல வேண்டும், தவறினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என ஜெய்சங்கர் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் அவர்களை வெளியேற்றும்படி போலீசாருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். போலீசார் அவர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்ததால் பரபரப்பு

Image
மனு கொடுக்க  வந்தவர்களை சோதனை செய்ததால் பரபரப்பு திருப்பத்துார் திருப்பத்துாரில், மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்ததால் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது. விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுக்க  திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்தனர். கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து சோதனை செய்தனர். எதற்காக இந்த சோதனை என கேட்டதற்கு, பாக்கட்டில் பிளோடு வைத்துள்ளீர்களா என்பதை கண்டறியத்தற்காக என போலீசார் கூறினர். ஆத்திரமடைந்த விஜய பாரத மக்கள் கட்சியினர், நாங்கள் என்ன தற்கொலை செய்து கொள்வதற்காகவா  வருகிறோம், மக்கள் பிரச்சனையை தெரிவிக்கத்தான் வந்திருக்கிறோம், எங்களை சோதனை செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சோதனை செய்யாமலேயே அவர்களை உள்ளே அனுப்பினர். பின் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா விடம் விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஜெய்சங்கர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பத்துார் கோட்டை தெருவிலுள்ள...

தீக்குளிப்பு

Image
வாலிபர் மீது போக்சோ விரக்தியில் தீக்குளிப்பு வாணியம்பாடி திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அண்ணா நகர் சி.எல் காலனி பகுதியை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு (21).கூலி தொழிலாளி.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 13ம் தேதி  திருநாவுக்கரசு சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.பின்னர் சிறுமியின் பெற்றோர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். முன்னதாக திருநாவுக்கரசிடம் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும், சிறுமியை கடத்திய வழக்கில் திருநாவுக்கரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் தனது குடும்பத்தாரை,தன்னையும் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைக்கழிப்பு செய்வதால் விரக்தியடைந்த ...

கம்மல் பறிப்பு

Image
கத்தி முனையில் மூதாட்டி கடத்தி கம்மல் பறிப்பு திருப்பத்துார் திருப்பத்துார் அருகே ஜவ்வாது மலை, புங்கம்பட்டு நாடு பஞ். தகர குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி சேமியம்மாள்(70). காளி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் சேமியம்மாள் தனது மகன்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் புதுார்நாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சேமியம்மாள் சென்றார். அதன்பின் பகல் ஒரு மணியளவில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சேமியம்மாள் தனியாக நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த இருவர் சேமியம்மாளை கத்தி முனையில் தனது பைக்கில் கடத்தி சென்றனர். சிறிது நேரத்தில் மூதாட்டி காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் கொண்ட இரண்டு கம்மல்களை மர்ம நபர்கள்  கத்தியால் காதை அறுத்து கம்மலை பறித்து கொண்டு மூதாட்டியை பைக்கில் இருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த கிராம மக்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மூதாட்டியின் மகன் கோவிந்தசாமி கொடுத்த புகார...

பலி

Image
வேலை தேடி சென்ற வாலிபர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே கன்னட அல்லி கிராமத்தை சேர்ந்தவர் விமல்(38).இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வேலை தேடி செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு அவர் இறந்தார். பின்னர் தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அன்று சென்று ரயிலில் அடிபட்டு இறந்த விமலின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விமல் வேலை கிடைக்காத விரட்டியில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாமதம்

Image
ஏசி காம்பார்ட்மெண்டில் ஜெனரேட்டர் பழுதானதால்  பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம் ஜோலார்பேட்டை சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் வரை தினமும் இயக்கப்படும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் காலை 7.40க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 1.40க்கு பெங்களூர் சென்றடைந்தது. பின்னர் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு வழக்கம்போல் ஜோலார்பேட்டை 5வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது.பின்னர் சிறிது நேரம் கழித்து ரயில் அங்கிருந்து புறப்பட தயாரான போது அந்த ரயிலின் ஏசி கம்பார்ட்மெண்டில் ஏசி வேலை செய்யவில்லை எனக்கூறி பயணிகள் திடீரென ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், பெங்களூரில் இருந்து புறப்படும் போது ஏசி கம்பார்ட்மென்டில் ஏசி வேலை செய்யவில்லை. ஏசி காம்பார்ட்மென்ட் என்பதால் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஏசி காம்பார்ட்மெண்டில் வெளிக்காற்று வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்ப...

தெரியுமா

Image
முதல் இளையோருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அக்.2ம் தேதி நடக்கிறது திருப்பத்துார்,செப்.20− இது குறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் சிவப்பிரகாசம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்துார் மாவட்ட தடகள சங்கம் நடத்தும் முதல் இளையோருக்கான மாவட்ட தடகள போட்டிகள் வரும் அக்.2ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மினி ஸ்டேடியம் மைதானத்தில் நடக்கிறது. எனவே திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெரும் இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 14,16,18 மற்றும் 20 வயது பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் வரும் அக்.13ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பங்கேற்பார்கள். எனவே பள்ளி, கல்லுாரியில் பயிலும் தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெரும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் வயது...

மனு கொடுத்தார் போலீசார் சோதனை வாக்குவாதம்

Image
பாக்கெட்டில் பிளேடு போலீசாரிடம் கொந்தளித்த விஜய பாரத மக்கள் கட்சியினர் திருப்பத்துார்,செப்.20− விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் இந்து அமைப்பினர் கலெக்டரிடம்  அளித்த மனு கூறியிருப்பதாவது, திருப்பத்துார் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெருவில் உள்ள பிரமேஸ்வரர் மற்றும் கஜேந்திர பெருமாள் கோயில்கள் 4ம் நுாற்றாண்டில் கோச்செங்காணன் என்ற அரசனால் கட்டப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம்,இடங்கள் வேற்று மதத்தினரால் ஆக்கிரப்பு செய்தப்பட்டு அதில் வீடுகள், மண்டபங்கள் கட்டி அனுபவித்து வருகின்றனர்.மேலும் கோயில் பிரகாரங்களில் கூட ஆக்கிரமிப்பு உள்ளது. சாமி வீதியுலா வரும் மாட வீதிகளில் கூட இப்போது ஆக்கிரமித்துவிட்டனர். இது குறித்து பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோயில் சொத்துக்களையும், இடங்களையும் மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதே போன்று திருப்பத்துார் மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு நதி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலாற்றை அளவிட்டு நகர பகுதிகளில் கரைகளில் தடுப்பு சுவர்கள் ...