சந்திப்பு
நாள்.09.04.2023 *ஜேக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் சந்திப்பு* --------------------- பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மாண்புமிகு நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்களையும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்த சந்திப்பின் போது ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர கழகத்தின் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான அ.சேகர் வேளாண்மை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இ.ராமன் தம...